என் மலர்
சினிமா செய்திகள்
- ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ளது.

ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்யதுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'விக்ரம்.'
- இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

விக்ரம்
'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விக்ரம் கொண்டாட்டம்
இந்நிலையில் இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் விக்ரம் படக்குழு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் இயக்குனரும் விக்ரம் படத்தின் வசனகர்தாவுமான ரத்ன குமாருக்கு விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, முதல் முறையாக எழுத்தாளராக. மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா. உங்கள் இதயத்திற்காக நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் ஐயா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் என்று பதிவிட்டுள்ளார்.
First time as a Writer 🥺❤️.மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா. For Your Heart you will live l̶o̶n̶g̶e̶r̶FOREVER sir ❤️ Wish you Happy Birthday Sir ❤️. Thank you Dear @Dir_Lokesh @ikamalhaasan sir & this Entire Universe. . ❤️💫Pic courtesy @philoedit#Vikram pic.twitter.com/jDeAopEPTp
— Rathna kumar (@MrRathna) November 7, 2022
- நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும், தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேனை நாயகனாகவும் வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருந்தார்.
- அப்படத்தில் நடித்த விஷ்வக் சேன், அர்ஜுன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும், தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேனை நாயகனாகவும் வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருந்தார். இதனிடையே விஷ்வக் சேனுக்கு தொழில் பக்தி இல்லை என்று குற்றம் சாட்டி அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.

அர்ஜுன்
இதற்கு பதில் அளித்து விஷ்வக் சேன் கூறும்போது, ''என்மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்டதும் இமயமலை சென்று விடலாம் என்று தோன்றியது. அந்த படத்துக்கு நிறைய உழைப்பை கொடுக்க நினைத்தேன். ஆனால் எனக்கும், அர்ஜுனுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. எனக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி கேட்டார்கள்.

விஷ்வக் சேன் - அர்ஜுன்
கதை பற்றி நன்றாக விவாதித்து அதன்பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றேன். எனது ஆலோசனைகளை அவர் கேட்கவில்லை. அதனால்தான் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. அர்ஜுனுக்கு மரியாதை கொடுத்தேன். நானாக படத்தில் இருந்து விலகவில்லை. அவர் நல்ல படம் எடுக்க வேண்டும். அர்ஜுன் என் மீது குற்றம் சுமத்தியதால் எனது குடும்பத்தினரும், நண்பர்களும் வருத்தப்படுகிறார்கள்'' என்றார்.
- இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'.
- இந்த படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிரைவர் ஜமுனா
'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'டிரைவர் ஜமுனா' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "நான் கல்லூரி படிக்கும் போது என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

டிரைவர் ஜமுனா படக்குழு
ஒரு கட்டத்திற்கு மேல் அவர் என் பக்கத்தில் வந்து என் மீது கை வைத்தார். அப்போது பத்மா (வடசென்னை கதாபாத்திரம்) வந்துவிட்டால் வெளியில் ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்ணா இப்படி எல்லாம் கஸ்டமர்களை ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என்று கூறினேன். அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப என்று சொல்லி திட்டினார்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
- நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’.
- இந்த படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

சமந்தா
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.

சமந்தா
இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமந்தா
மேலும், "எனது நல்ல நண்பர் இயக்குனர் ராஜ் (ஃபேமிலி மேன் புகழ்) சொல்வது போல், ஒருநாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். யசோதா திரைப்பட புரோமோஷனுக்காக ஒருநாள் ராஜிடம் இருந்து கடன் வாங்கி உள்ளேன். 11-ஆம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்'" என தெரிவித்துள்ளார்.
Like my good friend @rajndk Raj says , no matter what the day is like, and how shitty things are, his motto is to
— Samantha (@Samanthaprabhu2) November 7, 2022
Shower
Shave
Show up !!
I borrowed it for a day ♥️
For #yashodathemovie promotions ..
see you on the 11th pic.twitter.com/9u6bZK3cd2
- தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே.
- இவருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பூஜா ஹக்டே
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் பூஜா ஹக்டே தனக்கு அடிப்பட்டு விட்டதாக சமுக வலைதளத்தில் காலில் கட்டுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காலில் காயத்துடன் பூஜா ஹெக்டே
இந்நிலையில், இவர் தற்போது குணமடைந்து வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.
- இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லவ் டுடே
இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் "விஜய்க்கு கதை சொல்லிருக்கீங்களா? அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "ஆமாம்.. சொல்லிருக்கேன். இந்த டைம்ல அதைபற்றி பேசினால் அதை வைத்து பப்ளிசிட்டி பண்ண பாக்குறேன்னு நினைப்பாங்க. அதை இப்போ பேச வேண்டாம். படம் ஓடி முடிந்த பிறகு பேசலாம்" என கூறினார்.
- கே.பி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் 'குருமூர்த்தி'.
- இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் கே.பி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் 'குருமூர்த்தி'. இந்த படத்தில் பூனம் பாஜ்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

குருமூர்த்தி இசை வெளியீட்டு விழா
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். மேலும், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'குருமூர்த்தி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

குருமூர்த்தி இசை வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது, "ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச்சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது.

குருமூர்த்தி இசை வெளியீட்டு விழா
அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை.

குருமூர்த்தி இசை வெளியீட்டு விழா
இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும்.. அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை" என்று கூறினார்.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’.
- இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

மாவீரன்
"மாவீரன்" திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. சமீபத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர்
ஆனால், மழையின் காரணமாக படம் நிறுத்தப்பட்டதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "மாவீரன்" திரைப்படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆதாரம்'.
- இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆதாரம்
மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆதாரம்
இந்நிலையில் 'ஆதாரம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா மற்றும் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கமல்ஹாசன்
இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் - கமல்ஹாசன்
மேலும், "நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு! சொல்லிக் கொடுத்தேன். அள்ளிக்கொடுத்தார் அன்பை!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்! pic.twitter.com/iA2cvSPWhU
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 6, 2022
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
- இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சர்தார்
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்நிலையில் சர்தார் திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வசூலை அள்ளி குவித்ததை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






