என் மலர்

  சினிமா செய்திகள்

  இப்ப சொன்னா பப்ளிசிட்டி பண்றேனு நினைப்பாங்க.. விஜய் குறித்து கோமாளி பட இயக்குனர் பதில்..
  X

  விஜய் -பிரதீப் ரங்கநாதன்

  இப்ப சொன்னா பப்ளிசிட்டி பண்றேனு நினைப்பாங்க.. விஜய் குறித்து கோமாளி பட இயக்குனர் பதில்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.
  • இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.


  லவ் டுடே

  பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  லவ் டுடே

  இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் "விஜய்க்கு கதை சொல்லிருக்கீங்களா? அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "ஆமாம்.. சொல்லிருக்கேன். இந்த டைம்ல அதைபற்றி பேசினால் அதை வைத்து பப்ளிசிட்டி பண்ண பாக்குறேன்னு நினைப்பாங்க. அதை இப்போ பேச வேண்டாம். படம் ஓடி முடிந்த பிறகு பேசலாம்" என கூறினார்.

  Next Story
  ×