என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர்.
    • தற்போது நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


    விக்ரம்

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.


    பூர்ணா - விக்ரம் - ஷானித் ஆசிப் அலி

    இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனை நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி வழங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • பிக்பாஸ் 6-வது சீசன் 29 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 30-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அமுதவாணன், நீங்கள் ஒன்று சொன்னால் அதை ஜாலியாக எடுக்கிறீர்கள் அதே நாங்கள் கூறினால் அதை தவறாக நினைக்கிறீர்கள். எல்லாத்துக்கும் பிரச்சனை பண்ணனும் என்று பண்றீங்க. நேத்து ஒரு விஷயம் நடந்தது அதை கேட்டு சொல்ல சொல்றீங்க அதுதான் எனக்கு வேலையா. உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் கேளுங்கள் நான் எப்படி அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தை கேட்க முடியும் என்று விக்ரமனை பார்த்து கூறுகிறார். இதனுடன் அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.



    • கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் 'விஜயானந்த்'.
    • இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

    'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    விஜயானந்த்

    விஜயானந்த்

    கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

    விஜயானந்த்

    விஜயானந்த்

     

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காளிதாசா சாகுந்தலா' என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் கோபி சுந்தர் இசையில், பாடலாசிரியர் மதுர கவி எழுத, பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'.
    • இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி

    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.


    வாத்தி

    இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த வீடியோவை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நவம்பர் 10-ஆம் தேதி வாத்தி படத்தின் முதல் பாடல் வெளியாக போகிறது. இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இதிலிருந்து ஒரு அன்பிளாண்ட் வீடியோ' என்று தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முதல் பாடலை பாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பாடலுக்காக காத்திருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    வாத்தி

    'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.
    • இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    லவ் டுடே

    லவ் டுடே

     

    இந்நிலையில் இப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார். அதில், லவ் டுடே மீதான மிகப்பெரிய அன்பைப் பெற்று, அதை தெலுங்கு பார்வையாளர்களிடம் கொண்டு வருகிறோம். தயாரிப்பாளர் #தில்ராஜு சாருடன் இணைந்திருப்பது மதிப்புக்குரியது. தெலுங்கில் மிக விரைவில் வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    விஜய் நடிக்கும் வாரிசு படத்தையும் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி15 படத்தையும் தில்ராஜு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த படத்தின் முதல் பாடல் ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியானது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    வாரிசு

    இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ். தமன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ரஞ்சிதமே முழு வீடியோ இப்பதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்காரமாட்டீங்க. உங்களோட நானும் ஒரு ரசிகனா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர்.
    • இப்படத்தை இயக்குனர் விவேக் இயக்கவுள்ளார்.

    இயக்குனர் விவேக் இயக்கத்தில் மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் சந்தானத்தின் மைத்துனரான தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோர் என்என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

     

    ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பிவிஆர் மீனா, டிவோ தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4யூ கம்பெனி நிறுவனர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்ராஜ் கென்னடி இசையமைக்கும் இப்படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

     

    இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
    • இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கலகத் தலைவன்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கலகத் தலைவன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டரை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வாரிசு'.
    • இந்த படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    வாரிசு 

    வாரிசு 

     

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    வாரிசு

    வாரிசு

     

    இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலைகடந்த 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

    வாரிசு

    வாரிசு

     

    இந்நிலையில் இந்த பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இவர் தற்போது இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.


    ஜப்பான் பட பூஜை

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி -2' திரைப்படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.


    ஜப்பான் பட பூஜை

    'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரோல்.
    • இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "பரோல்". இப்படத்தை டிஆர்ஐபிஆர் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ளார். இப்படத்தி இசையை ராஜ்குமார் அமல் கவனிக்க ளிப்பதிவை மகேஷ் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    பரோல் படக்குழு

    பரோல் படக்குழு

     

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    பரோல் படக்குழு

    பரோல் படக்குழு

     

    இதில் பேசிய ஆர்.எஸ்.கார்த்திக் பேசியதாவது, இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

    • உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்பா.
    • சில தினங்களுக்கு முன்பு ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

    நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாகி 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். இவரின் நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த 2000-ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

     

    குடும்பத்தினருடன் ரம்பா

    குடும்பத்தினருடன் ரம்பா

    கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார்.

     

    விபத்துக்குள்ளான ரம்பாவின் கார் மற்றும் மகள்

    விபத்துக்குள்ளான ரம்பாவின் கார் மற்றும் மகள்

    சில தினங்களுக்கு முன்பு திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டார்.

     

    குடும்பத்தினருடன் ரம்பா

    குடும்பத்தினருடன் ரம்பா

    இந்நிலையில் விபத்துக்கு பிறகு தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ரம்பா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×