என் மலர்
சினிமா செய்திகள்
- வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன்.
- இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பொல்லாதவன். இப்படத்தில் தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா இணைந்து நடித்திருந்தனர். மேலும் டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் தனுஷ் மற்றும் திவ்யாஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை திவ்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் 'கலகத் தலைவன்'.
- இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலகத் தலைவன்
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கலகத் தலைவன்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே புயலே பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை பாடர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் பாடியுள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
#HeyPuyale in @shreyaghoshal & @dsathyaprakash voices is coming to serenade you. 💕Song out today evening at 4PM!@Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/pylJLYZ7aF
— Red Giant Movies (@RedGiantMovies_) November 9, 2022
- இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மேன்'.
- இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.

ஹனு-மேன்
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'.
- இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.

இடம் பொருள் ஏவல்
இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது.

இடம் பொருள் ஏவல்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈரக்காற்றே வீசு என்ற பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'யசோதா'.
- இந்த படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யசோதா
'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

யசோதா
இந்நிலையில், நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் தொடர்பான நேர்காணில் பேசிய சமந்தா தனது உடல்நலம் குறித்து பேசியுள்ளார்.

சமந்தா
அதில், "நோயினால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் முன்பு சொன்னது போலவே சில நாட்கள் கடினமாக உள்ளது. என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. படுக்கையில் இருந்து கூட எழ முடியவில்லை. சில நேரம் திரும்பி பார்த்தால் ரொம்ப தூரம் வந்து விட்டதுபோல் உணர்கிறேன். இந்த நோய்க்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நிறைய மருந்து எடுத்துக்கொள்கிறேன். இதனால் சோர்வாக இருக்கிறது. நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியான செய்திகளை பார்த்தேன். அப்படி இல்லை. உயிரோடுதான் இருக்கிறேன். நான் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்துள்ளேன். இந்த நோயை எதிர்த்தும் போராடுவேன்" என்று கண்கலங்கி பேசினார்.
யசோதா திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
- இவர் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் சரித்திர கதைகளை படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரலாற்று நாவல்களை தேடிப்பிடித்து படிக்க தொடங்கி உள்ளனர்.

ரன்வீர் சிங்
இந்நிலையில் வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் இறங்கி இருப்பதாகவும், இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் 3 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யா மன்னன் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம், ஷங்கர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
- பிரதீப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
- இவர் இயக்கியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

பிரதீப் ரங்கநாதன்
இதுவரை இந்த படம் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதால் இப்படத்திற்கு திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜெயம் ரவி
இந்நிலையில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லவ் டுடே
இந்நிலையில், இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆவதையும் குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.

பிரதீப் ரங்கநாதன் அறிக்கை
தமிழ்நாட்டிற்கு வெளியில் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேசியா). நான் நட்சத்திரம் இல்லை உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
You made me what I am pic.twitter.com/ObA8lDV7jI
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 8, 2022
- சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

மாவீரன்
'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது.

மாவீரன்
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுனில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are glad to have @Mee_Sunil onboard! 💐 #Maaveeran@Siva_Kartikeyan @AditiShankarofl @DirectorMysskin @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @bharathsankar12 @philoedit @LokeshJey @DoneChannel1 pic.twitter.com/ey2wfo2fzU
— Shanthi Talkies (@ShanthiTalkies) November 8, 2022
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
- இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் யூட்டியூப்பில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

வாரிசு
இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் ௨௬ மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.

வாரிசு
இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடல் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, 1994-ஆம் ஆண்டு வெளியான 'உளவாளி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் மெட்டுக்களை கொண்டு 'ரஞ்சிதமே' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமனின் சில பாடல்கள் இவ்வாறு வேறு படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
- திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர்.
- தற்போது நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

விக்ரம்
இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

பூர்ணா - விக்ரம் - ஷானித் ஆசிப் அலி
இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனை நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி வழங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- பிக்பாஸ் 6-வது சீசன் 29 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 30-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அமுதவாணன், நீங்கள் ஒன்று சொன்னால் அதை ஜாலியாக எடுக்கிறீர்கள் அதே நாங்கள் கூறினால் அதை தவறாக நினைக்கிறீர்கள். எல்லாத்துக்கும் பிரச்சனை பண்ணனும் என்று பண்றீங்க. நேத்து ஒரு விஷயம் நடந்தது அதை கேட்டு சொல்ல சொல்றீங்க அதுதான் எனக்கு வேலையா. உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் கேளுங்கள் நான் எப்படி அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தை கேட்க முடியும் என்று விக்ரமனை பார்த்து கூறுகிறார். இதனுடன் அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.






