மீண்டும் கோமாளி பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி?

பிரதீப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவர் இயக்கியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி
Published on

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

பிரதீப் ரங்கநாதன்

இதுவரை இந்த படம் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதால் இப்படத்திற்கு திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜெயம் ரவி

இந்நிலையில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com