என் மலர்
சினிமா செய்திகள்
- கர்நாடகாவில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.
- இதில் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

ஹால் டிக்கெட்
இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் 'என்னை மாற்றும் காதலே' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'என்னை மாற்றும் காதலே'. இந்த படத்தில் விஷ்வா புதுமுக நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஹரிதிகா சீனிவாஸ் நடித்திருக்கிறார். மேலும், கே.பாக்யராஜ், ஆம்னி, ஜெயப்பிரகாஷ், அலி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கே. பாக்யராஜ்
என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கே. பாக்யராஜ் கூறியதாவது, "எதைப் பாத்தாலும் ரெட் ஜெயண்ட். அதை தவிர வேறு யாரும் கிடையாது. எல்லா படமும் அவர்கள் தான் வளைச்சிப் போடுகிறார்கள். அப்படி கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் ரெட் ஜெயண்ட் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனக்கு தெரிந்து அதுதான் உண்மை.
என்னிடம் பல பேர் வந்து ரெட் ஜெயண்ட் உதயநிதி சாரை படம் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். அந்த பேனர் இருந்தாலே படத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் கூட்டம் வந்துவிடும். படம் நல்லபடியா வந்து விடும். அந்த ஒரு நம்பிக்கையோட எல்லாரும் அவர்களிடம் வரிசையில் நிற்கிறார்கள்" என்று கூறினார்.
- இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
- இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே. ராஜன்
இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கே.ராஜன் கூறியதாவது, "ஒரு படம் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குனர்களே காரணம். ஒரு படத்திற்கு நல்ல கதை முக்கியம். சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' பட தோல்விக்கு அதன் இயக்குனர் தான் காரணம். " என்று கூறினார்.
- இயக்குனர் ராம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

ஏழு கடல் ஏழு மலை
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்
அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Presenting the first look of @yoursanjali in #Yezhukadalyezhumalai!#DirectorRam @sureshkamatchi @VHouseProd_Offl @sooriofficial @thisisysr #nivinpauly#anjali#soori#yuvan pic.twitter.com/Rb2h7vFBjG
— Nivin Pauly (@NivinOfficial) November 9, 2022
- சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் மலையாள திரையுலகில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் 'சார்லி சாப்ளின் -2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி
இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது.
மேலும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன.
- அவதார்: தி வே ஆப் வாட்டர் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து 'அவதார்' திரைப்படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தினை மூன்று பாகங்களோடு முடித்து கொள்ளும் எண்ணம் உள்ளது என்றும் ஆனால், அது பாக்ஸ் ஆபீஸ் வசூல் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் 'கலகத் தலைவன்'.
- இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலகத் தலைவன்
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹே புயலே
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே புயலே பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஹே புயலே பாடலை அறிவித்தபடி சரியாக வெளியிட்டுள்ளனர். பாடர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
- மலையாள நடிகர் மம்முட்டி தற்போது 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

காதல் தி கோர்
தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார்.

சூர்யா-மம்முட்டி-ஜோதிகா
இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனை மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Happy to have hosted Dear @Suriya_offl at the location of @KaathalTheCore 😊 pic.twitter.com/2vs5u2ROlg
— Mammootty (@mammukka) November 9, 2022
- பிக்பாஸ் 6-வது சீசன் பல பிரச்சினைகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இதில் இன்று வெளியான முதல் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 31-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ரேம்பில் இருந்து வரும் பொருட்களை போட்டியாளர்கள் கைப்பற்ற முயலும் போது தனலட்சுமி கீழே விழுந்து விடுகிறார். இதற்கு மணிகண்டன் தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டுகிறார். இவருக்கும் இடையில் தகராறு ஏற்படவே மணிகண்டனை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர். இருந்தும் தனலட்சுமி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று மணிகண்டன், தனலட்சுமி கடையில் இருக்கும் பொருளை எடுக்க முயல்கிறார். இதனுடன் புரோமோ முடிவடைகிறது.

பிக்பாஸ் சீசன் 6
இதில் யார் குற்றவாளி? இந்த வாரம் கமல்ஹாசன் இந்த பிரச்சினைக்கு குறும்படம் போடுவாரா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்தார்.
- இந்நிகழ்வில் மணமக்களுக்கு 51 சீர்வரிசை பொருட்களை விஷால் வழ்ங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் 11 ஏழை ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்து 51 சீர்வரிசை பொருட்கள் வழ்ங்கினார்.

திருமணம் செய்து வைத்த விஷால்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணனுக்கு விஷால் தங்க சங்கிலி அணிவித்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கு விஷால் தொடர்ந்து பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.

விஷால்
அந்த வகையில் தற்போது மிகவும் சிறப்பாக சமூக சேவை பணிகள் செய்த சென்னை மாவட்ட விஷால் மக்கள் நல இயக்க தலைவர் ராபர்ட், சென்னை மாவட்ட மக்கள் நல இளைஞர் அணி தலைவர் கருவாயன், வடசென்னை மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் சீனு, மாவட்ட செயலாளர் யுவராஜ், ராயபுரம் பகுதி தலைவர் அன்பு ஆகியோருக்கு விஷால் தங்க மோதிரம் வழங்கினார்.
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தில் நடிகர் யோகிபாபு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லவ் டுடே
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

யோகி பாபு பகிர்ந்த மீம்
இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசைத்திருப்பியுள்ளது. அவர் பகிர்ந்த மீம் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது. இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
- நடிகை ராஷ்மிகா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை.
- இவர் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா மந்தனா
'வாரிசு' படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதில் நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

ராஷ்மிகா மந்தனா
நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பது தெரியும். அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல. எல்லோரையும் எப்படி மகிழ்விப்பது என்பதுதான் எனது தினசரி சிந்தனையாக இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா
உண்மையில், என்னை மட்டுமல்ல நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய்யான தகவல்களையும், குறிப்பாக நேர்காணல்களில் நான் சொல்லாத விஷயங்களுக்காக நான் கேலி செய்யப்படுவது என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது.

ராஷ்மிகா மந்தனா
என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாக இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மேம்படுத்த உதவுகின்றன. என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. உங்களுக்காக நான் கடினமாகவும் சிறப்பாகவும் உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.






