'ப்ரின்ஸ்' தோல்விக்கு அவர்தான் காரணம்.. தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு..

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
'ப்ரின்ஸ்' தோல்விக்கு அவர்தான் காரணம்.. தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு..
Published on

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே. ராஜன்

இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கே.ராஜன் கூறியதாவது, "ஒரு படம் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குனர்களே காரணம். ஒரு படத்திற்கு நல்ல கதை முக்கியம். சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' பட தோல்விக்கு அதன் இயக்குனர் தான் காரணம். " என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com