என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
    • இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா போஸ்டர்

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை 11 தேதியன்று வெளியாவதாக இருந்த 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • நடிகை சமந்தாவின் 'யசோதா' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
    • இதன் புரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டுள்ளார்.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    யசோதா

    'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


    யசோதா

    இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா பல்வேறு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவரின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ரொம்ப பதட்டமாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான். என்னை போலவே என் படக்குழுவினரும் நாளை உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.


    சமந்தா

    'யசோதா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர்.
    • இவர் நடித்த ‘மிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.


    ஜான்வி கபூர்

    சமீபத்தில் இவர் நடித்த 'மிலி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் என்ட்ரீ கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான்வி கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களை விலைக்கு வாங்கியுள்ளார்.


    ஜான்வி கபூர்

    இதன் மதிப்பு ரூ.65 கோடி என்று கூறப்படுகிறது. 8,669 சதுர அடியில் 6421 சதுர அடி கட்டிட பரப்பளவை கொண்ட இந்த தளங்களில் பிரம்மாண்ட நீச்சல் குளம் மற்றும் ஐந்து கார்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா.
    • இவர் நடித்த புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அதர்வா

    இவர் தற்போது 'களவாணி' , 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    பட்டத்து அரசன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'பட்டத்து அரசன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
    • இவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


    யுவன் ஷங்கர் ராஜா

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


    யுவன் ஷங்கர் ராஜா

    சமீபத்தில் கமல்ஹாசன், பாவனா மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.
    • இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.


    இளையராஜா

    இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாளை (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
    • இந்த படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சக்தி கூத்து' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    வெந்து தணிந்தது காடு

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.


    வெந்து தணிந்தது காடு

    இதில் நடிகர் சிம்பு பேசியதாவது, "ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல வேண்டும். படம் பண்ணிட்டு இருக்கும் போது பல அப்டேட் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், படக்குழு ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அதிக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது ஒரு தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலை.


    வெந்து தணிந்தது காடு

    எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால் தான் நல்ல படங்கள் வரும் அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் கதாநாயகர்களை தூக்கி மேலே வைப்பார்கள். நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் ரொம்ப தொந்தரவு செய்யாதீர்கள் உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லாம் உழைத்து கொண்டிருக்கிறோம். இது என்னுடைய 'பத்து தல' இயக்குனர் சொல்ல சொன்னார். அதனால் தான் கூறினேன்" என்று பேசினார்.

    • கர்நாடகாவில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.
    • இதில் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.


    ஹால் டிக்கெட்

    இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் 'என்னை மாற்றும் காதலே' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'என்னை மாற்றும் காதலே'. இந்த படத்தில் விஷ்வா புதுமுக நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஹரிதிகா சீனிவாஸ் நடித்திருக்கிறார். மேலும், கே.பாக்யராஜ், ஆம்னி, ஜெயப்பிரகாஷ், அலி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கே. பாக்யராஜ்

    என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கே. பாக்யராஜ் கூறியதாவது, "எதைப் பாத்தாலும் ரெட் ஜெயண்ட். அதை தவிர வேறு யாரும் கிடையாது. எல்லா படமும் அவர்கள் தான் வளைச்சிப் போடுகிறார்கள். அப்படி கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் ரெட் ஜெயண்ட் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனக்கு தெரிந்து அதுதான் உண்மை.

    என்னிடம் பல பேர் வந்து ரெட் ஜெயண்ட் உதயநிதி சாரை படம் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். அந்த பேனர் இருந்தாலே படத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் கூட்டம் வந்துவிடும். படம் நல்லபடியா வந்து விடும். அந்த ஒரு நம்பிக்கையோட எல்லாரும் அவர்களிடம் வரிசையில் நிற்கிறார்கள்" என்று கூறினார்.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    கே. ராஜன்

    இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கே.ராஜன் கூறியதாவது, "ஒரு படம் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குனர்களே காரணம். ஒரு படத்திற்கு நல்ல கதை முக்கியம். சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' பட தோல்விக்கு அதன் இயக்குனர் தான் காரணம். " என்று கூறினார்.

    • இயக்குனர் ராம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.


    ஏழு கடல் ஏழு மலை

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    ×