என் மலர்
சினிமா செய்திகள்
- ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
- என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தி கவர்ச்சி நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா
இந்நிலையில் ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ''ராக்கி சாவந்த் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி உள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேச சட்டத்தில் இடம் இல்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஜய் சேதுபதியின் 46-வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார்.
- இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

விஜேஎஸ்46
விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

டிஎஸ்பி
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பைக்கில் அமர்ந்துக் கொண்டு வருவது போன்று இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Happy to share #DSP first look.
— VijaySethupathi (@VijaySethuOffl) November 10, 2022
Thank you ☺️@ponramvvs @karthiksubbaraj@immancomposer @kaarthekeyens@kalyanshankar @anukreethy_vas @stonebenchers @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @veerasamar @kumar_gangappan @sherif_choreo @Dineshsubbaraya1 @radhikassiva pic.twitter.com/FtosXTDvyx
- இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார்.
- இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சல்கான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். சஜித்கானை பிக்பாசில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது அடிதடி சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலகத் தலைவன்
இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது.

கலகத் தலைவன்
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்சியில் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதனிடையே இப்படத்தின் டிரைலர் 7.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக கலகத் தலைவன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில், கண்ணுக்கு தெரியாம நம்மள குறிவச்சி ஒரு வேட்டை நடந்துட்டு இருக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்த்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா
இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா
இந்நிலையில் கண்டன குரல்கள் எழுந்த நடிகர் சதீஷின் பேச்சு குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஓ மை கோஸ்ட் பட இசை வெளியீட்டு விழாவில் என் அருகில் நடிகை தர்ஷா குப்தா அமர்ந்திருந்தார். அவர் என்னிடம், என்னைப் பாருங்க சன்னிலியோன் போன்று மாடர்னாக டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார்.
ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. சன்னி லியோனை பார்த்த தர்ஷா அப்சட் ஆகிட்டதா என்னிடம் சொன்னாங்க. மேலும் தர்ஷா குப்தா அப்சட் ஆனதை மேடையிலும் என்னை சொல்ல சொன்னாங்க. அதன் காரணமாகத்தான் நானும் மேடையில் பேசினேன். ஆனால் என் பேச்சிக்கு சிலர், பெண்கள் உடை உடுத்துவது அவர்களின் உரிமை எனக் கருத்து தெரிவித்தனர்.

சதீஷ்
அது உண்மைதான். பெண்களும் சரி ஆண்களும் சரி உடை உடுத்துவது அவரவர்களின் சுதந்திரம்தான். ஆனால் இது இரு நண்பர்கள் இடையே ஜாலியா பேசினது, தர்ஷா சொல்ல சொன்னாங்க அதனால அவங்க சம்மதத்துடன் தான் மேடையில் பேசினேன். ஆனால் சில பேர் நான் எல்லாரையும் குறிப்பிடுவது போல் சீரியஸாக எடுத்துக் கொண்டனர். இருப்பினும் இந்த கருத்துக்களை நான் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறேன். அதேபோல் நான் நிறைய நல்ல விஷயங்களையும் பேசியிருக்கிறேன். இந்த விஷயத்திற்கு ரியாக்ட் பண்ணது போல் அந்த நல்ல விஷயத்தையும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்" என்றார்.
- தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'.
- இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

வாத்தி
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

தனுஷ் - வெங்கி அட்லூரி
இந்நிலையில் அறிவித்தபடி 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடலான 'வா வாத்தி' பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுத பாடகர் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
- இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடகறி, நானும் ரவுடி தான், தேவி, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அதன்பின்னர் எல்கேஜி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களில் கதாநாயகனாக நடித்து இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

சிங்கப்பூர் சலூன்
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிக்பாஸ் 6-வது சீசன் தற்போது 32-நாட்களை எட்டியுள்ளது.
- இதன் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 32-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஏ.டி.கே. என்று ஜனனி பதிலளிக்க இருவருக்குள்ளும் முட்டிக் கொள்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற ஏ.டி.கே. ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் நான் ஏன் உன்னை கூப்பிட்டு அறிவுரை கூறுகிறேன் உன்னிடம் ஒரு தனிப்பட்ட அன்பு இருப்பதால் தான்.

பிக்பாஸ் சீசன் 6
அந்த அன்பை கொச்சப்படுத்திட்டீங்க. நான் ஒரு தங்கச்சி மாதிரி அந்த அவளை பார்த்தேன். அவள் மீது வைத்த பாசம் போல் இந்த வீட்டில் யாரின் மேலும் நான் வைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் சென்று அவளிடன் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்பேன். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் யோகி பாபு.
- இவர் நடித்த 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

யோகி பாபு
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரபல நடிகர் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இதில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யோகிபாபு விரைவில் கதை எழுதி திரைப்படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் சேதுபதியின் 46-வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார்.
- இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

விஜேஎஸ்46
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று இரவு 7.40 மணிக்கு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
- இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிரைவர் ஜமுனா போஸ்டர்
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை 11 தேதியன்று வெளியாவதாக இருந்த 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Our #DriverJamuna is postponed from its said release on November 11 to a later date
— 18 Reels (@18Reels_) November 10, 2022
The new release date will be announced soon
We thank you for your love and patience
Team#DriverJamuna @aishu_dil @kinslin @SPChowdhary3 @GhibranOfficial @gokulbenoy #AnlArasu pic.twitter.com/Mp40A6E9FJ
- நடிகை சமந்தாவின் 'யசோதா' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
- இதன் புரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டுள்ளார்.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யசோதா
'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

யசோதா
இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா பல்வேறு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவரின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ரொம்ப பதட்டமாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான். என்னை போலவே என் படக்குழுவினரும் நாளை உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.

சமந்தா
'யசோதா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






