கண்ணுக்கு தெரியாம நம்மள குறிவச்சி ஒரு வேட்டை நடந்துட்டு இருக்கு - கலகத் தலைவன் டிரைலர் வைரல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலகத் தலைவன்
கலகத் தலைவன்
Published on

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

கலகத் தலைவன்

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது.

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

கலகத் தலைவன்

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்சியில் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதனிடையே இப்படத்தின் டிரைலர் 7.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக கலகத் தலைவன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில், கண்ணுக்கு தெரியாம நம்மள குறிவச்சி ஒரு வேட்டை நடந்துட்டு இருக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com