என் மலர்
நீங்கள் தேடியது "பிரதீப் ரங்கநாதன"
- டியூட் படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
- டியூட் படத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.
தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், 'டியூட்' திரைப்படத்தைப் சிறப்புக் காட்சியை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், CPI முன்னாள் மாநிலச் செலயாளர் முத்தரசன் ஆகியோர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் நேற்று ரூ.95 கோடி வசூலை குவித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், டியூட் படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படம் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தில் நடிகர் யோகிபாபு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லவ் டுடே
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

யோகி பாபு பகிர்ந்த மீம்
இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசைத்திருப்பியுள்ளது. அவர் பகிர்ந்த மீம் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது. இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.






