கலகத் தலைவன் படத்தின் ஹே புயலே பாடல் வைரல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் 'கலகத் தலைவன்'.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

கலகத் தலைவன்

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹே புயலே
ஹே புயலே

ஹே புயலே

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே புயலே பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஹே புயலே பாடலை அறிவித்தபடி சரியாக வெளியிட்டுள்ளனர். பாடர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com