விஜய் சேதுபதியின் புரோமோ பாடலை வெளியிட்ட இயக்குனர்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி
Published on

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.

இடம் பொருள் ஏவல்
இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது.

இடம் பொருள் ஏவல்
இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈரக்காற்றே வீசு என்ற பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com