ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ள 'ரத்தசாட்சி' திரைப்படம்

ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
ஜெயமோகன்
ஜெயமோகன்
Published on: 

தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ளது.

ரத்தசாட்சி
ரத்தசாட்சி

ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்யதுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com