search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "omraut"

    • 'ஆதிபுருஷ்' திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.


    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.


    இந்நிலையில், 'ஆதிபுருஷ்' வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆதிபுருஷ்' படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கைகூப்பி நான் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். நம்முடைய புனித சனாதனத்துக்கும், தேசத்திற்கும் நாம் சேவை புரிவதற்கான வலிமையை பஜ்ரங்பலி வழங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.




    • நடிகர் பிரபாஸ், ஆதி புரூஷ் என்ற படத்தில் ராமர் வேடத்தில் நடித்து உள்ளார்.
    • ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.


    ஆதிபுருஷ்

    நேற்று தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் ரமாதேவியை சந்தித்து கோவில் அன்னதானத்திற்காகவும், கோசாலை விரிவாக்கத்திற்காகவும் ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த செயல் பிரபாஸின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இதில் ஸ்ரீ ராமராக பிரபாஸும் சீதா தேவியாக கிருத்தி சனோனும் லக்ஷ்மணனாக சன்னி சிங்கும் அனுமனாக தேவதத்தா நாகேவும் தோன்றியுள்ள இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’
    • இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.


    ஆதிபுருஷ்

    மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.


    ஆதிபுருஷ்

    டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். சமீபத்தில், இந்த படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.


    ஒம் ராவத் வெளியிட்ட அறிக்கை

    இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜுன் 16-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஓம் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்வையாளர்களுக்கு காட்சிபூர்வமான முழு அனுபவம் தருவதற்கு எங்கள் படக்குழுவிற்கு கூடுதல் அவகாசம் தரவேண்டியிருக்கிறது. இந்தியா பெருமைப்படக் கூடிய படத்தை வழங்குவது எங்கள் கடமை. உங்களின் அன்பும் ஆதரவும் எங்களை தொடர்ந்து இயக்க வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    ×