கவனம் ஈர்க்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டர்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
ஆதிபுருஷ்
ஆதிபுருஷ்
Published on

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆதிபுருஷ் போஸ்டர்

இதில் ஸ்ரீ ராமராக பிரபாஸும் சீதா தேவியாக கிருத்தி சனோனும் லக்ஷ்மணனாக சன்னி சிங்கும் அனுமனாக தேவதத்தா நாகேவும் தோன்றியுள்ள இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com