முதல்வர் கதாபாத்திரத்தில் பிரியாமணி.. லேட்டஸ்ட் தகவல்..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.சி.22.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரியாமணி
பிரியாமணி
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

என்.சி.22

மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், என்சி22 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்.சி.22

அதன்படி, நடிகை பிரியாமணி இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாகவும் இடைவேளைக்கு பிறகு முதலமைச்சராவது போல் திரைக்கதை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண் முதலமைச்சர் ஆனால் என்னென்ன நன்மைகள் செய்ய முடியும் என்பது போன்று அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com