search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாங்க தியாகி பாய்ஸ் - ஜீவா படத்தின் புதிய பாடல்
    X

    ஜீவா

    'நாங்க தியாகி பாய்ஸ்' - ஜீவா படத்தின் புதிய பாடல்

    • இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காபி வித் காதல்'.
    • இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.


    காபி வித் காதல்

    இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.


    காபி வித் காதல்

    இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் 'தியாகி பாய்ஸ்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பேரரசு வரிகளில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    காபி வித் காதல்

    காபி வித் காதல் திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×