என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.


    கைதி

    இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    அஜய் தேவ்கன்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'போலோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமலாபால் வருகிற டிசம்பர் மாதம் முதல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
    • இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

     

    இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த காரை நடிகர் கார்த்தி இயக்குனருக்கு வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் தற்போது 'நான் கடவுள் இல்லை' படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    எஸ்.ஏ.சந்திர சேகர்

    தற்போது இவர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இமயமலையில் மோட்டார் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய்யை விட மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.



    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் "பதான்".
    • "பதான்" படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

     

    பதான்

    பதான்

    இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    பதான்

    பதான்

    நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் பதான் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் பதான் இன்னும் உயிரோட இருக்கான் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசருக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அஹமத் தற்போது இயக்கி வரும் படம் ‘இறைவன்’.
    • இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    ஜெயம் ரவி  - அஹமத்

    இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் அஹமத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    இறைவன் படக்குழு

    மேலும், இந்த படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஹன்சிகா.
    • தனது திருமணத்தை உறுதி செய்து நடிகை ஹன்சிகா இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

    கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சோகேலும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

     

    ஹன்சிகா - சோகேல்

    இந்நிலையில் ஹன்சிகாவிடம் சோகேல் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூங்கொத்து கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்களை ஹன்சிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு திரையுலகினர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    • தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் யுவன் சங்கர் ராஜா.
    • யுவன் தற்போது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

    சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.

    யுவன் சங்கர் ராஜா

    யுவன் சங்கர் ராஜா

     

    2015ல் ஆடை வடிவமைப்பாளர் ஷஃப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஸியா என்ற மகள் உள்ளார். 2014ல் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்த யுவன், தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.

     

    யுவன் சங்கர் ராஜா

    யுவன் சங்கர் ராஜா

    இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனித பயணத்தை யுவன் மேற்கொண்டு உள்ளார். யுவன் உம்ராவுக்கான ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்பா.
    • ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

    நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாகி 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். இவரின் நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த 2000-ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

     

    குடும்பத்தினருடன் ரம்பா

    குடும்பத்தினருடன் ரம்பா

    கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார்.

     

    நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டார்.

     

    குடும்பத்தினருடன் ரம்பா

    குடும்பத்தினருடன் ரம்பா

    இந்நிலையில் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரம்பா வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் நன்றி, நாங்கள் விரைவில் குணமடைய வேண்டிய அனைவருக்கும் ரொம்ப நன்றி. நாங்க எல்லோரும் நலமாக இருக்கிறோம். சாஷா நலமாக இருக்கிறாள். நான் ரொம்ப கொடுத்து வச்சவ எல்லாரும் எனக்காக பிராத்தனை செய்றீங்க. எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

    • பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
    • இப்படம் தமிழக முதல்வர் உள்பட பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துனர்.

     

    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்க நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன், but some technical issues it's taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம். மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது. நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் ஒடிடி-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு, ஓடிடியில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

     

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

     

    விஷால்

    விஷால்

    இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஷாலை லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து பேசி கதையும் சொல்லி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைதி பட பாணியில் கேங்ஸ்டர் படமாக இப்படம் தயாராக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார்.
    • இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். வழங்கினர்.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


    விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

    மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார். இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்கினர்.


    பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் எங்கள் அழைப்பிற்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடகா ரத்னா' விருதை வழங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன் 2

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்தியன் 2 படப்பிடிப்பில் யோக்ராஜ் சிங்

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில் ''கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டேன்'' என பதிவிட்டுள்ளார்.

    ×