'இந்தியன் 2' படப்பிடிப்பில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியன் 2
இந்தியன் 2
Published on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தியன் 2

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் யோக்ராஜ் சிங்

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில் ''கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டேன்'' என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com