கார்த்தி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கார்த்தி - பி.எஸ்.மித்ரன்
கார்த்தி - பி.எஸ்.மித்ரன்
Published on

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த காரை நடிகர் கார்த்தி இயக்குனருக்கு வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com