என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் பிரசாந்த் தற்போது நடித்து வரும் படம் 'அந்தகன்'.
- இந்த படத்தின் பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

அந்தகன் போஸ்டர்
மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக "டோர்ரா புஜ்ஜி" என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.

அந்தகன் போஸ்டர்
இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடிகர் பிரபுதேவா இணைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதும் 'அந்தகன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'அந்தகன்' படத்தை கலைப்புலி எஸ் தாணு உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.
- இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐமா’.
- இந்த படம் சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
'ஆருயிரே' குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. எழுதி, இயக்கியுள்ள படம் 'ஐமா'. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக யூனஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கிறார்.

ஐமா
மேலும், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஆர். ராகுல் இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐமா
'ஐமா' படம் குறித்து இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா கூறியதாவது, "பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டுவந்துள்ளேன். படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. 9 கதாபாத்திரங்களைச் மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது" கூறினார்.
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
- மறைந்த புனித் ராஜ்குமாருக்கு இன்று கர்நாடகா ரத்னா விருது வழங்கப்பட்டது.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

ரஜினிகாந்த் - ஜுனியர் என்.டி.ஆர்
இதையடுத்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.

விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி
இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்க புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி இந்த விருதை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், "நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை" என்று பேசினார்.
- பிக்பாஸ் தமிழ் 6-வது சீசனில் கடந்த வாரம் அசல் வெளியேறினார்.
- தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 23-வது நாளை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம் ஜட்ஜ்மெட்டுக்கு உக்காரும் போது அவங்க வாதத்திற்கு பிரதிவாதம் நீங்க வலுவா வைக்கனும் என்று ஏ.டி.கே. விடம் கூறுகிறார். இதனால் கடுப்பான மகேஸ்வரி நீங்க என்ன ஜட்ஜ்னா இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்கனு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சிட்டு வந்திருக்கீங்களா? உங்க வேலைய சரியா செய்தா போதும். யாரையாது புடிச்சிக்க வேண்டியது ஒன்ன குறிப்பிட வேண்டியது அப்பறம் கத்த வேண்டியது வேற எதாவது தெரியுதா? உங்களுக்கு என்று கூறிக் கொண்டே வெளியே செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது.
- பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அண்மையில் கொலை மிரட்டல் வந்தது.
- இவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை போலீசார் வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.
பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.

சல்மான் கான்
இதையடுத்து நடிகர் சல்மான் கான் தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

சல்மான் கான்
இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து மாநில அரசால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.
- இவருக்கு இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவர் கைவசம் தற்போது சசிகுமாரின் 'காரி', விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களில் உள்ளது.

இந்நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் சார்பாக இசையமைப்பாளர் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதுகுறித்து இமான் தனது பதிவிட்டிருப்பது, "இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனுடன் டாக்டர் பட்டத்தின் சான்றிதழ்களை பகிர்ந்துள்ளார். இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக இமானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இமானுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இதற்குமுன்பு சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பாக டி.இமானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘வாத்தி’.
- இந்த படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வாத்தி
இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#vaathi #sir single announcement this week 🔥🔥🔥 @dhanushkraja @SitharaEnts #venkyatluri
— G.V.Prakash Kumar (@gvprakash) November 1, 2022
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
- இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

விஷால்
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்புகிறது. அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.
இது பற்றி விஷால் கூறியதாவது, "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப் படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது" என்று கூறினார்.
- கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
- மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு பெங்களூர் சென்றுள்ளார்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

ரஜினிகாந்த் - ஜூனியர் என்.டி.ஆர்.
இதையடுத்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாக கர்நாடக முதல் மந்திரிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

பெங்களூர் சென்றடைந்த ரஜினிகாந்த்
இந்நிலையில், இன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கவுள்ளதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். இவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.
- இந்த கொண்டாட்ட நெரிசலில் அந்நாட்டின் நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் உயிரிழந்து உள்ளார்.
தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. கொரோனா பரவலுக்கு பின்னர் விமரிசையாக நடந்த இந்த திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின்போது, ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் கூடியதில், ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டு கூட்டத்தில் சிக்கி பலர் நசுக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

லீ ஜி ஹான்
இந்த சம்பவத்தில் தென் கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் என்பவரும் உயிரிழந்து உள்ளார். இதனை 935 என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் ஹானின் பணிகளை கையாண்டு வந்து உள்ளது.

லீ ஜி ஹான்
அதில், எங்களது நிறுவனத்தின் விலைமதிப்பில்லா குடும்ப உறுப்பினராக இருந்தவர் அவர். வானில் நட்சத்திரம் போல் மின்னியவர். எங்களை விட்டு சென்று விட்டார். அவரது மறைவால் துயரில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். அவர் பழகுவதற்கு இனிமையானவர். அனைவருடனும் நன்றாக பழக கூடிய நண்பர். எப்போதும் புன்சிரிப்புடன் எங்களை வரவேற்க கூடிய ஜி-ஹானை நாங்கள் இனி பார்க்கவே முடியாது என்பதனை எங்களால் நம்பமுடியவில்லை என தெரிவித்து உள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று (நவம்பர் 1) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்பா.
- ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாகி 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். இவரின் நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த 2000-ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

குடும்பத்தினருடன் ரம்பா
கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

குடும்பத்தினருடன் ரம்பா
இந்நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
- விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் - வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

கையில் குழந்தையுடன் விஜய்
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு தில் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அப்போது தில் ராஜுவின் குழந்தையை நடிகர் விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.






