search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கவனம் சிதறினால் கதையே புரியாமல் போகும்.. ஐமா பட இயக்குனர் கருத்து..
    X

    ஐமா

    கவனம் சிதறினால் கதையே புரியாமல் போகும்.. 'ஐமா' பட இயக்குனர் கருத்து..

    • இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐமா’.
    • இந்த படம் சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    'ஆருயிரே' குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. எழுதி, இயக்கியுள்ள படம் 'ஐமா'. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக யூனஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கிறார்.


    ஐமா

    மேலும், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஆர். ராகுல் இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    ஐமா

    'ஐமா' படம் குறித்து இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா கூறியதாவது, "பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டுவந்துள்ளேன். படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. 9 கதாபாத்திரங்களைச் மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது" கூறினார்.

    Next Story
    ×