என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    விஜய் - வாரிசு 

    விஜய் - வாரிசு 

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

     

    கையில் குழந்தையுடன் விஜய்

    கையில் குழந்தையுடன் விஜய்

    இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு தில் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அப்போது தில் ராஜுவின் குழந்தையை நடிகர் விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • பிரபல போஜ்புரி திரைப்பட நடிகர் பவன் சிங்கின் மனைவி ஜோதி சிங் புகார் அளித்துள்ளார்.
    • கருக்கலைப்பு, தற்கொலைக்கு தூண்டி மனரீதியான பாதிப்பு ஏற்படுத்தினார் என பிரபல நடிகர் மீது அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

    பிரபல போஜ்புரி திரைப்பட நடிகர் பவன் சிங் (வயது 36). இவரது மனைவி ஜோதி சிங், தனது கணவர் மீது போலீசில் அளித்துள்ள புகாரில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 6-ல் பவன் சிங்குடன் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு சில நாட்களில் பவன் சிங், அவரது தாயார் பிரதீமா தேவி, அவரது சகோதரி ஆகியோர் தனது தோற்றம் பற்றி கேலி செய்ய தொடங்கினார்கள். பவன் சிங்கின் தாயார் தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் தொகையை எடுத்து கொண்டார்.

    அந்த பணம் தனது தாய் மாமனிடம் இருந்து பெற்றது. அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் தன்னை அவர் துன்புறுத்த தொடங்கினார். இந்த கொடுமைகள் போக, தற்கொலைக்கும் தூண்டினார்கள். கர்ப்பம் தரித்து இருந்தபோது, ஒரு மருந்து கொடுத்தனர். அதனை சாப்பிட்ட பின்பு, கர்ப்பம் கலைந்தது. மேலும் தினமும், தனது கணவர் குடித்து விட்டு வந்து, அடித்து துன்புறுத்தி, என்னை தற்கொலை செய்ய தூண்டினார்.

     

      பவன் சிங் - ஜோதி சிங்

    பவன் சிங் - ஜோதி சிங்

    மனரீதியாக துன்புறுத்தியதுடன், மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் ஒன்றை வாங்கி வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். என்னிடம் புகாருக்கான அனைத்து சான்றுகளும் உள்ளன. அதனை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என ஜோதி சிங் கூறியுள்ளார்.

    இந்நிலையில், பவனுக்கு எதிராக குடும்ப நீதிமன்றத்தில் தனது பராமரிப்பு செலவுக்கு தொகை தர வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜோதி சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து கோர்ட்டு அளித்த நோட்டீசின்படி, வருகிற நவம்பர் 5-ந்தேதி பவன் சிங் கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு வெளிவந்த லாலிபாப் லகேலு என்ற பாடலால் பிரபலம் அடைந்த பவன் சிங்குக்கு 2014-ம் ஆண்டு நீலம் என்பவருடன் முதலில் திருமணம் நடந்தது. எனினும், 2015-ல் நீலம் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரத் கல்யாண்.
    • இவரின் மனைவி உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.

    பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது மனைவி பிரியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து உடல்நிலை மேலும் மோசமானதால் 7 மாதங்களாக கோமா நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.


    குடும்பத்துடன் பரத் கல்யாண்

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு பிரியா உயிரிழந்தார். பிரியா இறப்பிற்கு காரணம் அவர் பேலியோ டயட்டில் இருந்தது தான் என்று கூறப்படுகிறது. மேலும், இவரது மறைவு குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘துணிவு’.
    • 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    அஜித் -சமுத்திரகனி

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    துணிவு

    இந்நிலையில், 'துணிவு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதில் கலந்து கொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த தகவல் தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ''ஒரு நல்ல படம் தானாக விளம்பரப்படுத்திக்கொள்ளும் . நிபந்தனையற்ற அன்புடன் அஜித்'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
    • இவர் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    அநீதி

    இதையடுத்து அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகின. இந்நிலையில், இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வருவதாக தகவல் பரவி வந்தன.
    • தற்போது கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்திலும் நடித்து வருகிறார்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    கவுதம் கார்த்திக் 'தேவராட்டம்' படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில், தங்களின் காதலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மேலும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்துள்ளார்.
    • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.


    விஷால்

    தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார்.

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.  


    • கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறையை சிலர் படம் பிடித்து வீடியோ வெளியிட்டனர்.
    • இதனை கண்டிக்கும் வகையில் நடிகை அனுஷ்கா ஷர்மா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டுள்ளார். மேலும், தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.


    அனுஷ்கா ஷர்மா பதிவு

    விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா" என குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார்.
    • ‘துணிவு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.


    அஜித்

    விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.


    புனேவில் அஜித்

    இந்நிலையில், தற்போது இவர் புனேவிற்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அஜித்தின் 'துணிவு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்ததை அடுத்து நான்காவது வில்லனாக இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.


    நிவின் பாலி

    இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒப்புக் கொண்டதாகவும் பின்னர் அவர் மறுத்ததால் நடிகர் நிவின் பாலி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது நிவின் பாலி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் மெரி கிறிஸ்துமஸ்.
    • இப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர்.

    மெரி கிறிஸ்துமஸ்

    மெரி கிறிஸ்துமஸ்

     

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    அட்லீ

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×