என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய்
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

லோகேஷ் கனகராஜ் - விஜய்
இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்ததை அடுத்து நான்காவது வில்லனாக இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

நிவின் பாலி
இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒப்புக் கொண்டதாகவும் பின்னர் அவர் மறுத்ததால் நடிகர் நிவின் பாலி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது நிவின் பாலி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் மெரி கிறிஸ்துமஸ்.
- இப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர்.

மெரி கிறிஸ்துமஸ்
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

அட்லீ
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி பல டாஸ்க்குகள் பல்வேறு திருப்பங்கள் என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். தொடர்ந்து இரண்டாவது நபராக கடந்த வாரம் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் இன்றுடன் 22 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ்
இதனிடையே சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸை இருந்து நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகான்
இந்த நிலையில், புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது உண்மையா?, புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, "இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.

மன்சூர் அலிகான்
மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மன்சூர் அலிகான்
எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்." என்றார்.
மேலும், இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
- வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
- இவர் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அநீதி
இந்நிலையில் அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 22வது நாட்களை நெருங்கியுள்ளது.
- இந்த வார நாமினேஷனில் தேர்வாகியிருக்கும் நபர்களை பிக்பாஸ் அறிவிப்பது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.
bigboss
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 22வது நாளை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ரொம்ப மேனிபுலேட் பன்ற மாதிரி இருக்கு, அத்து மீறி பேசுனது பிடிக்கல, பிரச்சனைய பெருசு பண்ண நினைக்குறாரு, எந்த சண்டையிலும் நிக்கமாட்டுறாரு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார எவிக்ஷன்ல தேர்வு செய்திருக்கும் நபர்கள் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன் என்று பிக்பாஸ் குரலில் புரோமோ வெளியானது.
- எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’.
- இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மஞ்சு வாரியர்
இந்நிலையில், 'துணிவு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை மஞ்சுவாரியர் தனக்கான பகுதியினை டப்பிங் செய்து வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
'துணிவு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No Guts, No Glory! ❤️#THUNIVU #dubbing #ajithkumar #ak #hvinoth pic.twitter.com/9j3qU6Kdyo
— Manju Warrier (@ManjuWarrier4) October 30, 2022
- அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.
- இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது.

நித்தம் ஒரு வானம்
இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் அசோக் செல்வன் பேசியதாவது, ''நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. 'ஓ மை கடவுளே' படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிட கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும்.

நித்தம் ஒரு வானம் படக்குழு
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்தப் பட குழுவினருக்கும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் பனி படர்ந்திருக்கும். இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பட குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்தது. இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் முகத்திலும் கவலை ஏற்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம். கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது.

அசோக் செல்வன்
எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10, 15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது. நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்தோம். உணர்வு மேலிட, இயக்குனரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. அங்குள்ள மக்கள், 'இந்த சீசனில் பனி பொழிய தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது' என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்'' என்றார்.
இப்படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அறிமுக இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் படத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
- இதில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் படத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். பெயரிடப்படாத இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர் டி.அருளானந்து (ரிச் இந்தியா) தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது. இதில் திரையுலகினர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.
- சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
- தற்போது திரிஷா சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு திரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்துக்கு சென்று இருக்கிறது. அந்த படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தற்போது திரிஷாவுக்கு படவாய்ப்புகள் மளமளவென குவிகின்றன.

பொன்னியின் செல்வன் - திரிஷா
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் சம்பளத்தை திரிஷா உயர்த்திவிட்டதாகவும், இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல் பரவி உள்ளது.
- நடிகர் விஷாலுடன் நாடோடிகள், பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநயா காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
- இது குறித்து நடிகை அபிநயா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இணைய தளங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநயா நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அபிநயா - விஷால்
தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. விஷாலை ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து பேசினர். பின்னர் அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. அபிநயாவுடனான காதல் உண்மையா? என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஷால் - அபிநயா
இந்நிலையில் அபிநயா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மனைவியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக நாங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் எங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் வதந்திகளை பரப்பி உள்ளனர். இது பொய்யான தகவல்" என்று கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர்.
- கடந்த வருடம் திரைக்கு மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர்.
இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

மாஸ்டர்
கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த 'ஆர்ஆர்ஆர்' படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் ரிலீஸ் செய்தனர். அந்த படம் திரையிட்ட முதல் நாளே ரூ.1 கோடி வசூலித்தது.

மாஸ்டர்
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.






