என் மலர்

    சினிமா செய்திகள்

    குவியும் பட வாய்ப்புகள்: சம்பளத்தை உயர்த்திய திரிஷா
    X

    பொன்னியின் செல்வன் - திரிஷா

    குவியும் பட வாய்ப்புகள்: சம்பளத்தை உயர்த்திய திரிஷா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
    • தற்போது திரிஷா சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு திரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்துக்கு சென்று இருக்கிறது. அந்த படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தற்போது திரிஷாவுக்கு படவாய்ப்புகள் மளமளவென குவிகின்றன.

    பொன்னியின் செல்வன் - திரிஷா

    லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் சம்பளத்தை திரிஷா உயர்த்திவிட்டதாகவும், இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

    Next Story
    ×