என் மலர்
சினிமா செய்திகள்
- தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நானே வருவேன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவர் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், தயரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் அசத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'பவர் பாண்டி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பவர் பாண்டி
இந்நிலையில், இவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் 6-வது சீசனின் நேற்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது.
- இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற பதற்றத்துடன் போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது ஷெரினாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்கு தனலட்சுமி தான் காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து நேற்று இது போட்டினால் ஏற்பட்ட காயம் இதற்கு தனலட்சுமி காரணம் இல்லை என்று கமல்ஹாசன் குறும்படத்தின் மூலம் நிரூபித்தார்.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம், அசல், மகேஸ்வரி ஆகிய மூன்று பேரில் யார் காப்பாற்றாப்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு மகேஸ்வரி நான் வெளியில் போக மாட்டேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது கூறுகிறார். நான் தான் தப்பு பண்ணிருக்கேன் அப்படினா மக்களுடைய தீர்ப்பு என்னவோ அதை நான் ஏத்துக்குறேன் என்று அசீம் கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6
நான் என்ன பண்ணிட்டேனு என்னைய இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு தெரியல அப்படி அசல் சொல்கிறார். இறுதியாக நிவாஷினியிடம் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கேட்கிறார் அதற்கு அசல் இருப்பாரு இருக்கனும் என்று நிவாஷினி கூறுகிறார். எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று இந்த புரோமோ முடிவடைகிறது.
- இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'பத்து தல'.
- இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

பத்து தல
இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

பத்து தல
சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்ததை சிம்பு புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பத்து தல திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இதில் சிம்பு அட்டகாசமாக நடனம் ஆடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை சமந்தா மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- இவருக்கு ஆறுதல் தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

யசோதா
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.

சமந்தா
இதையடுத்து நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு டப்பிங் பேசியுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், "சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சமந்தா - சிரஞ்சீவி
இவருக்காக திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமந்தா, நம் வாழ்க்கையில் அவ்வப்போது சவால்கள் வந்துகொண்டேயிருக்கும். அவை நம் மனவலிமையை கண்டறிவதற்காகக் கூட இருக்கலாம். மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும், நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துகள்"என்று குறிப்பிட்டுள்ளார்.
Wishing you speedy recovery!!@Samanthaprabhu2 pic.twitter.com/ZWGUv767VD
— Chiranjeevi Konidela (@KChiruTweets) October 30, 2022
- நடிகை நமீதாவிற்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
- இவர் திருப்பதிக்கு தன் கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார்.

நமீதா
பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். இவருக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

நமீதா
இந்நிலையில், இவர் தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நமீதா, தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும் வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.
- தற்போது சித்தார்த்தின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தார்த் - அதிதி ராவ்
சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில், அதிதிராவ் பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதிதி ராவ்- சித்தார்த்
அந்த பதிவில், "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர்.
சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- இப்படம் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ருத்ரன்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ருத்ரன்
ஆக்ரோஷத்துடன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது போன்று உருவாகியுள்ள இந்த வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- நடிகை குஷ்பு தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
- இவர் தற்போது விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
90-களில் சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி - குஷ்பு
இந்நிலையில் குஷ்பு நடிகர் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, "சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரண சந்திப்பு. அவருடன் தேநீர் அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை
இவர் ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
When a casual meeting with the one n only #SuperStar over cup of tea and laughter, it brings so much joy and happiness. Thank you Sir for your valuable time. As always such a pleasure to be in your esteemed company. And must say you are looking amazing. Much love❤️ @rajinikanth pic.twitter.com/pUQ1oykFgW
— KhushbuSundar (@khushsundar) October 29, 2022
- புனித் ராஜ்குமாருக்கு புனித் கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்வர் அறிவித்தார்.
- கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
இதற்கிடையே, கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ம் தேதி அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்குவதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக முதல் மந்திரிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர். கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராக ரூபம்' பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

ரஜினி - ரிஷப் ஷெட்டி
இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

காந்தாரா
இந்நிலையில், காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.
- இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

யசோதா
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.

யசோதா
இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளதாக அவர் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த பதிவில், 'யசோதா டிரைலருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

சமந்தா
முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு' என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
- வைரமுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில் "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.






