ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங்.. படத்திற்காக சமந்தா எடுத்த ரிஸ்க்..

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
சமந்தா
சமந்தா
Published on

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

யசோதா
யசோதா

யசோதா

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.

யசோதா
யசோதா

யசோதா

இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளதாக அவர் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த பதிவில், 'யசோதா டிரைலருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

சமந்தா
சமந்தா

சமந்தா

முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு' என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com