'ருத்ரன்' படத்தின் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இப்படம் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
Published on

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ருத்ரன்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ருத்ரன்

ஆக்ரோஷத்துடன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது போன்று உருவாகியுள்ள இந்த வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com