என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.
    • இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    யசோதா

    யசோதா

     

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.

    யசோதா

    யசோதா

     

    இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளதாக அவர் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த பதிவில், 'யசோதா டிரைலருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

     

    சமந்தா

    சமந்தா

    முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு' என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
    • வைரமுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

     

    இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில் "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் ட்விட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

    • பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது போக்குடி படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வீச்சருவா வீசி வந்தோம்..' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், தற்போது கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'போர்குடி'. இவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். மேலும் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார்.

     

    போர்குடி

    போர்குடி

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

     

    ஆர்.எஸ்.கார்த்திக்

    ஆர்.எஸ்.கார்த்திக்

    இப்பாடல் குறித்து நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் பேசுகையில், ''ஒரு திரைப்படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் வெளியாகும். ஆனால் எங்கள் படக்குழு முதன் முறையாக 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிடுகிறோம். இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை போற்றிடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான திரைப்படப் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. இதன் காரணமாக 'வீச்சருவா வீசி வந்தோம்..' என்ற பாடலை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம்.'' என்றார்.

    • சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் 'டபுள் எக்ஸ்எல்' படத்தின் மூலம் இந்தியில் மஹத் அறிமுகமாகிறார்.
    • இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.

    மங்கத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களிலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் பிரபலமடைந்தவர் மஹத் ராகவேந்திரா. இவர் தற்போது சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் 'டபுள் எக்ஸ்எல்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

    இப்படம் குறித்து மஹத் ராகவேந்திரா கூறியதாவது, ''சினிமா என்பது, பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக இந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது. சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி.

     

    டபுள் எக்ஸ்எல் படக்குழு

    டபுள் எக்ஸ்எல் படக்குழு

    நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம். இதில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குனர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்'' என்றார்.

    'டபுள் எக்ஸ்எல்' திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரைக்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தை ரஜினி பாராட்டினார்.
    • தற்போது காந்தாரா திரைப்படத்தின் இயக்குனர் ரஜினியை சந்தித்து ஆசிப்பெற்றார்.

    கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது.

     

    காந்தாரா

    காந்தாரா

    அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. மேலும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     

    ரஜினியிடம் ஆசிப்பெற்ற காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி

    ரஜினியிடம் ஆசிப்பெற்ற காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி

    சிலதினங்களுக்கு முன்பு காந்தாரா திரைப்படம் பார்த்த நடிகர் ரஜினி, "தெரிந்தை விட தெரியாதது தான் அதிகம் என்பதை இதை விட சிறப்பாக யாராலும் சினிமாவில் சொல்ல முடியாது. எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள். இந்திய சினிமாவில் தலைச்சிறந்த படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

     

    ரஜினியிடம் ஆசிப்பெற்ற காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி

    ரஜினியிடம் ஆசிப்பெற்ற காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி

    இந்நிலையில் இப்படத்தை பாராட்டிய ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, நீங்கள் எங்களை ஒரு முறை புகழ்ந்தால், அது நூறு முறை புகழ்ந்த மாதிரி, நன்றி ரஜினிகாந்த் சார். எங்களின் காந்தார திரைப்படத்திற்கான உங்கள் பாராட்டுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    ரஜினியின் முத்திரை டயலாக்கான 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்ற வசனத்தை போன்று கந்தாரா படக்குழு நன்றி கூறி பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    • கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
    • சிலதினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது கணவருடன் துபாயில் குடியேறி இருக்கிறார்.

     

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    இந்நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலை உயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பூர்ணாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் 1,700 கிராம் தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    • தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார்.

     

    ரஜினியிடம் ஆசிப்பெற்ற ராகவா லாரன்ஸ்

    ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளன்று ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருப்பது, எனது பிறந்தநாளில் தலைவரிடம் ஆசிர்வாதம் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்வேன். அந்தவகையில், இந்த ஆண்டு பசியின் மதிப்பை அறிந்த நான் அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்த இடங்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன். எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’.
    • இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

     

    நித்தம் ஒரு வானம்

    நித்தம் ஒரு வானம்

    வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

     

    நித்தம் ஒரு வானம்

    நித்தம் ஒரு வானம்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது. 

    • அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள படம் 'யூகி'.
    • 'யூகி' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'யூகி'. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

     

    யூகி

    யூகி

    தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

     

    இந்நிலையில், கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ந் தேதி அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது கரங்களால் அந்த விருது வழங்கப்படவுள்ளது. புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.

    கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.
    • 2 வாரங்களுக்கு போரூர் மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை.

    தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார்,வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தனக்கு ஜாமின் கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் அர்னவ் தரப்பில் 2வது முறையாக மனு அளிக்கப்பட்து. அதை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், நடிகர் அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் 2 வாரங்களுக்கு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  இன்று புழல் சிறையில் இருந்து அர்னவ் ஜாமினில் விடுதலை ஆவார் என தெரிகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் அடுத்த இரண்டு படங்களை தற்போது உறுதி செய்துள்ளார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர்

    இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக லைக்கா நிறுவனம் தலைவர் சுபாஷ்கரன், தமிழ் குமரன், பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இப்படங்களின் பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.


    லைக்கா நிறுவனர்களுடன் ரஜினி

    இந்த இரண்டு படங்களில் ஒன்றை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் மற்றொன்றை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×