என் மலர்

  சினிமா செய்திகள்

  சின்னத்திரை நடிகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
  X

  நடிகர் அர்னவ்

  சின்னத்திரை நடிகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.
  • 2 வாரங்களுக்கு போரூர் மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை.

  தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார்,வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

  இந்த நிலையில் தனக்கு ஜாமின் கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் அர்னவ் தரப்பில் 2வது முறையாக மனு அளிக்கப்பட்து. அதை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், நடிகர் அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் 2 வாரங்களுக்கு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புழல் சிறையில் இருந்து அர்னவ் ஜாமினில் விடுதலை ஆவார் என தெரிகிறது.

  Next Story
  ×