அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் பட டிரைலர் வெளியானது

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’.இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் பட டிரைலர் வெளியானது
Published on

அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்

நித்தம் ஒரு வானம்

வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்

நித்தம் ஒரு வானம்

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com