என் மலர்
சினிமா செய்திகள்

விஷால் - அபிநயா
நடிகர் விஷாலுடன் காதல்? நாடோடிகள் பட நடிகை விளக்கம்
- நடிகர் விஷாலுடன் நாடோடிகள், பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநயா காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
- இது குறித்து நடிகை அபிநயா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இணைய தளங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநயா நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அபிநயா - விஷால்
தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. விஷாலை ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து பேசினர். பின்னர் அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. அபிநயாவுடனான காதல் உண்மையா? என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
விஷால் - அபிநயா
இந்நிலையில் அபிநயா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மனைவியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக நாங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் எங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் வதந்திகளை பரப்பி உள்ளனர். இது பொய்யான தகவல்" என்று கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.






