

பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது மனைவி பிரியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து உடல்நிலை மேலும் மோசமானதால் 7 மாதங்களாக கோமா நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
குடும்பத்துடன் பரத் கல்யாண்
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு பிரியா உயிரிழந்தார். பிரியா இறப்பிற்கு காரணம் அவர் பேலியோ டயட்டில் இருந்தது தான் என்று கூறப்படுகிறது. மேலும், இவரது மறைவு குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.