ஜெயம் ரவி-நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் அஹமத் தற்போது இயக்கி வரும் படம் ‘இறைவன்’.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
நயன்தாரா - ஜெயம் ரவி
நயன்தாரா - ஜெயம் ரவி
Published on

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி  - அஹமத்

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் அஹமத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

இறைவன் படக்குழு

மேலும், இந்த படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com