என் மலர்
இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், மற்றொரு பாலிவுட் நடிகையான அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்திருந்தார். அவர்தான் கதாநாயகியா? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை.

இந்நிலையில், சமுத்திரகனியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து அவர் நடிப்பதாக எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில், தற்போது அவர் இப்படத்தில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. ‘காலா’ படப்பிடிப்பில் பா.ரஞ்சித்துடன் சேர்ந்து சமுத்திரகனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு காலா படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக டுவிட் செய்திருக்கிறார்.
இதையடுத்து, இன்று மும்பையில் முக்கியமான இடங்களில் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் மும்பை தாதா பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஜூன் 3-ந்தேதி 94 வயது பிறக்கிறது. அன்றைய தினம் அவரது சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் கலைஞர் டி.வி.யில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி திரைப்பட துறையினருக்கு ஒரு ‘‘கேட்- பாஸ்’’ போல் இருந்தார். திரைத்துறையிலும், நாடகத் துறையிலும் நுழைபவர்கள் கருணாநிதியின் வசனத்தை சிவாஜியின் குரலில் பேசி பயிற்சி பெறும் அளவிற்கு தொடக்க பள்ளியாக இருந்தார்.
நான் எனது 3 வயதிலேயே அவரது வசனத்தை மழலை மொழியில் பேசியவன். கருணாநிதி வசனத்தை பேசுபவன் மட்டுமல்ல அதற்கேற்ப நடிப்பதற்கான தகுதி பெற்றவன் நான்.

பல படங்களில் நான் நடித்தாலும் நேரடியாக கருணாநிதியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ‘சட்டம் என் கையில்’ பட விழாவின் போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விழாவிற்கு பிறகு நான் கருணாநிதியுடன் அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. அற்புதமான கதாசிரியர். தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு என் கன்னத்தை கிள்ளியவர் கருணாநிதி. அந்த அளவிற்கு உரிமையோடு என்னிடம் நடந்து கொள்வார். நானும் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் அந்த படத்தையும் பார்க்க வருமாறு அழைப்பேன். நானே சில திரைப்படங்களை அவருக்கு திரையிட்டு காண்பித்து இருக்கிறேன்.
‘அவ்வை சண்முகி’ படத்தில் பெண் வேடமிட்டு நான் நடித்தபோது மேக்கப்பை கலைக்காமல் அதே கெட்டப்பில் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவர் ஆச்சரியப்பட்டு மிகவும் வியந்தார். பெண் வேடம் மிக பொருத்தமாக அமைந்துள்ளது என்று பாராட்டினார்.

ஒரு முறை நான் அவரிடம் பேசி கொண்டிருந்த போது ஜூன் 2-ந்தேதி எங்கிருந்தாய் என்று கேட்டார். நான் மும்பையில் இருந்தேன் என்றேன். 3-ந்தேதி எங்கிருந்தாய் என்றார். நான் சென்னைக்கு வந்து விட்டேன் என்றேன். எதற்காக கேட்கிறார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.
அப்போதுதான் அவர் 3-ந்தேதி எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வரவில்லையே என்று கேட்டார். அதற்கு நான் இப்படி வந்து வாழ்த்து சொல்லியது கிடையாதே என்றேன். அந்த அளவிற்கு என்னிடம் உரிமையை எதிர்பார்த்தார். கருணாநிதியின் தமிழ் உணர்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆவார்கள்.
கருணாநிதியின் வசனத்தை சிவாஜி குரலில் பேசி நடித்து காட்டுவது என்பது ஒரு பரீட்சை போன்றது. ஒரு விழாவில் கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்.ஜி.ஆர். கூட பாராட்டினார்.
அவரது தமிழ் வசனம் எனக்கு திரைத்துறையில் அரிச்சுவடி போல் அமைந்தது. சட்டமன்ற பணியில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறார் என்றால் அந்த சாதனையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
எல்லோரும் அவரை வாழ்த்த வயதில்லை என்பார்கள். என்னைப் பொறுத்த வரை வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும். அவர் மேலும் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு வரவேண்டும் என்பது எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதாநாயகனாக அதர்வா நடித்து வருகிறார். கதாநாயகியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார். ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில்தான் விஜய் சேதுபதி சுமார் 15 நிமிட காட்சிகள் வரை நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுக்களான ‘கில்லி பம்பரம் கோலி’ என்ற தலைப்பு வைத்திருந்தாலும் முழுக்க முழுக்க இப்படம் மலேசியாவில் படமாக்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இப்படம் அந்த விளையாட்டுக்களின் பெருமையை பறைசாற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை மனோகரன் என்பவர் இயக்கியிருக்கிறார்

இப்படத்தில் புதுமுகங்கள் தமிழ், பிரசாத், நரேஷ் என மூன்றுபேர் கதையின் நாயகர்களாகவும், தீப்தி ஷெட்டி என்ற புதுமுக நாயகி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். நாயகி இருந்தாலும் இப்படத்தில் பெயருக்குக்கூட காதல் கிடையாதாம். இப்படம் நட்பையும், வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வில்லனாக சந்தோஷ் குமார் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். படம் முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருந்தாலும் இதுவரையில் நடித்திராத வித்தியாசமான வேடங்களில் கஞ்சாகருப்பும் தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சம்.

இந்த ஆண்டின் சிறந்த புதுமுகத்துக்கான விருது தன் அறிமுகத்துக்கு கிடைக்கும் என்று இப்போதே பெருமைப்படுகிறார் இயக்குனர் மனோகரன். அதேபோல பிரசாத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் விருதுக்கான தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏதோ ஒரு வகையில் தன் படத்துக்கு விருது நிச்சயம் என்று அடித்துக் கூறுகிறார்.
நாககிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சாய்சுரேஷின் படத்தொகுப்பும் தினாவின் நடன அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு துணை சேர்த்துள்ளதாக கூறும் இயக்குனர் பணம் கொடுத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் அதை உறுதி செய்வார்கள் என்றும் போஸ்ட் புரொடக்ஷனின் போதே அந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சந்தோஷப்படுகிறார்.
இப்படத்தை சாய் ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் சார்பில் இயக்குனர் மனோகரனே தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற ஜுன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இளையராஜா.இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நìகழ்ச்சி நடந்தது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"என் மானசீக குருவான சி.ஆர்.சுப்பராமனை வணங்கும் அதே நேரத்தில், அவர் குடியால் தன் உயிரை இழந்தது எனக்குப் பிடிக்கவில்லை. சங்கீதத்திற்காக உயிரைக் கொடுக்கலாம். ஆனால் குடிக்காக உயிரைக் கொடுக்கலாமா?
சினிமாவில் பல இசைக் கலைஞர்கள் குடியால் கெட்டுப் போனார்கள். இசையைத் தொழிலாகக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து, கரகாட்டத்திற்கு வாசிக்கும் நையாண்டி மேளக்காரர் வரை, குடிப்பழக்கம் இல்லாத கலைஞர்களைக் காண்பது அரிது.
சினிமாவில் இருக்கும் அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களும் கூட இதற்கு விதி விலக்கு அல்ல. பாலுவின் கச்சேரிக்குப் போகும்போது, அதில் வாசிக்கும் அத்தனை பேரும் குடிப்பார்கள். மெதுவாக என்னையும் அதில் சேர்த்துக் கொண்டார்கள். வெறென்ன செய்வது? சேர்ந்து
கொண்டேன்!வெளிïருக்கு போகிறோம். நாளெல்லாம் சும்மா இருந்து விட்டு, மாலையோ, இரவோதான் கச்சேரி. அது எப்போது முடியுமோ? அதற்கப்புறம் சாப்பிட்டு விட்டுப்படுத்து, அடுத்த நாள் ரெயிலைப் பிடித்து, பகலெல்லாம் காய்ந்து கருவாடாகித் திரும்புவோம்.
இதில் அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷம் இந்தக் குடிதான். அவர்களுடன் அவ்வப்போது சேர்ந்து கொள்வேனே தவிர, அவர்களைப்போல் எப்போதும் அதிலேயே கிடப்பதில்லை.
கச்சேரி முடிந்த பிறகுதான், எப்போதாவது அவர்களுடன் சேர்வேன். குடித்தால், ஆர்மோனியத்தை தொடமாட்டேன்.
ராஜ்குமார் நடித்த "பங்காரத மனுஷியா'' என்ற படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக, ஜி.கே.வி.யுடன் பட அதிபர் கே.சி.என்.கவுடாவின் ஊரான தொட்டுபெள்ளாப்பூர் என்ற ஊருக்கு போயிருந்தோம். அங்கே, டிராவலர்ஸ் பங்களாவில் ரூம் புக் செய்திருந்தார்கள். அங்கே தங்கி பாடல் கம்போஸ் செய்தோம்.
காலையில் எழுந்து நந்திஹில்ஸ் ரோட்டில் நடந்து விட்டு, 7 மணிக்கு கம்போசிங் தொடங்குவோம். 8ஷி - 9 மணிக்கு டிபன் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தொடங்க, தயாரிப்பாளரும், டைரக்டரும் வந்து கேட்பார்கள்.
பிறகு மதிய உணவு. ஓய்வு. மாலை 4 மணிக்கு டீயுடன் மீண்டும் கம்போசிங் தொடங்கி, இரவு 9 மணி வரை தொடரும். அப்புறம், ஜீ.கே.வி.யாருடனாவது விஸ்கி, கோழி, டிபன்...
இது தொடர்ச்சியாக ஒரு வாரம் நடந்தது.
உதயசங்கர் பாடல் எழுதினார்.
சமயத்தில், பட அதிபர் தன் நண்பர்களுடன் வந்து விடுவார். ஜி.கே.வி.யிடம் ட்ïனை வாசிக்கச் சொல்லி கேட்பார்.
வாசிக்கத் தொடங்குவோம். ஜி.கே.வி.க்கு இடையில் மறந்து போகும். இடையில் நிறுத்தி, "எப்படி அது?'' என்று என்னிடம் கேட்டுவிட்டு, மறுபடியும் தொடங்குவார்.
இப்படி இடையில் நிறுத்தி, மறுபடியும் பாட, அது மொத்தமாக என்ன ட்ïன் என்று தயாரிப்பாளர் கவுடாவுக்கு புரியாது. எனவே, "ராஜா! நீயே பாடப்பா! ஜி.கே.வி.யை விட நீ நல்லாப் பாடறே'' என்பார்.
ஜி.கே.வி. இடையில் நிறுத்தி, நிறுத்திப் பாடுவதால் எனக்கு இந்த சர்ட்டிபிகேட். ஜி.கே.வி.யும், "டேய்! நீயே பாடு!'' என்பார்.
நான் பாடுவேன்.
கடைசி நாள் அன்று, கம்போசிங் முடிந்ததும், ஜி.கே.வி. விஸ்கி பாட்டிலை எடுத்து, தபேலா கன்னையாவை பார்த்து, "டேய் கண்ணா! இந்தா!'' என்று ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுத்தார்.
அதோடு, உதய சங்கரும் இதில் கலந்து கொண்டார்.
"டேய், ராஜா! நீயும் வா!'' என்று ஜி.கே.வி. அழைத்தார்.
"அண்ணே, வேணாம்!'' என்றேன்.
"அட, பரவாயில்லை! வாடா!'' என்றார்.
"இல்லேண்ணா! திடீர் என்று புரொடிïசர் வந்து ட்ïனை கேட்டால், நல்லா இருக்காதுண்ணே!''
"அட, ராத்திரி 9 மணி ஆச்சு. இனிமே யாருடா வரப்போறா?''
"நான் குடிச்சா கிட்டாரை தொடமாட்டேன். என்னை கிட்டார் வாசிக்கும்படி சொல்லக்கூடாது!'' என்றேன்.
"சரி வா!'' என்றார். கலந்து கொண்டேன்.
சற்று நேரத்தில், படத்தயாரிப்பாளரும், ராஜ்குமாரின் சகோதரர் வரதப்பாவும் வந்துவிட்டார்கள்! `பாடலை கேட்கவேண்டும்'
என்றார்கள்!ஜி.கே.வி.யும், கன்னையாவும் வாத்தியங்களை எடுத்து வைத்தார்கள். ஜி.கே.வி. பாடத்தொடங்கினார்.
"ஏனு ராஜா! நீனு ஏறு மாடுத்தியா? ஹாடு!'' என்று என்னை பார்த்து சொன்னார், படத்தயாரிப்பாளர்.
ஜி.கே.வி. என்னைப் பார்த்தார். நான் `மாட்டேன்' என்று தலையை ஆட்டினேன்.
புரொடிïசரைப் பார்த்து, "வேண்டாம். அவனை வற்புறுத்த வேண்டாம்'' என்று ஜி.கே.வி. சொன்னார்.
நான் அவரிடம் வேலை செய்பவன். வாசிக்கச் சொல்லி என்னை அவர் கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.
மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஜி.கே.வி.யின் பண்பு, என்னைக் கவர்ந்தது.
கன்னடப்படங் களில் ராஜ்குமாருக்கு பொதுவாக பி.பி.சீனிவாஸ்தான் பின்னணியில் பாடி வந்தார்.
"சம்பத்திக்கே சவாலு'' என்ற ராஜ்குமாரின் படத்தில், அவர் முதல் காட்சியிலேயே எருமை மாட்டின் மீது உட்கார்ந்தபடியே பாடிக்கொண்டு வந்து அறிமுகம் ஆவார்.
உதயசங்கர், பாடலை நன்றாக எழுதிவிட்டார். மிïசிக் எல்லாம் ரெடி.
நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணா! ராஜ்குமார் பாடுவாரா?'' என்று கேட்டேன்.
"என்னது! முத்துராஜ் (ராஜ்குமார்) பாடுவானா என்றா கேட்கிறாய்? அவன் நாடகத்தில் பாடி நடித்து, சினிமாவுக்கு வந்தவன்டா!'' என்றார், ஜி.கே.வி.
"அப்படின்னா, அவரே இந்தப்பாட்டை ஏன் பாடக்கூடாது?''
"ஏண்டா?''
"பாட்டு, பயங்கர குஷியோடு ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிற மாதிரி இருக்கு. பி.பி.சீனிவாஸ் பாடினா அதுவும் நல்லாத்தான் இருக்கும். ஆனா, அதிலே இந்த `பஞ்ச்' இருக்காது'' என்றேன்.
ஜி.கே.வி. நேரே ராஜ்குமாரிடம் பேச, அவர் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.
பிறகு பாடல் பதிவுக்கு ஏற்பாடு நடந்தது. ராஜ்குமார் பிரமாதமாகப் பாடிவிட்டார். அந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களையும் அவரே பாடினார்.
அவர் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் இருந்து, அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும், இசை யாராக இருந்தாலும் அவரேதான் கடைசி வரை பாடினார். அதற்கு அடிபோட்டவன் நானாக இருந்தேன் என்பது, வரலாற்றில் முக்கிய விஷயம்.
இதுகுறித்து, வழக்கமாக ராஜ்குமாருக்கு பாடி வந்த பி.பி.சீனிவாஸ் என்னிடம் வருத்தம் கொள்ளவில்லை. எப்போதும் போலவே என்னிடம் அன்பாகப் பழகினார்.
இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது.
பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானார். இந்தியில் பெரிய நடிகையாகி தற்போது ‘பேவாட்ச்’ ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சேத் கோர்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் கடந்த 26-ம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது.
“பேவாட்ச்’ படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளும், காமெடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கமர்ஷியல் பொழுது போக்கு படமான இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, விக்டோரியா லீட்ஸ் என்ற போதை மருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்குகிறார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூரும் கூறியிருந்தார்.

இதற்கிடையே ரஜினி ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயணா தெரிவித்து இருக்கிறார். இந்தநிலையில், நடிகர் ஆனந்தராஜ் ரஜினியை அவரது வீடு இருக்கும் போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், ஆனந்த்ராஜ் அரசியல் நிலைமை குறித்து பேசியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், அரசியல் குறித்து பல விமர்சனங்களை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வெளியான `காலா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரிகாலன் என்று பெயருடைய ரஜினியை சுருக்கமாக காலா என்று அழைப்பதால் இப்படத்திற்கு `காலா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை தாராவில் வாழும் ஒரு தென்னிந்திய தமிழனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதற்காக சென்னை பூந்தமல்லி அருகே பிரபல ஸ்டூடியோவில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
படத்தில் இடம்பெறும் பிரபலங்கள் யார் யார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே வெளியிடப்பட்டது. இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர `காலா' படத்தில் ஹூமா குரோஷி நடிக்கிறாரா? அல்லது அஞ்சலி பாட்டீல் நடிக்கிறாரா? என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. `காலா' படத்தில் நடிப்பதை, அஞ்சலி பாட்டீல் அவரது டுவிட்டர் பக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதேநேரத்தில் ஹூமா குரோஷியும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, `காலா' படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதே நேரத்தில் ஹூமா குரோஷி ரஜினி ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்', `பிரேமம்' போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தனது அடுத்த படத்தில் நிவின் பாலி நடிக்கவில்லை. ஆனால் நிவினுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அல்போன்ஸ் தனது அடுத்த படத்தில் யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி தமிழ், மலையாள சினிமா ரசிகர்களிடையே பரவி வந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகன் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் தனது அடுத்த படத்தில் ஜெயராமின் மகனான, காளிதாஸ் ஜெயராமை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. `மீன் குழம்பும் மண் பானையும்' படத்தின் மூலம் காளிதாஸ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் `பூமரம்' என்ற படத்தில் காளிதாஸ் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், அல்போன்ஸின் அடுத்த படத்தில் காளிதாஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்போன்ஸின் படங்களுக்கு தமிழ், மலையாள ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகலாம்.
முதலில் சில கட்சிகளுக்கு ஆதரவாக “வாய்ஸ்’ கொடுத்து வந்த அவர் பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை.
அரசியலில் ஒட்டாமல் இருந்து வந்த அவர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ரசிகர்களை சந்தித்துப் பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் “எந்திரன்” படத்துக்கு பிறகு தன் முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால் அப்போது அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
என்றாலும் ‘லிங்கா’ பட இசை வெளியீட்டின் போது “அரசியலுக்கு வர வேண்டும் என்று இருந்தால் வருவேன்” என்றார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியது. ஆனால் அதன் பிறகும் ரஜினி உறுதியான எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தாலும், கருணாநிதியின் உடல் நலக்குறைவாலும் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து ரசிகர்களை 2 கட்டமாக சந்தித்து புகைப்படம் எடுக்கவும், கருத்துக்களை அறியவும் ரஜினி முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அவர் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் அரசியல் எனும் சிஸ்டம் கெட்டு போய் கிடக்கிறது. எனவே போர் வரும்போது நாம் அதை சந்திக்க தயாராவோம்” என்றார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்து வெளியிட்டனர். பெரும்பாலான தலைவர்கள், ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்தனர். ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் “ரஜினி அரசியலுக்கு வருவார்” என்றார்.
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒரு அமைப்பு போராட்டம் நடத்திய போது கூட அவர் அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக தனது ரசிகர்கள் எல்லை மீறக்கூடாது என்று எச்சரித்தார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை அவரது அண்ணன் சத்தியநாராயணா முதன் முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும். இது தொடர்பாக அவர் தன் ரசிகர்களுடனும், தனது நல விரும்பிகளான நண்பர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல் சுற்று ஆலோசனையை அவர் முடித்துள்ளார்.

அடுத்த மாதம் (ஜூன்) மீண்டும் ரசிகர்களை சந்தித்து இரண்டாம் சுற்று ஆலோசனை நடத்தவுள்ளார். அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் தவிர்க்க முடியாதது.
ரஜினி அடுத்து தனது ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். அதிகபட்சமாக எவ்வளவு ரசிகர்களை சந்திக்க முடியுமோ, அவ்வளவு ரசிகர்களை சந்தித்து விட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் பிறகே அவர் தனது முடிவை வெளியிடுவார்.
பொதுமக்களிடமும், ரசிகர்களிடமும் அவருக்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது. எனவே ரஜினி எடுக்கும் முடிவும் அதற்கு நேர்மறையாக இருக்கும். அது தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் படைப்பதாக இருக்கும்.
ரஜினி தனது முடிவை ஜூலை மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அவரது அரசியல் வருகையின் முக்கிய நோக்கமே, பொது வாழ்வில் உள்ள ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான்.
அரசு சார்பில் நிறைய திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அந்த பணம் ஏழை எளியவர்களுக்கு சென்று சேருவதில்லை. அதுபோல நலத்திட்டங்களின் பயன்களும் தேவைப்படுபவர்களுக்கு கிடைப்பதில்லை.
ஏழைகளுக்கு அரசுத் திட்ட பலன்கள் உரிய வகையில் கிடைக்காமல் போவதற்கு காரணமே அடிமட்டம் வரை ஊழல் புகுந்து இருப்பதுதான். இந்த ஊழலை ரஜினியால் திறம்பட ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதை அறிந்துள்ள சில கட்சிகள் அவரை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன. அதற்காக சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ரஜினி எந்த கட்சியிலும் சேர மாட்டார்.
ரஜினி சொந்தமாக புதிய அரசியல் கட்சிதான் தொடங்குவார். அந்த கட்சிக்கான பெயர் மற்றும் சின்னம் மற்றும் உள் கட்டமைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.
ஆந்திராவில் சிரஞ்சீவி “பிரஜா ராஜ்ஜியம்“ எனும் கட்சியைத் தொடங்கியபோது சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற்றார். ரஜினியும் தன் புதிய கட்சி மூலம் சுமார் 20 சதவீத வாக்குகளை பெற முடியும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தன் பலத்தை நிரூபித்து காட்டவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று அவர் நம்புவதாக தெரிய வந்துள்ளது.
ரஜினி புதிய கட்சி தொடங்கினால் அது தமிழக அரசியலில் புதிய அலையை உருவாக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே அவருடன் கூட்டணி வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் புரோமோவை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது, "சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன்.

இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அமிதாப் பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன். கேமராக்கள் இருப்பதால் யதார்த்தம் போய் விடும் என்பது தவறு. பிக் பாஸ் வீட்டுக்குள் போன கொஞ்ச நேரத்தில் கேமரா இருப்பதையே பிரபலங்கள் மறந்து விட்டு, இயல்பாகி விடுவார்கள். நிச்சயம் இது யதார்த்தமான ஒரு நிகழ்ச்சியாக அமையும் என நம்புகிறேன். பல சமயங்களில் நாங்கள் கூட கேமரா இருப்பதை மறந்து ஏதோதே பேசி சர்ச்சையில் சிக்கியதுண்டு என்று தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.

இந்தியில் அமீர்கான் செய்த `சத்யமேவ ஜயதே' போல நிகழ்ச்சி ஏதும் செய்யாமல், இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே? என ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை. அவரை விடவும் அதிகமாக, நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன். இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன்" என்றார் கமல்ஹாசன்.
ஜூன் 25-ஆம் தேதி முதல் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதி நாட்களில் கமல் கலந்து கொள்ளுமாறு எபிசோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். சிறப்பு வழியில் செல்லாமல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அவர் வரிசையில் நின்றார்.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லை. அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர். கோவில் சன்னதி அருகில் வந்தபிறகுதான் பூசாரிகளுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. தட்டை வாங்கி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்தார். ஆனால் அனுஷ்காவின் தந்தை திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜைகளை நடத்தவில்லை என்று மறுத்தார்.
“லிங்கா படத்தில் அனுஷ்கா நடித்துக்கொண்டு இருந்தபோது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். தற்போது அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருப்பதால் மீண்டும் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்” என்று அவர் கூறினார்.








