என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தமிழகத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியின் பெயரை தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
    தமிழகத்தில் சமீபத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர். இந்த தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாகும். அவருடைய மறைவுக்கு பிறகு இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததால் இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதி இந்திய அளவில் பரவலாக பேசப்பட்டது.

    இந்நிலையில், இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க முன்வந்தார்.



    இந்த படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமலே இருந்து வந்தது. தற்போது இப்படத்திற்கு ‘ஆர்.கே.நகர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறார். வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார்.

     

    இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கவிருக்கிறார். வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எடிட்டிங் பிரவீன் கே.எல்., ஆர்ட் டைரக்டராக விதேஷ், காஸ்ட்யூம் டிசைனராக வாசுகி பாஸ்கர் ஆகியோரும் பணியாற்றவிருக்கிறார்கள்.

    சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படத்தின் வசூலை அமீர்கானின் ‘தங்கல்’ படம் முந்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் நிகழ்த்திய எல்லா சாதனைகளையெல்லாம் முறியடித்திருந்தது. வசூலில் இந்தியாவிலேயே ரூ.1000 கோடியை தொட்ட முதல் படம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் அமீர்கானின் ‘தங்கல்’ படம் இடம்பெற்றிருந்தது.

    இந்நிலையில், ‘பாகுபலி-2’ வெளியான சில நாட்களிலேயே ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியானது. அங்கு சுமார் 6000 திரையரங்குகளில் இப்படம் வெளியானதாக கூறப்பட்டது. ‘தங்கல்’ படத்திற்கு எதிர்பார்த்தபடியே சீனாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால், வசூலும் கணிசமாக உயரத் தொடங்கியது.



    இதையடுத்து ‘பாகுபலி-2’ படத்தின் வசூலை எட்ட துரத்திக் கொண்டே வந்தது ‘தங்கல்’. தற்போது ‘பாகுபலி-2’ படத்தின் வசூல் சாதனையை ‘தங்கல்’ படம் முறியடித்துள்ளது. ‘தங்கல்’ படம் ஒட்டுமொத்தமாக ரூ.1,665 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ‘பாகுபலி-2’ ரூ.1,633 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ‘பாகுபலி-2’ இன்னமும் சீனாவில் வெளியாகவில்லை. தற்போது அங்கு வெளியிடுவதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். சீனாவில் ‘பாகுபலி-2’ வெளியானால் ‘தங்கல்’ வசூலை அது முறியடிக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 
    விக்ரம் படப்பிடிப்பில் ரொம்பவும் கலகலப்பாக பழகுவார் என்று அப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ரீபிரியங்கா தெரிவித்துள்ளார்.

    விக்ரம் தற்போது நடித்து வரும் படம் ‘ஸ்கெட்ச்’. விஜயசந்தர் இயக்கும் இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ பிரியங்கா 2-வது நாயகியாக நடிக்கிறார் . அவருடன் நடிக்கும் அனுபவம் குறித்து ஸ்ரீபிரியங்கா கூறும்போது,

    ‘விக்ரம் படம் என்பதால் இதில் 2-வது நாயகியாக நடிக்க சம்மதித்தேன். அவர் முன்னணி நடிகர் என்பதால், முதல்நாள் படப்பிடிப்புக்கு பயந்து கொண்டே சென்றேன். ஆனால் அவர் மிகவும் அன்பாக பழகினார். நடிப்பு சொல்லிக்கொடுத்தார்.


    படப்பிடிப்பு இல்லாத மற்ற நேரங்களில் அனைவரிடமும் கலகலப்பாக பழகினார். மிகவும் நல்ல மனிதர் என்பதை தெரிந்து கொண்டேன். அதன்பிறகு அவர் மீது எனக்கு இருந்த பயம் நீங்கிவிட்டது. ‘ஸ்கெட்ச்’ படத்தில் தமன்னா நாயகி என்றாலும், எனக்கும் முக்கியமான வேடம். நாங்கள் 3 பேரும் இடம் பெறும் பாடலும் இதில் இருக்கிறது. இந்த படம் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக அமையும் என்று நம்புகிறேன்.

    இதுதவிர ‘பிச்சுவாகத்தி’ ‘மிகமிக அவசரம்’ ஆகிய படங்களில் நாயகியாக நடிக்கிறேன். இந்த 3 படங்களும் வரும் போது எனக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடம் கிடைக்கும். இனி பிரபல ஹீரோக்களுடன் நடிக்க விரும்புகிறேன். ஹீரோயிசம் உள்ள கமர்சியல் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

    காலா படத்தில் ரஜினி பயன்படுத்தும் காருக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.
    ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படத்துக்கு ‘காலா’ என்ற தலைப்பு உறுதியாகி, படப்பிடிப்பும் மும்பையில் தொடங்கிவிட்டது. இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி என முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து பிரபலமாகி வருகின்றன. ‘காலா’ படத்திற்காக இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

    அதில், ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி ஒரு ஜீப்பின் மீது ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வெளியிடப்பட்டது. ரஜினி அமர்ந்திருப்பது மகேந்திரா நிறுவனத்தின் ‘தார்’ என்ற மாடல் வகையை சேர்ந்த ஜீப் ஆகும்.



    இந்த போஸ்டரை பார்த்த மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தார்’ ஜீப்பை ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்துவது குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே தனக்கு தெரியப்படுத்தவும். அந்த காரை நாங்கள் வாங்கி, எங்கள் நிறுவனத்தின் ஆட்டோ அருங்காட்சியகத்தில் வைக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    படப்பிடிப்பு தொடங்கும்போதே அவர் பயன்படுத்தும் காருக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. இப்படத்தை தனுஷ் தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 
    ‘மதகஜராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலும், வரலட்சுமியும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    விஷால்-வரலட்சுமி நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ படம் முடிவடைந்தும் ஒருசில பிரச்சினைகளால் இன்னமும் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அதுவும் தடங்கலாகவே தற்போது வரைக்கும் அப்படம் ரிலீசாகுமா? ரிலீசாகாதா? என்ற மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

    இந்நிலையில் விஷாலும், வரலட்சுமியும் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்நிலையில், வரலட்சுமியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. வரலட்சுமி இப்படத்தில் வில்லியாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நமீதா தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மியா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். இவர்கள் மலையாளத்தில் 'ஸ்பீடு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்களாவர்.

    மேலும், இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, 'மியா' மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் - மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் மியா படத்தின் கதை.



    கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளனர்.

    இப்படத்தின் பெரும்பாலன காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மியா திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை 'இ' ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரித்துள்ளார்.
    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.
    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.

    பாரதிராஜா உதவி இயக்குனராகவும், இளையராஜா ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (என்.எப்.டி.சி.) உதவியோடு படம் எடுக்க `மயில்' என்ற கதையை பாரதிராஜா உருவாக்கினார். அதற்கான விண்ணப்ப மனுவில், திரைக்கதை, டைரக்ஷன் பாரதிராஜா என்றும், கேமரா நிவாஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இசை அமைப்பாளராக என் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டார்.

    நிதி உதவி எப்படி யும் கிடைத்துவிடும், படம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இழுத்துக்கொண்டே போயிற்று.

    பாரதிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று, அவர் தாயார் விரும்பினார்.

    விரைவில், சொந்தத்திலேயே பெண் பார்த்து முடிவு செய்தார்கள். மணமகள் பெயர் சந்திரலீலா.

    கல்யாண நாள் குறித்தார்கள். திருமண வேலைகள் ஆரம்பம் ஆயின. அப்போது அவினாசி மணி இயக்கத்தில் "தலைப்பிரசவம்'' என்ற படத்தை, கே.ஆர்.ஜி. தயாரித்துக் கொண்டிருந்தார். கே.ஆர்.ஜி.க்கு பாரதி மீது ரொம்பப் பிரியம். அது, அடுத்த படத்தை பாரதிக்கு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வளர்ந்தது. அவரே கல்யாண விஷயங்களில் கலந்து கொண்டு நிறைய உதவி செய்தார்.

    திருமணம் ஆன பிறகு, காரணீஸ்வரர் கோவில் தெருவில் ஒரு வீடு பார்த்துக்கொண்டு, பாரதிராஜா குடியேறினார். பாரதிராஜாவின் அம்மா கொஞ்சநாள் வந்து இருந்துவிட்டுப் போனார்கள்.

    திருமணத்துக்குப்பின், நானும், பாரதியும் சந்திப்பது குறைந்து போயிற்று. அதைப் புதுப்பித்துக் கொள்ள நாங்கள் எப்போதாவது கடற்கரைக்கோ, டிபன் சாப்பிட லஸ் கார்னருக்கோ போய் வருவதுண்டு.

    அப்படி போகும்போது ஒருநாள், புதிய போட்டி ஒன்றை பாரதிராஜா தொடங்கினார்.

    நான் எப்போதும் ஜி.கே.வி., குமார், விஜயபாஸ்கர், ராஜன், நாகேந்திரா, ராகவலு, உபேந்திரகுமார், தேவராஜன், ஏ.டி.உமர், பாபுராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கிட்டாரோ, காம்போவோ வாசிக்கப்போய் வருவதைப் பார்த்த பாரதிராஜா, அதுபற்றி குறிப்பிட்டார். சிலர் வாழ்நாள் முழுவதும் உதவி டைரக்டராகவே காலம் கழித்துவிட்டு, அறுபது வயதுக்கு மேலும் வேலை செய்வதை சுட்டிக்காட்டினார்.

    பிறகு, "டேய்! நீ எல்லாம் மிïசிக் டைரக்டர் ஆக முடியாது போலிருக்கே! இப்படி கிட்டார் வாசிச்சுக்கிட்டே இருக்கணும்னு விதியோ என்னமோ! ஆனா ஒண்ணு! நீ மிïசிக் டைரக்டரா எப்போது ஆகமுடியும் தெரியுமா? நானெல்லாம் ஒரு இருபத்தஞ்சு முப்பது படம் டைரக்ட் பண்ணி, எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி பேர் எடுத்துப் புகழோடு இருக்கிறபோது, `சரி, போனாப்போகுது, நம்ம இவனுக்கு ஒரு படம் கொடுப்போம் என்று கொடுத்தாத்தான் நீ மிïசிக் டைரக்டர் ஆக முடியும்!'' என்றார்.

    எனக்குத்தான் மிïசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஐடியாவே இல்லையே! இசையைக் கற்றுக்கொண்டால் போதும் என்று இருக்கிறபோது பாரதி ஏன் இப்படி பேசுகிறார்! நாமும் ஒரு உதார் விடுவோம் என்று நினைத்தேன்.

    "பாரதி! நீ பெரிய டைரக்டர் ஆகு, அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனா, உன் படத்துக்கு நான் மிïசிக் பண்ணணும்னா, உன்னை புட்டண்ணாவிடம் அனுப்பி அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்த்து விட்டாரே ஜி.கே.வி, அவர் உன் படத்துக்கு மிïசிக் பண்ணியிருக்க வேண்டும். அதற்கப்புறம் அவர் என்னிடம், `டேய், ராஜா! போனாப் போகுது. பாரதி படத்துக்கு மிïசிக் பண்ணுடா' என்று சொன்னாத்தான் நான் மிïசிக் பண்ணுவேன். இல்லேன்னா பண்ணவே மாட் டேன்'' என்று சபதம் செய்தேன்.

    பெண்டியாலா சீனிவாசன் என்ற தெலுங்கு இசை அமைப்பாளர் இசை அமைக்கும் தமிழ்ப்படமான "பட்டாம்பூச்சி'' படத்துக்கு, உதவி இசை அமைப்பாளராக கோவர்த்தன் பணியாற்றினார். இவர் எம்.எஸ்.வி. அவர்களிடம் உதவி இசை அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

    இந்தப் படத்திற்கு கதை - வசனம்: ஏ.எஸ்.பிரகாசம். கமலஹாசன் ஹீரோ. ஜெயசித்ரா கதாநாயகி.

    இந்தப் படத்திற்கு கோம்போ ஆர்கன் வாசிக்க கோவர்த்தன் என்னை அழைத்தார். நானும் சம்மதித்து, வாசித்தேன். என் வாசிப்பைப் பார்த்துவிட்டு எனக்கு நிறைய சான்ஸ் கொடுத்து, பல இடங்களில் வாசிக்க வைத்தார்.

    ஒருநாள் சாப்பாடு இடைவேளை முடிந்து நான் வேலை தொடங்குவதற்கு முன், அவருக்கு இசையமைக்க ஒரு படம் வந்திருப்பதாக சொன்னார். "நíயும், நானும் சேர்ந்து இசை அமைக்கலாமா? பெயரை `கோவர்த்தன் - ராஜா' என்று போட்டுக்கொள்ளலாம்'' என்றார்.

    "சரி'' என்று சொல்லிவிட்டேன்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்று நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன் என்று நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன். அரசியல் சிஸ்டம் சரியில்லை” என்று கூறினார்.

    ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சினிமா துறையில் இருந்து பல பிரபலங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்று நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன் என்று நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.



    இது குறித்து அவர் கூறுகையில், “இவரு இதுக்கு தான் லாயக்கு என்று சொல்ல முடியாது. வராரு வரவில்லை என்பது அவரது தனிப்பட்ட விஷயம், அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வந்தால் நல்லா இருக்கும் என்பது எங்க எல்லோருடைய நம்பிக்கை. அப்படி நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன்” என்றார்.
    திறப்பு விழா படத்தின் கதாநாயகன் ஜெய் ஆனந்த், ‘மரகத நாணயம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூலம் ராகவா லாரன்சால் அறிமுகப்படுத்தவர் நடிகர் ஜெய் ஆனந்த். மதுவிலக்கை வலியுறுத்தி சமீபத்தில் வெளியான ‘திறப்பு விழா’ படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் ஜெய் ஆனந்த்.

    ‘திறப்பு விழா’ படத்தின் இயக்குனர் கே.ஜி.வீரமணி, ஜெய் ஆனந்தை தியேட்டர் லேப் மற்றும் கோமல் சுவாமிநாதனின் நாடகக் குழுக்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது இவரது சிறந்த நடிப்பாற்றலை பார்த்து தேர்ந்தெடுத்து ‘திறப்பு விழா’ படத்தில் கதநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.



    முதல் படத்திலேயே மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் நாயகன் வேடத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன் என்கிறார் ஜெய் ஆனந்த். அடுத்து நிக்கி கல்ராணியுடன் இணைந்து எதிர்நாயகனாக ‘மரகத நாணயம்’ படத்தில் நடித்து வருகிறார். நாயகனாக ஆதி நடிக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷுடன் ‘4ஜி’ படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். ‘முண்டாசு பட்டி’ படத்தின் இயக்குனர் ராம் இயக்கும் ‘மின்மினி’ படத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் ஜெய் ஆனந்த் நடிக்கிறார்.

    இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. கவிப்பேரரசு வைரமுத்துவின் உறவுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஜெய் ஆனந்தை தன்னுடைய மகன் போல் பாவித்துவரும் சிவகுமார் தான் இவரது திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி வலம்வரும் நடிகர்கள் இருவருடனும் ஜோடி போட்டவர் அந்த நடிகை. தம்பி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு அந்த படம் கைவிட்டாலும், அண்ணன் நடித்த மாஸான படம் கொஞ்சம் நடிகையை தூக்கிவிட்டது. இருந்தாலும், அந்த நடிகைக்கு தமிழ் சினிமா அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதனால், தனது கவனத்தை வேறு மொழி பக்கம் திருப்ப ஆரம்பித்தார்.

    நடிகையின் போதாத காலமோ என்னவோ, அங்கேயும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த அந்த நடிகை தற்போது விபரீத முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அது என்னவென்றால், மாடலிங்க் துறையில் அந்த நடிகை இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.



    சினிமாவைவிட மாடலிங்கில் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் கேட்பவர்களிடம் எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு வருகிறாராம். ஆனால், உண்மையில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்தான் மாடலிங்குக்கு கீழிறங்கி வந்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் யார்? என்பது குறித்த முழு விவரங்களும் வெளியாகியுள்ளது.
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் காலா படத்தை, பா.இரஞ்சித் இயக்குகிறார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்தான். அவருக்குப் பின் இந்தப் பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே. காலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.



    இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.



    இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணையும் நான்காவது படம் இது. கபிலன், உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.



    ‘காலா’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி மும்பையில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம் என்று சென்னிமலை முருகனை தரிசித்து விட்டு வெளியே வந்த நடிகர் பார்த்திபன் கூறினார்.
    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு நடிகர் பார்த்திபன் வந்தார். சென்னிமலை முருகனை தரிசனம் செய்தார். அப்போது பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூப்பர் ஸ்டார்ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.


    ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை. இருந்தால் இது குறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம்.

    இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

    ×