என் மலர்

  நீங்கள் தேடியது "Vijay Chandar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. #Sangatamizhan #VijaySethupathi
  `சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

  தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #Sangatamizhan #VijaySethupathi #VijayChandar 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘96’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைய இருக்கிறார் விஜய் சேதுபதி. #VijaySethupathi
  விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘96’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தை அடுத்து சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தையும் விக்ரமை வைத்து ‘ஸ்கெட்ச்’ படத்தையும் இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

  இந்த புதிய படத்தை அஜித்தின் வீரம், விஜய்யின் பைரவா படத்தை இயக்கிய விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.   இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. 
  ×