என் மலர்
கவர்ச்சிகரமாக நடிப்பதில் புகழ் பெற்ற ரோஜா, "பொட்டு அம்மன்'' என்ற பக்திப் படத்தில் நடித்தார். இது, அவருடைய நூறாவது படம்.

தமிழில் கார்த்திக் -ரம்பா நடித்து பெரும் வெற்றியை எட்டிய படம் "உள்ளத்தை அள்ளித்தா.''
இந்தப் படத்தில் ரம்பா நடித்த கேரக்டரில் முதலில் ரோஜாதான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் பிரபுவுடன் "பரம்பரை'', விஜயகாந்துடன் "தமிழ்ச்செல்வன்'' என்று 2 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் "உள்ளத்தை அள்ளித்தா'' படத்தில் நடிக்க முடியவில்லை.
ஆனால், இந்த ஏமாற்றத்தை விக்ரமன் இயக்கிய "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் போக்கிவிட்டது. விக்ரமன் தனது புதிய படத்தின் நாயகி ரோஜா என்று அறிவித்ததும், விக்ரமனின் நட்பு வட்டம் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். "ரோஜா கிளாமர் நடிகை. உங்கள் படத்தின் கதாநாயகியாக நடிக்க அவர் பொருத்தமாக இருக்கமாட்டார்'' என்று கூறினார்கள். ஆனால் விக்ரமன், "என் படத்தின் கதாநாயகி கேரக்டரை ரோஜா அப்படியே பிரதிபலிப்பார்'' என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
விக்ரமன் கணிப்புப்படியே, ரோஜாவும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தார்.
இந்தப்படம் கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் கூட பிரமாதமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் -சவுந்தர்யா நடிக்க `ரீமேக்' செய்தார்கள். தெலுங்கில் இந்தப்படம் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.
இந்த வெற்றியில்தான் ரசிகர்களால் ரோஜா ரொம்பவும் கவனிக்கப்பட்டார். ரோஜா எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையை "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் ஏற்படுத்தியது.
வேலுபிரபாகரன் இயக்கிய "கடவுள்'' படத்தில், ரோஜா மேக்கப் எதுவும் போடாமல் நடித்திருந்தார்.
ரஜினியுடன் ரோஜா நடித்த இரண்டாவது படம் "வீரா.''
இந்தப் படத்தில் காமெடி பிரதானமாக இருந்தது. ரோஜாவுடன் இன்னொரு நாயகியாக மீனாவும் நடித்தார். ரஜினிக்கு இரண்டு பேரை ஜோடிகளாகப் போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை "வீரா'' நிரூபித்தது.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம். ரோஜா -மீனா இருவருமே, படத்தில் ஒருவரை ஒருவர் "அக்கா'' என்று அழைத்துக்கொண்டார்கள்!
"வீரா'' படத்தில் ரஜினியுடன் காமெடிக் காட்சியிலும் சிறப்பாக ரோஜா நடித்தார்.
ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடித்தபோதே அவருடன் நல்ல நட்பு இருந்தது. `வீரா' படத்தில் இந்த நட்பு புதுப்பிக்கப்பட்டு, நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்தார், ரோஜா.
இரண்டு நாயகிகள் நடிக்கும் படம் என்றால் அதில் தனது கேரக்டர் பற்றி, முன்னதாகவே முழுமையாக ரோஜா தெரிந்து கொள்வார். இந்தப் படத்தில் கிராமத்துப் பின்னணியில் வரும் காட்சிகளில் மீனாவும், நகரப் பின்னணியில் ரோஜாவும் என ஜோடிகள் சமமாக இருந்ததால், உற்சாகமாக நடித்தார், ரோஜா.
ரோஜாவின் நூறாவது படம் "பொட்டு அம்மன்.''
சினிமா நட்சத்திரங்களுக்கு நூறாவது படம் என்பது, முக்கியமான மைல் கல். "என்னுடைய நூறாவது படம் பக்திப் படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை. "உழைப்பது நம் கடமை. பலன் தருவது இறைவன் அல்லவா'' என்று கூறுகிறார், ரோஜா.
சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த நேரத்திலேயே, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது ரோஜாவுக்கு. "நதி எங்கே போகிறது'' என்ற தொடரில் நடிக்க கணிசமான சம்பளமும் பெற்றார் ரோஜா. ஆயினும் அந்த தொடரை ரோஜாவினால் தொடர முடியவில்லை. காரணம், சம்பளம் அதிகம் என்பதால் தினமும் ஏராளமான காட்சிகளை எடுத்துக் குவித்தார்கள். இதனால், மன நிறைவு அளிக்கும் வகையில் நடிக்க முடியாது என்று கருதிய ரோஜா, இடையிலேயே விலகிக்கொண்டார்.
அதன் பிறகு வந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசையமைத்து பாடியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு 3 சகோதரிகள், மூத்தவர் ரைஹைனா. இவர் மகன்தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்னொருவர் பாத்திமா. கடைக்குட்டி இஷ்ரத் காதரி. இவரும் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசைமைத்து, பாடியிருக்கிறார். இலங்கை தமிழரான ராஜுதிருச்செல்வன் அந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
அந்த வாய்ப்பு குறித்து கூறிய இஷ்ரத்... ''அண்ணன் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் நான் பாடுவேன். ‘ஐ’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடி இருக்கிறேன்.

ஐ.நா.சபையில் அண்ணன் நடத்திய நிகழ்ச்சிக்காக ரிகர்சல் செய்து கொண்டிருந்த போது ராஜ் திருச்செல்வன் என்னை பார்த்து இந்த வாய்ப்பை கொடுத்தார். அது ஹாலிவுட் படமாக இருந்தாலும் கனவுகள் பலித்தது என்ற தமிழ் பாடல் அதில் இடம் பெறுகிறது. நானும் கவிஞர் குட்டி ரேவதியும் சேர்ந்து ஏழுதியிருக்கிறோம். நான் பாடி, இசையமைத்து இருக்கிறேன். சென்னையிலே ஒலிப்பதிவு செய்து இருக்கிறேன். பாடலை கேட்ட அண்ணன் பாராட்டினார்.
லேட்டஸ்ட்டாக, ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகும் ‘மாம்’ படத்தின் தமிழ் பதிப்பில் ‘ராட்சத தீ ஒன்று’ என்ற பாடலை பாடியிருக்கிறேன். இந்த படத்துக்கு அண்ணன் தான் இசை. அவர் மாதிரி யாரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய முடியாது” என்றார்.

தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சி விட்டது. அந்த ஊழலில் சினிமா துறை சிக்கி தவிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சி விட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால் தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தியேட்டர் அதிபர்கள், திரையரங்குகளை காலவரையின்றி மூடி விட்டனர். தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்து நிற்கிறது.
தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியின் கிழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை பொறுத்தவரை சினிமா துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை.

தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரியை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு விலக்கு அளித்துள்ளன. கேரள சினிமா துறையினர் அம்மாநில முதல்வரிடம் வரி விதிப்பு குறித்து வேண்டுகோள் வைத்தனர்.
அவர் உடனடியாக திரைப்படத்துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா அரசுகளும் சினிமா துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் சினிமாத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக்கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இரட்டை வரி விவகாரத்தில் திரைத்துறையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்த்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.
சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரட்டை வரி விதிப்புக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படும் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்து தெரிவித்து இருந்தார்.
சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், இரட்டை வரி விவகாரத்தில் திரைத்துறையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்த்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், “முதலில் குரல் கொடுப்போம் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரியால் தியேட்டர்கள் மூடப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிப்பதாக டைரக்டர் டி.ராஜேந்தர் பேட்டி அளித்துள்ளார்.
திரைப்படங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும், தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியையும் எதிர்த்து லட்சிய தி.மு.க. தலைவரும், சினிமா டைரக்டருமான டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எதிரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், சுரேஷ் காமாட்சி, பி.டி.செல்வகுமார், பிரிமுஸ்தாஸ், சவுந்தர், தம்பிதுரை, அமீர், எஸ்.ராஜா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் கருப்பு கொடியுடன் திரண்டு ஜி.எஸ்.டி., கேளிக்கை வரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“திரைப்படங்களுக்கு இரட்டை வரி விதித்து இருப்பதால் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும், 30 சதவீத கேளிக்கை வரியையும் எங்களால் செலுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இந்த வரி விதிப்புக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி இருக்கிறார்கள்.
இதனால் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். தியேட்டர்கள் மூடப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. 10 நாட்கள் தியேட்டர்களை மூடினால் குற்றங்கள் பெருகி சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். பல மாநிலங்கள் கேளிக்கை வரியில் இருந்து திரைப்படத்துறைக்கு விலக்கு அளித்து உள்ளன.
தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்துசெய்து திரைப்படத்தொழிலை காப்பாற்ற வேண்டும். வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால் திரைப்பட வர்த்தக சபை முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன். இதற்காக போலீசார் என்னை கைது செய்தாலும் கவலை இல்லை”.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் 2-வது நாளாக மூடப்பட்டன. கேளிக்கை வரி பிரச்சினை குறித்து அமைச்சர்களுக்கும், திரையுலகினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கிறது.
சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்று இரண்டு வகை ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணமுள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்றும், 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணமுள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் என்றும் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிராந்திய மொழி படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திரையுலகினர் விதித்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் நிறைவேற்றி உள்ளது.
இரட்டை வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று முன்தினம் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தினார்கள். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இந்த போராட்டத்தில் அவர் கள் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்றும்(செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 1,000 தியேட்டர்களில் அனைத்து சினிமா காட்சிகளும் இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டன.
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருந்த 10 புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து படங்களை மீண்டும் திரையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் தமிழக அரசுக்கும் திரையுலகினருக்கும் இடையே கேளிக்கை வரி பிரச்சினை குறித்து தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர்களையும் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்(பெப்சி) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் திரையுலக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். கேளிக்கை வரி முழுமையாக ரத்து செய்யப்படுமா? அல்லது 30 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்று(புதன் கிழமை) போராட்டம் வாபஸ் பெறப்பட்டு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூஷா குமார் ஜோடி சேரும் ‘மாணிக்’ படத்தின் முன்னோட்டம்.
மோகிதா சினி டாக்கீஸ் நிறு வனம் சார்பில் எம். சுப்பிரமணி யன், தயாரிக்கும் படம் ‘மாணிக்‘.
மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இதில் நாயகியாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - தரன்குமார், ஒளிப்பதிவு - எம்.ஆர்.பழனிகுமார், படத்தொகுப்பு- கே.எம்.ரியாஸ். கலை - வினோத், இயக்கம் - மார்டின்.

படம் குறித்து இயக்குனர் மார்டின் கூறும்போது, “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா? என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர் களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ்.
காமெடி கலந்த பேண்டசி படமாக ‘மாணிக்’ உருவாகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் நடைபெறுகிறது.

சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரட்டை வரி விதிப்புக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படும் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரி விவகாரத்தில், சினிமா துறையில் பணியாற்றி வரும் பல்வேறு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைத்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொள்ளவும் ரஜினி வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, ஜி.எஸ்.டி., கேளிக்கை வரி பிரச்சனையில் சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும், நாம் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.

காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-
"தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.
செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.
ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.
இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.
காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.
எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
"உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.
அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.
இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.
ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.
காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.
ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).
இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.
அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.
ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.
ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.
அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.
இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.
ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து விவாகரத்து பெற முடிவு செய்தனர்.
இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு கடந்த ஜூன் 23-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுந்தர்யாவும், அஸ்வினும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் பரஸ்பரம் விவாகரத்து பெறப் போகிறீர்களா? இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். ஆனால், அவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாகவும், அவர்களின் திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார். இந்து திருமண சட்டத்தின்படி 6 மாத அவகாசத்திற்குப் பின் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

இனி சினிமாவில் குத்தாட்டம் ஆடும் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கேத்தரின் தெரசா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது. இது தவிர படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி வருகிறார். அடுத்து பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கும் ‘ஜெய ஜானகி நயகா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்து இருக்கிறார். இதற்கு சம்பளம் ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது.
இது பற்றி கேத்தரின் தெரசா கூறுகையில், “இந்த படத்தை இயக்கும் போயப்பட்டி சீனு கேட்டுக்கொண்டதால் இதில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறேன். அவருக்காகத்தான் இதற்கு ஒப்புக்கொண்டேன்.
இதுவே கடைசி. இனி குத்தாட்டம் போட மாட்டேன். அவர் ‘சரைநோடு’ என்ற தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். எனவே ஒரு பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டேன். இனி அழுத்தமான வேடங்களில் மட்டும் தான் நடிப்பேன்” என்கிறார்.

இந்தி பட நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை அணியாமல் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்த கவர்ச்சி போஸ் கொடுத்து இணையதளங்களில் வெளியிடுவது ‘பேஷன்’ ஆகி விட்டது. இப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பத்திரிகைக்காக மேலாடை அணியாமல் போஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் மேலாடை அணியாமல், அவரது முன் அழகை கூந்தலால் மறைத்தப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு இருக்கிறார். இந்த படத்தை பார்த்த சில ரசிகர்கள் அவர் மிகவும் அழகாக இருப்பதாக புகழ்ந்துள்ளனர். பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
ஜாக்குலின் நாயகியாக நடித்துள்ள ‘ஜூட்வா-2’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. எனவே ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காகத்தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று இந்தி பட உலகினர் பேசிக் கொள்கிறார்கள்.