search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாக்குலின் பெர்னாண்டஸ்"

    • சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • உன் இதயத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ளார்.

    தற்போது வெளியாகியுள்ள அக்கடித வரிகள் வருமாறு:-

    'என்னோட பொம்மா (அழகுப் பொம்மையே), நான் எனது பிறந்தநாள் வேளையில் உன்னை ரொம்பவே 'மிஸ்' செய்கிறேன். என்னைச் சுற்றி உனது சக்தி இல்லாது தவிக்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் என் மீதான உன் அன்பு எப்போதும் முடிவடையாது, என் மீது முழுமையாக உள்ளது என்பதை நானறிவேன். உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதற்கு எந்தச் சான்றும் தேவையில்லை. உன் அன்புதான் எனக்கு முக்கியம் பேபி.

    நான் உன்னை 'மிஸ்' செய்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். என் 'பொட்ட பொம்மா' (கொழுகொழு பொம்மையே)... நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாய். நீயும், உனது அன்பும் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசுகள். என் வாழ்வில் அவை விலைமதிப்பற்றவை. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என்பதை நீ அறிவாய். என் பேபியே... உன்னை நேசிக்கிறேன். உன் இதயத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. எனது பிறந்தநாளில் வாழ்த்திய என்னுடைய அனைத்து ஆதரவாளர்கள், நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நூற்றுக்கணக்கான கடிதங்கள், வாழ்த்துகளைப் பெற்றேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நன்றி.'

    இப்படி நெகிழ்ந்து, மகிழ்ந்து, காதலை பிழிந்து கடிதம் எழுதியிருக்கிறார், சுகேஷ் சந்திரசேகர்.

    • சமீபத்தில் ஜாக்குலினுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவிடப்பட்டது.
    • ரூ.200 கோடி மோசடி நடிகை ஜாக்குலினின் ஜாமீனை டெல்லி கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

     

    அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இதற்கிடையே இதுதொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 26-ந்தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

     

    இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார். இதை ஏற்ற கோர்ட்டு ரூ.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 22-ந்தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்திருந்த நிலையில், ஜாக்குலினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை நவம்பர் 10-ந்தேதி வரை நீட்டித்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

     

    • ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
    • தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஆஜராக இயலாது என்று ஜாக்குலின் போலீசுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தள்ளி வைத்து, இன்னொரு தேதியில் ஆஜராக மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜராகியிருந்தார்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதாக குற்றச்சாட்டு
    • விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இரானி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகி, போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். விசாரணையின் முடிவில் ஜாக்குலின் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஜாக்குலின் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • அக்சய்குமார் சொல்லியும் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பை ஜாக்குலின் விடவில்லை.
    • அவரிடம் வங்கி கணக்குகள், அவற்றின் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை விட்டு விலகுமாறு நடிகர் சல்மான்கான் சொல்லியும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் நேற்று மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

    டெல்லியில் தொழில் அதிபர் மனைவியிடம் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி பணத்தை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் அதிகமாக செலவழித்தாக கூறப்படுகிறது. வேறு சில நடிகைகளும் ஆதாயம் பெற்று இருந்ததாக கூறப்பட்டாலும் அவர்களில் பலர் வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர்.

    ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மீதான நல்ல அபிப்ராயத்தில் அவரை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விட்டுக்கொடுக்கவே இல்லை என கூறப்படுகிறது. நடிகர்கள் சல்மான்கான், அக்சய்குமார் உள்ளிட்டோர் சொல்லியும் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பை ஜாக்குலின் விடவில்லை. இதனால் அவர் அமலாக்க விசாரணையிலும், பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையிலும் சிக்கிக்கொண்டு தவிப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    வழக்கு தொடர்பாக கடந்த புதன்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரை சுகேஷ் சந்திரசேகரிடம் அறிமுகப்படுத்திய பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரது வாக்குமூலங்களும் முரண்பட்டன. இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அதன்பேரில் நேற்று அவர் விசாரணைக்காக ஆஜர் ஆனார். காலை 11 மணிக்கு போலீசார் அவரை வரச்சொல்லி இருந்தனர். அதையடுத்து ஜாக்குலினின் வக்கீல்கள் நேற்று முன்தினம் இரவே டெல்லியில் முகாமிட்டனர். இதனால் காலை 11 மணிக்கு ஜாக்குலின் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிற்பகல் 2 மணி அளவிலேயே அவர் விசாரணைக்காக வந்தார்.

    அவரிடம் வங்கி கணக்குகள், அவற்றின் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர். பெற்றோரின் வங்கி பரிவர்த்தனைகளும் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பித்து, போலீசார் கேட்ட கேள்விகளுக்கும் ஜாக்குலின் பதில் அளித்துள்ளார்.

    மணிக்கணக்கில் விசாரணை தொடர்ந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை இந்த விசாரணையின் இறுதியிலேயே அறிய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    • டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி ஜாக்குலின் பெர்னான்டசுக்கு சம்மன்.
    • டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர்.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஆஜராக இயலாது என்று ஜாக்குலின் போலீசுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தள்ளி வைத்து, இன்னொரு தேதியில் ஆஜராக மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று (14.09.2022) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

    இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் இன்று ஆஜரானார். 

    ×