என் மலர்
ஆந்திர பிரதேசம்
- சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
- இந்த ராக்கெட் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் வானை கிழித்துக் கொண்டு புறப்பட்டது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.53 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலை நிறத்தப்படுகிறது. இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தியுள்ளது.
- அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
- பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியால் அடுத்த சார்பு ரேவூவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் சுப்பம்மா (வயது 60), தினேஷ் (10) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன்.
- இந்த முடிவு முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. எந்த நெருக்கடியும் இல்லை.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயசாய் ரெட்டி. இவர் நாளை தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பதவியில் கூறியிருப்பதாவது:-
நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன். நாளை எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையமாட்டேன். எந்தவொரு பதவி, ஆதாயம் அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு ராஜினாமா செய்யவில்லை. இந்த முடிவு முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. எந்த நெருக்கடியும் இல்லை. என் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விஜயசாய் ரெட்டி பார்க்கப்படுகிறார். இது அவருடைய 2-வது மாநிலங்களவை உறுப்பினர் பதவியாகும்.
- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன் திருடனாக உள்ளதை எண்ணி மவுனிகா மனம் வருந்தினார்.
- போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கம்மத்தை சேர்ந்தவர் மவுனிகா (வயது31). இவரது பெற்றோர் சூரியா பேட்டையில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு முடித்த மவுனிகா போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக விஜயவாடாவில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று வந்தார்.
அப்போது நிதானபுரத்தை சேர்ந்த ஷேக் பாஜி என்பவரும் பயிற்சி வகுப்புக்கு வந்தார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மவுனிகாவை திருமணம் செய்வதற்காக ஷேக் பாஜி அவரை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார்.
இதனை அறிந்த மவுனிகாவின் பெற்றோர் ஷேக் பாஜி ஊருக்கு சென்று அவரை திருமணம் செய்யக்கூடாது என மகளிடம் அழுது புலம்பினர். ஆனால் மவுனிகாவின் மனம் இறங்கவில்லை.
இதையடுத்து ஷேக் பாஜி மவுனிகாவின் பெயரை பிரேகா என மாற்றினர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தம்பதிக்கு மெஹத் (5), மெனுருல் (4). என 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் ஷேக் பாஜி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கம்மம் போலீசார் பைக், செல்போன் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக ஷேக் பாஜியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன் திருடனாக உள்ளதை எண்ணி மவுனிகா மனம் வருந்தினார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மவுனிகா குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
- பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாக இருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு துணை முதல் - மந்திரி பதவி கோரிக்கை எழுந்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு கூறியதாவது 'தொழில், திரைப்படம், அரசியல், குடும்பம் என எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
ஒரு தலைமுறை தொழிலில் சிறந்து விளங்கி நன்றாக சம்பாதித்தால் அடுத்த தலைமுறை அதை இழக்க நேரிடும்.
நம் நாட்டில் ஒரு காலத்தில் பலம் வாய்ந்த கட்சிகள் பின்னர் காணாமல் போய்விட்டன. பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை. இது சில சிறந்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது முக்கியம். அதை சரியான முறையில் பெற்றால் மட்டுமே மேன்மை அடைய முடியும். நான் வாழ்வாதாரத்திற்காக அரசியலைச் சார்ந்து இருந்ததில்லை.
நான் 33 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தொழிலைத் தொடங்கினேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். இதே தொழிலை தொடர்ந்திருந்தால் லோகேஷ்க்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தார். அதில் அவர் திருப்தி அடைந்துள்ளார். இதில் வாரிசு உரிமை இல்லை'
மத்திய அரசில் சேரும் எண்ணம் இல்லை. மாநிலத்திலேயே இருப்பேன் திறமை மற்றும் செயல்திறனால் மட்டுமே லோகேஷ் வாரிசாக வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் வாரிசு குறித்து கடந்த காலங்களிலும் விவாதிக்கப்பட்டது. என்.டி. ராமாராவ் முதல் மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் பாலகிருஷ்ணாவை அரசியல் வாரிசாக அறிவித்தார்.
ஆனால் ஐதராபாத் திரும்பிய அவர் கட்சித் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.
மேலும், 2014 தேர்தலுக்கு முன், நந்தமுரி ஹரிகிருஷ்ணா தனது குடும்பத்தில் வாரிசு பிரச்சினையை எழுப்பினார். அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆரை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க சந்திரபாபுவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி ஒரு கருத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
இப்போது எதிர்பாராத விதமாக தெலுங்கு தேசம் கட்சியில் மீண்டும் அதே விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் சந்திரபாபு தொடக்கத்திலேயே அதைத் தடுத்து நிறுத்தி உள்ளார்.
- வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
- துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜிசிகடம், சுதம்பேட்டையை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 85). வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் அவதி அடைந்து வந்தார்.
அப்பாராவை அவரது உறவினர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் டாக்டர்கள் அப்பாராவை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பாராவை அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். வரும் வழியில் அவரது உடல் அசையவில்லை. அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர். இது குறித்து வரும் வெளியிலேயே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.
அப்பாராவின் உடலை கழுவி சுத்தம் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அவரது உடலை பாடையில் தூக்கி வைத்தனர். அதனை தூக்கி சென்றனர்.
அப்போது அப்பாராவ் திடீரென கண் திறந்து, கால்களை அசைத்தபடி எழுந்து உட்கார்ந்தார்.
இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
- மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவைகளை வழங்க உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்-அப் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜயானந்த் கூறுகையில், `முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் படி மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவைகளை வழங்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, சுகாதார அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
- சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் 1.20 லட்சம் பக்தர்களுக்கு ரூ.300 கட்டண டிக்கெட் வழங்கப்பட்டது.
- 1 லட்சத்து 83 ஆயிரத்து 132 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 10 நாட்களாக சொர்க்க வாசல் (வைகுண்ட துவார தரிசனம்) வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த 10-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் 1.20 லட்சம் பக்தர்களுக்கு ரூ.300 கட்டண டிக்கெட் வழங்கப்பட்டது.
கடந்த 10 நாட்களில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 304 பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் 1 லட்சத்து 83 ஆயிரத்து 132 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூ.34 கோடியே 43 லட்சத்தை காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் ஆகம சாஸ்திரப்படி சொர்க்கவாசல் கதவுகள் மூடப்பட்டன.
- ஆந்திர அரசியலில் அனல் பறக்கும் அளவுக்கு விவாதங்கள் நடந்து வருகின்றன.
- தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணியில் சிக்கல்
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஜனசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாகவும், ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாகவும் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
மந்திரியாக உள்ள நாரா லோகேஷ்க்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என முன்னாள் மந்திரியும் தெலுங்கு பேசும் எம்.எல்.ஏ.வான சோமி ரெட்டி சந்திரமோகன் ரெட்டி மற்றும் பொலிடா பீரோ உறுப்பினர் சீனிவாச ரெட்டி மூத்த கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக லோகேஷ் நடை பயணமாக சென்று நேரடியாக மக்களை சந்தித்தார் இதனால் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியில் 1 கோடி பேரை உறுப்பினராக சேர்த்து இருக்கிறார். இதனால் லோகேஷ் துணை முதல் மந்திரி பதவிக்கு 100 சதவீதம் தகுதியானவர் என தெரிவித்துள்ளனர்.
தற்போது துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பதவி வகித்து வரும் நிலையில் லோகேஷிற்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் வலுத்து வருகிறது.
அவருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்கப்பட்டால் பவன் கல்யாணின் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் தற்போது ஆந்திர அரசியலில் அனல் பறக்கும் அளவுக்கு விவாதங்கள் நடந்து வருகின்றன.
- காட்டு யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்தது.
- கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், கந்துலவாரி பள்ளியை சேர்ந்தவர் ராகேஷ் சவுத்ரி. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் அப்பகுதி இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார்.
மேலும் கந்துல வாரி பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று சின்ன ராமபுரம் மற்றும் கொங்கரவாரிப்பள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்தது. அப்பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, வாழை, நெல், தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது.
நேற்று இரவு யானைகள் கூட்டம் விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் ராகேஷ் சவுத்ரிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராகேஷ் சவுத்ரி விவசாய நிலத்தில் இருந்த யானைகள் கூட்டத்தை விரட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த யானைகள் கூட்டம் ராகேஷ் சவுதிரியை துரத்தியது.
ராகேஷ் சவுத்ரி யானைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அலறி கூச்சலிட்டபடி ஓடினார். ஆனால் ஆக்ரோஷமாக இருந்த யானைகள் கூட்டம் விடாமல் துரத்தி வந்து காலால் மிதித்து கொன்றது.
இதனை கண்ட கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் ராகேஷ் சவுத்ரி பிணத்தை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏ புலிவர்த்தி ஞானி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
- நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர உள்ளதாக கூறப்பட்டது.
- திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் பின்வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி கூட்ட நெரிசல் உயிரிழப்பு, லட்டு கவுன்ட்டர் தீ விபத்து என அடுத்தடுத்து விபத்து நடந்தது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தது.
நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் பின்வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- துணை முதல் மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண்.
- விமானம் எந்த திசையில் இருந்து வந்தது என்று விசாரணை.
திருப்பதி:
ஆந்திர மாநில துணை முதல் மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண். இவரது வீடு மற்றும் ஜனசேனா கட்சி அலுவலகம் குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ளது.
நேற்று மதியம் அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊழியர்கள் இருந்தனர். அப்போது ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பவன் கல்யாண் வீட்டின் மீதும் அலுவலகம், மீதும் பறந்து சென்றது. இதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் டிஎஸ்பி முரளி கிருஷ்ணா இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் கடைகளில் இருப்பவர்களிடம் ஆளில்லா குட்டி விமானம் எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி சென்றது. எவ்வளவு உயரத்தில் பறந்தது. எவ்வளவு நேரம் பறந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குட்டி விமானத்தில் ஆட்கள் இருந்தார்களா? அல்லது ஆளில்லா குட்டி விமானம் மூலம் பவன் கல்யாண் வீடு மற்றும் அலுவலகத்தை வேவு பார்பதற்காக குட்டி விமானத்தை யாராவது அனுப்பி வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






