என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
அமராவதி:
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோழிகள் மர்மமான நோய் பாதிப்புக்கு ஆளாகி இறந்தன. அங்கு கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் தாமோதர் நாயுடு கூறுகையில், "பறவை காய்ச்சல் தொற்று குறித்த சந்தேகம் உள்ளது. அதை கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன" என கூறினார்.
- ஏழுமலையான் போட்டோ அல்லது சிலை முன்பு இவர்கள் இந்து நம்பிக்கை மற்றும் பாராம்பரியத்தை பின்பற்றுவதாக உறுதி ஏற்றவர்கள்.
- இந்து மத கண்காட்சிகள், திருவிழாக்கள், நிகழ்ச்சியின்போது இந்து மதம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.
பதவி ஏற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி, இந்து அல்லாத மத நடவடிக்கைகளை பின்பற்றியதால் 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பதி உள்ளிட்ட எந்த கோவிலுடன் தொடர்பில்லாத பதவிகளுக்கு இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலைக்கு சேர்ந்த இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள், இந்துக்களின் நம்பிக்கை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றிருந்தனர். தற்போது அந்த உறுதிமொழியை அவர்கள் பின்பற்றவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான போர்டின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
கோவில்களின் ஆன்மீக புனிதத்தன்மை மற்றும் மத நடவடிக்கைகளைப் பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்து மத கண்காட்சிகள், திருவிழாக்கள், நிகழ்ச்சியின்போது இந்து மதம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஏழுமலையான் போட்டோ அல்லது சிலை முன்பு இவர்கள் இந்து நம்பிக்கை மற்றும் பாராம்பரியத்தை பின்பற்றுவதாக உறுதி ஏற்றனர். இப்போது இவர்களின் செயல்பாடுகள் தேவஸ்தானங்களின் கவுரவத்தை இழிவுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
18 ஊழியர்களின் தற்போதைய பணியிடங்களைச் சரிபார்த்து, அவர்கள் திருமலையிலோ அல்லது வேறு எந்தக் கோவிலிலோ அல்லது மத நிகழ்ச்சி தொடர்பான பணியிலோ அல்லது பதவியிலோ பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் பணியை தேவஸ்தான் போர்டின் இரண்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தேவஸ்தான போர்டு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் இந்து நம்பிக்கை மற்றும் புனிதத்தின் அடையாளமாக இருப்பதை உறுதி செய்வேன் என்று தேவஸ்தான போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெப்ப அலை அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளது.
- பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
புவி வெப்பமயமாவதால் கடந்த ஆண்டு அதிகபட்ச வெப்ப ஆண்டாக கண்டறியப்பட்டுள்ளது. அதே வெப்பநிலை இந்த ஆண்டும் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 2-வது வாரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று துனி, நர்ஸாபுரம், காக்கிநாடா மச்சிலிப்பட்டினம், நந்தி காமா, காவாலி, கர்ணூல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவானது.
அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. கோடை காலம் தொடங்கும் முன்பே 100 டிகிரியை நெருங்கி உள்ளது.
இந்த மாநிலங்களில் மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெப்ப அலை அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளது.
வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க கூடும்.
இதனால் பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக அளவு வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
- பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
இன்று ஒரே நாளில் அதிகாலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பகல் 2 மணி முதல் 3 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தவிக்க தேவஸ்தானம் சார்பில் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளிகிறார்.
பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு பால், காபி, உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 51,818 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பக்தர் ஒருவர் பரிந்துரை கடிதத்துடன் தேவஸ்தான அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த தபேதார் மற்றும் 2 ஊழியர்கள் பரிந்துரை கடிதம் கொண்டு வந்த பக்தர் குடும்பத்தினரை ஆபாசமாக திட்டினர்.
இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். புகாரின் மீது விசாரணை நடத்த அதிகாரிகள் 3 ஊழியர்களையும் ஆஜராக வேண்டுமென தெரிவித்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனால் 2 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தும் ஒரு ஊழியரை சஸ்பெண்டு செய்ததும் தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 51,818 பேர் தரிசனம் செய்தனர். 19,023 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.2.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர்.
- தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.
மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.
இதன்பின், மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர்.
அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஹரிஷ் கிருஷ்ணா சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானார்.
- கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அங்குள்ள அடகு கடையில் விற்று பணமாக மாற்றினார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், காஜி பேட்டையை சேர்ந்தவர் ஹரிஷ் கிருஷ்ணா (வயது 35). இவர் தெலுங்கானா மாநிலம், காஜில ராமத்தில் தங்கி இருந்து தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மாதம் ரூ.1.10 லட்சம் சம்பளம் பெற்று வந்தார்.
சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானார். இதனால் ஹரிஷ் கிருஷ்ணா உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கினார்.
இவருடைய நடவடிக்கைகளை பிடிக்காத அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டு சென்றார். கடனை அடைக்க கொள்ளையனாக மாற முடிவு செய்தார்.
இந்த நிலையில் தன்னுடன் வேலை செய்யும் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹரிஷ் கிருஷ்ணா மணிகண்டன் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்தார். இதன் மூலம் மணிகண்டன் வீட்டில் இல்லாததை அறிந்த ஹரிஷ் கிருஷ்ணா முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து மணிகண்டன் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் மணிகண்டனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் கத்தியை காட்டி நகைகளை கேட்டார். அவர் நகைகளை கொடுக்க மறுப்பு தெரிவித்தார். நகைகளை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதில் பயந்துபோன மணிகண்டனின் மனைவி வீட்டில் இருந்த நகைகளை எடுத்து ஹரிஷ் கிருஷ்ணாவிடம் கொடுத்தார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அங்குள்ள அடகு கடையில் விற்று பணமாக மாற்றினார்.
இதுகுறித்து மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஹரிஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
- சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
- இந்த ராக்கெட் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் வானை கிழித்துக் கொண்டு புறப்பட்டது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.53 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலை நிறத்தப்படுகிறது. இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தியுள்ளது.
- அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
- பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியால் அடுத்த சார்பு ரேவூவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் சுப்பம்மா (வயது 60), தினேஷ் (10) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன்.
- இந்த முடிவு முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. எந்த நெருக்கடியும் இல்லை.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயசாய் ரெட்டி. இவர் நாளை தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பதவியில் கூறியிருப்பதாவது:-
நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன். நாளை எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையமாட்டேன். எந்தவொரு பதவி, ஆதாயம் அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு ராஜினாமா செய்யவில்லை. இந்த முடிவு முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. எந்த நெருக்கடியும் இல்லை. என் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விஜயசாய் ரெட்டி பார்க்கப்படுகிறார். இது அவருடைய 2-வது மாநிலங்களவை உறுப்பினர் பதவியாகும்.
- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன் திருடனாக உள்ளதை எண்ணி மவுனிகா மனம் வருந்தினார்.
- போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கம்மத்தை சேர்ந்தவர் மவுனிகா (வயது31). இவரது பெற்றோர் சூரியா பேட்டையில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு முடித்த மவுனிகா போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக விஜயவாடாவில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று வந்தார்.
அப்போது நிதானபுரத்தை சேர்ந்த ஷேக் பாஜி என்பவரும் பயிற்சி வகுப்புக்கு வந்தார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மவுனிகாவை திருமணம் செய்வதற்காக ஷேக் பாஜி அவரை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார்.
இதனை அறிந்த மவுனிகாவின் பெற்றோர் ஷேக் பாஜி ஊருக்கு சென்று அவரை திருமணம் செய்யக்கூடாது என மகளிடம் அழுது புலம்பினர். ஆனால் மவுனிகாவின் மனம் இறங்கவில்லை.
இதையடுத்து ஷேக் பாஜி மவுனிகாவின் பெயரை பிரேகா என மாற்றினர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தம்பதிக்கு மெஹத் (5), மெனுருல் (4). என 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் ஷேக் பாஜி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கம்மம் போலீசார் பைக், செல்போன் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக ஷேக் பாஜியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன் திருடனாக உள்ளதை எண்ணி மவுனிகா மனம் வருந்தினார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மவுனிகா குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
- பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாக இருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு துணை முதல் - மந்திரி பதவி கோரிக்கை எழுந்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு கூறியதாவது 'தொழில், திரைப்படம், அரசியல், குடும்பம் என எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
ஒரு தலைமுறை தொழிலில் சிறந்து விளங்கி நன்றாக சம்பாதித்தால் அடுத்த தலைமுறை அதை இழக்க நேரிடும்.
நம் நாட்டில் ஒரு காலத்தில் பலம் வாய்ந்த கட்சிகள் பின்னர் காணாமல் போய்விட்டன. பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை. இது சில சிறந்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது முக்கியம். அதை சரியான முறையில் பெற்றால் மட்டுமே மேன்மை அடைய முடியும். நான் வாழ்வாதாரத்திற்காக அரசியலைச் சார்ந்து இருந்ததில்லை.
நான் 33 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தொழிலைத் தொடங்கினேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். இதே தொழிலை தொடர்ந்திருந்தால் லோகேஷ்க்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தார். அதில் அவர் திருப்தி அடைந்துள்ளார். இதில் வாரிசு உரிமை இல்லை'
மத்திய அரசில் சேரும் எண்ணம் இல்லை. மாநிலத்திலேயே இருப்பேன் திறமை மற்றும் செயல்திறனால் மட்டுமே லோகேஷ் வாரிசாக வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் வாரிசு குறித்து கடந்த காலங்களிலும் விவாதிக்கப்பட்டது. என்.டி. ராமாராவ் முதல் மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் பாலகிருஷ்ணாவை அரசியல் வாரிசாக அறிவித்தார்.
ஆனால் ஐதராபாத் திரும்பிய அவர் கட்சித் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.
மேலும், 2014 தேர்தலுக்கு முன், நந்தமுரி ஹரிகிருஷ்ணா தனது குடும்பத்தில் வாரிசு பிரச்சினையை எழுப்பினார். அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆரை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க சந்திரபாபுவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி ஒரு கருத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
இப்போது எதிர்பாராத விதமாக தெலுங்கு தேசம் கட்சியில் மீண்டும் அதே விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் சந்திரபாபு தொடக்கத்திலேயே அதைத் தடுத்து நிறுத்தி உள்ளார்.






