என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா சிறுமி"

    • நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார்.

    'பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை' என்ற சினிமா வரிகள் மகத்துவமானது. அதே தந்தைக்குதான் தெரியும் அந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று.

    ஆமாம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது.

    அதற்காக நாம் பெண் குழந்தைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வெளியிடத்திற்கோ அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பித்தான் ஆக வேண்டும்.

    ஆனால் ஆந்திராவில் ஒரு தாய், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து தனது மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த கொடுமை நடந்துள்ளது. கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக்கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளார்.

    அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. கணவர் இறந்துவிட்டதால் மகள் மவுனிகாவுடன் வசித்து வந்தார். மவுனிகா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.

    நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா பருவவயதை எட்டினார். இதனால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே மகளை அடைத்து வைத்துள்ளார். ஒரு நாள் இல்லை, 2 நாள் இல்லை. 3 ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார் அந்த தாய்.

    ஓய்வூதியம் மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி, வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். மகளை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்தார்.

    அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை அறிந்த அந்தப்பகுதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு நேரில் சென்று கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. அப்போது அதிகாரி ஒருவர் வீட்டை அளக்க சர்வேயர் வந்துள்ளேன் என்று சொன்னதும் பாக்கியலட்சுமி கதவை திறந்துள்ளார். உடனே போலீசாரும், அதிகாரிகளும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் தாயாருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர்.
    • தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.

    மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.

    இதன்பின், மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர்.

    அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார்.
    • அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நானாஜி (வயது 22). சிறுமியின் தாயார் இறந்துவிட்டதால் தந்தை வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருவார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நட்பாக பழகினார்.

    சிறிது நாட்கள் கழித்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறுமியை பலாத்காரம் செய்து வந்தார்.

    மேலும் சிறுமியின் தந்தை வீட்டில் ரூ.12 லட்சம் வைத்திருந்தார். அதில் ரூ.11 லட்சத்தை சிறுமியை ஏமாற்றி வாங்கி தனது குடும்பத்தாருக்கு கொடுத்தார்.

    சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நானாஜி வீட்டுக்கு சென்ற சிறுமியின் தந்தை 18 வயது நிரம்பியவுடன் தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

    அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தந்தை அனகாபள்ளி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்து அவரிடமிருந்து பணத்தை பறித்ததாக வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நானாஜி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

    ×