என் மலர்
நீங்கள் தேடியது "கோழிகள் உயிரிழப்பு"
- முத்துபாண்டியன் என்பவர் 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பி.திருவேங்கிடபுரம் கிராமத்தில் ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்துபாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் நிலுவைத் மின்கட்டண தொகையாக ரூ.26 ஆயிரத்து 765 இருந்துள்ளது. அதோடு கடந்த மாதத்திற்காண மின் கட்டண தொகை ரூ.22,233 தொகையை செலுத்த வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கடந்த மாதத்திற்கான மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது ஏற்கனவே நிலவையில் உள்ள தொகையையும் சேர்த்து செலுத்த மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின் கட்டண தொகையான ரூ.49 ஆயிரத்து 719-ஐ அவர் செலுத்தியுள்ளார். கட்டணத்தை செலுத்திக் கொண்டிருந்த போதே மின்வாரிய ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மின் கட்டணத்தை செலுத்தி விட்டு கோழிப் பண்ணைக்கு வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த ஏ.சி. செயல்படாமலும், வெப்பம் தாங்காமலும் 14 ஆயிரம் கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தது. இதைக் கண்டு நிலைகுலைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் செல்லமுத்து பாண்டியன் செய்வதறியாது திகைத்து நின்றார்.
நிலுவைக் கட்டணத்தை இன்னும் 10 நாட்களில் கோழி விற்பனையானதும் செலுத்துவதாக ஏற்கனவே மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் தான் வேண்டுகோள் விடுத்து இருந்ததாகவும், தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடாதீர்கள். அவ்வாறு துண்டித்தால் சிறிது நேரத்திலேயே வெப்பம் தாங்காமல் கோழிகள் இறந்து பெரும் இழப்பு ஏற்படும் என ஏற்கனவே மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் தனது நிலையை கருத்தில் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி நிலுவைத் தொகை கட்டணம் செலுத்த வேண்டியதை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டித்தது விட்டதாக கூறி புலம்பினார்.
இதனால் தனக்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாவும், தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் தனக்கு அரசு கருணை அடிப்படையில் உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் கதறி அழும் வீடியோ காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மீது மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
அமராவதி:
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோழிகள் மர்மமான நோய் பாதிப்புக்கு ஆளாகி இறந்தன. அங்கு கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் தாமோதர் நாயுடு கூறுகையில், "பறவை காய்ச்சல் தொற்று குறித்த சந்தேகம் உள்ளது. அதை கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன" என கூறினார்.
- தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை.
- இறந்த கோழிகளின் ரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஐதராபாத்:
ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கோழி வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. தெலுங்கானா மாநில எல்லைகளில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திர மாநில கோழிகளை தெலுங்கானாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தனர். ஆனாலும், தெலுங்கானா மாநில எல்லையில் கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் பறவை காய்ச்சல் பரவியது.
இதைத் தொடர்ந்து, வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பண்ணை கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்தது. இதனால், தெலுங்கானா மக்களும் கோழி இறைச்சி உண்பதை தவிர்த்தனர்.
இந்நிலையில், நேற்று சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பண்ணைக் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த கோழிகளின் ரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை இடிமின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
வள்ளியூர் அருகே உள்ள ஆணைகுளத்தில் வில்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணை உள்ளது.
இங்கு சுமார் 7 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். வள்ளியூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்தது. இதனால் கோழிப்பண்ணை காம்பவுண்டு சுவர் திடீரென உடைந்தது.
பின்னர் மழைநீர் பண்ணைக்குள் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீரில் அங்குள்ள சுமார் 5 ஆயிரம் கோழிகள் மூழ்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.