என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • தினந்தோறும் சுமார் 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது.
    • அத்துடன் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்திற்கு மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு 11 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

    பிரசித் உனோ பேமிலி அறக்கட்டளையில் இருந்து துஷ்கர் குமார் என்பவர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அந்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்க அப்போதைய முதல்வர் என்.டி. ராமவா் வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டத்தை (Venkateswara Nithya Annadanam Endowment Scheme) 1985-ம் ஆண்டு தொடங்கினார்.

    பின்னர் வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டம் 1994-ம் ஆணடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் அறக்கட்டளை என மாறியது. பின்னர் 2014-ம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஷ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளையாக மாறியது.

    உலகில் உள்ள பக்தர்களால் வழங்கப்படும் நன்கொடைகள் நிதியாக சேர்க்கப்படுகிறது. இந்த நிதிகள் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படுகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலில் இயங்கி வரும் மிகப்பெரிய சமையல் கூடத்தில் தினந்தோறும் சுமார் 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது. அத்துடன் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேலை உணவாக வழக்கப்படுகிறது.

    • புற்றுநோய் குறித்து சில தவறான கருத்துக்கள் பரவி வருகிறது.
    • புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்துவது தான் என்னுடைய லட்சியம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது. இதில் பிரபல நடிகை, லைப் அகெய்ன் அறக்கட்டளை நிறுவனருமான கவுதமி கலந்து கொண்டார்.

    புற்றுநோய் குறித்து சில தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது புற்றுநோயின் மீதான பயத்தை போக்க முடியும். பயத்தை விட்டு விட்டு அதற்கு எதிராக போராடினால் புற்றுநோயை வெல்ல முடியும்.

    புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்துவது தான் என்னுடைய லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இளம் சிவப்பு உடையில் கலந்து கொண்டனர். விசாகப்பட்டினம் மேயர் கோல காலி ஹரி வெங்கடகுமாரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
    • இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.

    அத்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மகனை தாய் கொலை செய்து 5 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் ஆதிராவில் நிகழ்ந்துள்ளது.

    ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம் பிரசாத்தை (35). துப்புரவு பணியாளராக இவர் பணி செய்து வந்தார். இவரின் தாயார் லட்சுமி தேவி (57). ஐதராபாத்,நரசராவ்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனது அத்தைகள், சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.

    ஐதராபாத் மற்றும் நரசராவ்பேட்டாவில் உள்ள தனது அத்தைகள் இருவரை பிரசாத் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தனது மகனை கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் பிரசாத் உயிரிழந்தார். உறவினர்களின் உதவியுடன் மகனின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள நகலகண்டி கால்வாயில் வீசியுள்ளார்.

    இதுதொடர்பாக தற்போது தகவலறிந்த போலீசார் பிரசாத்தின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயில் இருந்து மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஐபிசி சட்டம் 103 மற்றும் 238 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

    • சத்தங்களை எழுப்பி சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
    • அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக நேற்று இரவு பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 7-வது மைலில் உள்ள முக்குபாவி என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று நடைபாதை அருகே வந்து நின்றது.

    சிறுத்தையை கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நடைபாதையை விட்டு நகராமல் சிறுத்தை நின்றது.

    தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சத்தங்களை எழுப்பி சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதையடுத்து பக்தர்கள் குழுக்களாக செல்ல அனுமதித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் யாரும் மலை பாதையில் தனியாக நடந்து செல்லக்கூடாது என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் அப்பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    வன விலங்குகளை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை துன்புறுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.

    • பண்ணை வீட்டில் கட்டு கட்டாக பணம் வைத்து சேவல் பந்தயம் நடத்தப்பட்டது.
    • தப்பி ஓடிய 61 பேரை போலீசார் பிடித்து விசாரணை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், புறநகர் பகுதியான தோல் கட்டாவில் பா.ஜ.க. எம்.எல்.சி ஒருவருக்கு சொந்தமான 11 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது.

    இந்த பண்ணை வீட்டில் கட்டு கட்டாக பணம் வைத்து சேவல் பந்தயம் நடத்தப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சேவல் பந்தயம் நடைபெறும் பண்ணைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    போலீசார் வருவதை கண்டதும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். பண்ணை வீட்டில் இரவு நேரத்திலும் சேவல் சண்டையை காண கேலரிகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள், எல்.இ.டி. டி.விகள் பொருத்தப்பட்டு இருந்தது.

    பந்தயத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அசைவ உணவு மற்றும் மதுபான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனை கண்டு போலீசார் திகைத்துப் போயினர்.

    தப்பி ஓடியவர்களை தவிர்த்து மீதமுள்ள 61 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அனைவரும் தொழிலதிபர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் ரொக்க பணம், ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள், 50 கார்கள், 80 சண்டை சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட அனைவருக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.

    திருப்பதி:

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரன் விஷ்ணுவின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம், கோத்தப்பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    நான் தற்போது அரசியலில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை என்றார்.

    தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.

    முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர் தற்போது தான் அரசியலை இல்லை என பேசியது பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம்.
    • பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்.

    ஐதராபாத்:

    பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திரப்பிரதேச அரசு பெண்களுக்கு குறிப்பாக `வீட்டில் இருந்து வேலை' திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த புதிய முயற்சியை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    `இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்த துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐ.டி. அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது.
    • 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி , மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    பறவை காய்ச்சல் காரணமாக கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் பல லட்சம் கோழிகள் தினமும் இறந்து வருகின்றன.

    இதனால் ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது.

    ராஜ மகேந்திரவரம், மேற்கு கோதாவரி, மாவட்டம், தனுகு,வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப்பண்ணைகள் வைக்கவும், கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை செய்யும் தடை விதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கோழி மற்றும் முட்டைகளை பயன்படுத்தாமல் எச்சரிக்கையாகவும், சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக தமிழ்நாடு,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கோழி குஞ்சுகள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வருகின்றனர். திருப்பூரில் இருந்து தெலுங்கானா மாநிலம், காமி ரெட்டிக்கு 2 லாரிகளில் 30 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கொண்டு செல்லப்பட்டன.

    அந்த லாரிகளை புல்லூர் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இன்று காலை மீண்டும் லாரிகளை திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் இருந்து இதுவரை 7 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட கோழி குஞ்சுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் சி.பி.ஐ. 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.
    • திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டது

    அதன்படி, சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபரில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது.

    இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களில் தொடர்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின்,

    அபூர்வ சால்டா மற்றும் ராஜசேகரன் ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

    • கோழிப்பண்ணை நடத்தி வரும் விவசாயிகளுக்கு கடும் நிதி இழப்பு.
    • பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி கேட் என்ற நியூ கேஸில் புதிய வகை வைரஸ் நோய் கோழிகளை தாக்கி வருகிறது.

    இதன் காரணமாக உத்திரஜாவரம் மற்றும் பெரவலி மண்டலங்களில் கடந்த 2 நாட்களில் 12 லட்சம் கோழிகள் உயிரிழந்து உள்ளன. இதனால் கோழிப்பண்ணை நடத்தி வரும் விவசாயிகள் கடும் நிதி இழப்புக்கு ஆளாக்கி உள்ளனர்.

    கோழிகளின் திடீர் இறப்புகளுக்கு பறவை காய்ச்சல் காரணமாக என கண்டறிவதற்காக இறந்த கோழிகளின் மாதிரிகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிலையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

    இன்னும் 2, 3 நாட்களில் கோழிகள் இறப்பிற்கான காரணம் குறித்த பரிசோதனை முடிவுகள் வெளிவரும் என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நிபுணர் குழுக்களை அமைத்து கோழி பண்ணைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தனுகு, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் கோழி பண்ணை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நோய் பரவலுக்கு காரணம் இறந்த கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் அங்குள்ள கால்வாய்கள் சாலை ஓரங்களில் பேசப்படுவதால் அதிக அளவில் நோய் தொற்று ஏற்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆந்திராவில் தொடர்ந்து பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் இறப்பு அதிகரித்து வருவதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது.
    • மினி வேனில் இருந்த மீன்கள் சிதறி சாலையில் கொட்டியது.

    ஒடுகத்தூர்:

    விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு மினி லாரி வந்தது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (வயது 28) என்பவர் மினி லாரி ஓட்டி வந்தார்.

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி வந்தபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது.

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. மினி வேனில் இருந்த மீன்கள் சிதறி சாலையில் கொட்டியது.


    அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் கொட்டிக்கிடந்த மீன்கள் மீது ஏறி இறங்கியதில் சிதைந்தன. மேலும் சில மீன்கள் ரோட்டில் துள்ளி குதித்தன.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து டிரைவருக்கு என்ன ஆனது என்று கூட பார்க்காமல் சாலையில் சிதறி கிடந்த மீன்களை சாக்கு பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளி சென்றனர்.

    சிலர் தாங்கள் அணிந்திருந்த லுங்கியிலும், சேலையிலும் போட்டு க்கொண்டு சென்றனர்.

    தகவல் அறிந்த பள்ளி கொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீன்கள் அள்ளிக் கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொள்ள மாட்டார்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    திருப்பதி:

    ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கடந்த மாதம் முழுவதும் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

    இந்த நிலையில் பவன் கல்யாணுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    பவன் கல்யாண் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி இன்று நடக்கும் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொள்ள மாட்டார் என அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×