என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் ரகசிய நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் எல்ஜி புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பார்சிலோனா:

    எல்ஜி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் தங்களது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவில்லை. எனினும் தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய தகவல்களின் படி எல்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ரகசிய நிகழ்வில் அறிமுகம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    வைநெட் (Ynet) எனும் வலைத்தளத்தில் இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்ஜி ஜி7 தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் தெரியவந்திருக்கிறது. வழக்கத்தை முற்றிலும் மாற்றிக் கொள்ளும் வகையில் தனது ஸ்மார்ட்போன்களை புதிய கால அவகாசத்தில் வெளியிட எல்ஜி திட்டமிட்டிருக்கிறது.



    இதே காரணத்தை முன்வைத்து ஜி7 தயாரிப்பு பணிகளை நிறுத்தி விட்டு, மீண்டும் முதலில் இருந்து தயாரிப்பு பணிகளை துவங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூடி என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. எல்ஜி ஜூடி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் எல்ஜி ஜி7 பிளஸ் மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா, IP68 சான்று, மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    6.0 இன்ச் ஃபுல் ஸ்கிரீன் 1440x3120 பிக்சல் டிஸ்ப்ளே, 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 900 PPI கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று புதிய ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற வடிவமைப்பு, 8 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, DTX:X சவுண்ட் தொழில்நுட்பம், பூம்பாக்ஸ் என்ற பெயரில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதே நிகழ்வில் எல்ஜி ஜி7 மட்டுமின்றி எல்ஜி கியூ7 மற்றும் வி35 ஸ்மார்ட்போன்களையும் எல்ஜி அறிமுகம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் எல்ஜி கியூ6 மற்றும் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.

    புகைப்படம்: நன்றி YnetNews
    தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    சென்னை:

    தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல், தனது நிறுவனத்தை திவலானதாக அறிவிக்கக் கோரி நேற்று விண்ணப்பித்து இருந்தது. 

    முன்னதாக ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம், வாடிக்கையாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி ஏர்செல் சார்பில் அந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. 

    இந்நிலையில், இன்று (மார்ச் 1) காலை முதல் பெரும்பாலான வட்டாரங்களில் ஏர்செல் சேவை சீராக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்செல் சேவைகளில் இருந்து மற்ற நெட்வொர்க்-களுக்கு போர்ட் அவுட் செய்ய முடியாமல் தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

    அந்த வகையில் ஏர்செல் சேவையை பயன்படுத்தி (சிம் வைத்திருப்போர்) வருவோர் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற்றிக் கொள்ள போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    - மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகளில் இருந்து 9841012345 அல்லது 9842012345 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

    - அடுத்து அழைப்பை தொடர்வதற்கான மொழி மற்றும் போர்ட் அவுட் செய்ய வேண்டிய ஆப்ஷன்களை உறுதி செய்ய வேண்டும்.

    - இனி ஐ.வி.ஆர். மூலம் கேட்கப்படும் போது உங்களது மொபைல் நம்பர், மற்றும் சிம் கார்டு நம்பரின் கடைசி ஐந்து எண்களை ஒவ்வொன்றாக அதற்கான கால அவகாசத்துடன் பதிவு செய்ய வேண்டும். 

    - மொபைல் நம்பர் மற்றும் சிம் கார்டு நம்பர் உள்ளிட்டவற்றை பதிவு செய்ததும், ஐ.வி.ஆர். குரலில் உங்களுக்கான போர்ட் அவுட் கோடு தெரிவிக்கப்படும். இதனை பயன்படுத்தி மற்ற நெட்வொர்க் சிம் கார்டு வாங்கிட முடியும். 



    சிம் கார்டு நம்பரை கண்டறிவது எப்படி? 

    சிம் கார்டு நம்பரை மொபைல் போனின் செட்டிங்ஸ் (Settings) -- அபௌட் போன் (About Phone) -- ஸ்டேட்டஸ் (Status) -- ஐ.எம்.இ.ஐ. இன்ஃபர்மேஷன் (IMEI Infromation) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என்ற பெயரில் சிம் கார்டு நம்பர் இடம்பெற்றிருக்கும்.

    சில மொபைல் போன்களில் இந்த ஆப்ஷன்கள் மாற்றப்பட்டிருக்கலாம். எனினும் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. தகவல்கள் ஆப்ஷனில் சிம் கார்டு நம்பர் ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என்ற பெயரில் சிம் கார்டு நம்பரை தெரிந்து முடியும்.

    குறிப்பு: சிம் கார்டு நம்பர் என்பது ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என அழைக்கப்படுகிறது. இந்த நம்பர் சிம் கார்டிலேயே அச்சடிக்கப்பட்டு இருக்கும். சிம் கார்டுகளில் கண்டறிய முடியாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இதற்கென கிடைக்கும் செயலிகளை பயன்படுத்தியும் சிம் கார்டு நம்பரை கண்டறிய முடியும்.
    சியோமி நிறுவனத்தின் Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் சென்னையில் துவங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இது சியோமி நிறுவனத்தின் முதல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆகும்.
    சென்னை:

    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரினை சென்னையில் துவங்கியுள்ளது. இது வழக்கமான Mi ஸ்டோர் கிடையாது, இங்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படாத சியோமி சாதனங்களை வாடிக்கையாளர்கள் அனுபவித்து பார்க்க முடியும். இன்று (மார்ச் 1) முதல் வாடிக்கையாளர்களுக்கு Mi எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் துவங்கப்பட்டுள்ளது.

    நைன்பாட் பிளஸ், வீட்டை சுத்தம் செய்யும் ரோபோட்கள், Mi ஸ்போர்ட் ஷூக்கள், ரத்த அழுத்தத்தை கண்டறியும் சாதனம், 90-பாயிண்ட் லக்கேஜ் கரியர், ஸ்மார்ட் குக்கர் மற்றும் பல்வேறு இதர சியோமி சாதனங்கள் Mi எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் வைக்கப்பட்டிருக்கிறது. 

    இத்துடன் மொபைல் போன் என்கிரேவிங் செய்யப்படுகிறது. எனினும் இலவச சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சியோமியின் 25-வது Mi ஸ்டோர் மற்றும் இந்தியாவின் முதல் Mi எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆகும். 

    பெயருக்கு ஏற்றார் போல் இங்கு வைக்கப்பட்டிருக்கும் சாதனங்களை காசு கொடுத்து வாங்க முடியாது, எனினும் அவற்றை அனுபவிக்க முடியும். Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் சென்னையில் ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் துவங்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 100 Mi ஹோம் ஸ்டோர்களை துவங்க சியோமி திட்டமிட்டிருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு மற்றும் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 16-ம் தேதி முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையிலும் இதே தேதியில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் அதே தேதியில் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அடிப்படை விலை ரூ.60,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ் 8 விலை ரூ.57,900 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி விலை ரூ.62,500, 256 ஜிபி விலை ரூ.71,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 பிளஸ் 64 ஜிபி விலை ரூ.70,000, 256 ஜிபி விலை ரூ.79,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    தற்சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன. எனினும் சாம்சங் தளத்தில் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை. சர்வதேச சந்தையில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், லிலாக் பர்ப்பிள், கோரல் புளூ மற்றும் டைட்டானியம் கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன்களில் குறிப்பிட்ட மாடல் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலுக்கு போட்டியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒன்று இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய ஐபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    மூன்று ஐபோன்களும் தற்போதைய ஐபோன் X அளவில் இருக்கும் என்றும் இதில் ஒரு மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு, சில சிறப்பம்சங்கள் அதற்கேற்ப வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக தயாரிப்பு ரீதியிலான சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இவை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய தகவல்கள் குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த திட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக பெரிய திரை மற்றும் அதிநவீன அம்சங்கள் நிறைந்த ஐபோன் இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


    கோப்பு படம்: ஐபோன் 7 பிளஸ்

    முன்னதாக ஆப்பிள் நிறுவன வருவாய் 6000 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற வகையில் முந்தைய கணிப்புகளை விட குறைவாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திலும் ஐபோன் X விற்பனை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஃபேப்லெட் போன்று காட்சியளிக்கும் புதிய ஐபோன் 6.5 இன்ச் அளவு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ஐபோன் 8 பிளஸ் அளவில், புதிய எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேப்லெட் D33 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

    மேலும் D32 என்ற குறியீட்டு பெயரில் தற்போதைய ஐபோன் X போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபோன்கள் அனைத்தும் அடுத்த தலைமுறை ஆப்பிள் A-12 பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வளைவுகள் மற்றும் ஆப்பிள் உயர்-ரக சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இவற்றில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் இல்லாத சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்ற வகையில் ஃபிளாக்ஷிப் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. 

    அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் வழங்கப்படாத முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    வேரியபிள் அப்ரேச்சர்:

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வேரியபிள் அப்ரேச்சர் என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் புகைப்படம் எடுக்கப்படும் சூழலின் வெளிச்சத்திற்கு ஏற்ப அப்ரேச்சர் அளவினை f/1.5 இல் f/2.4 வரை மாற்றிக் கொள்ளும். ஐபோன் X ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
     


    அனிமோஜி:

    கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அனிமோஜி ஆப்ஷன் ஆப்பிளின் ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 3D எமோஜிக்களை சார்ந்து உருவாகி இருந்தாலும், ஐபோனை விட புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் பிரீசெட் ஒன்றில் முகத்தை காண்பித்து எமோஜிக்களை உருவாக்காமல், புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த எமோஜிக்களை உருவாக்க முடியும். ஸ்கின் டோன், தலைமுடி நிறம், ஆடை நிறம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்வது என பல்வேறு ஆப்ஷன் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.



    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்:

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சம் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் இருபுறமும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.



    ஹெட்போன் ஜாக்:

    ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாக இருந்த 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் ஐபோன் மாடல்களில் நீக்கப்பட்டு விட்டது. எனினும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இன்னமும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றளவும் பெரும்பாலானோர் 3.5 எம்.எம் ஜாக் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.



    ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்:

    ஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியது. சாம்சங் இந்த அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தனது ஸ்மார்ட்போன்களில் வழங்கிவிட்டது. மேலும் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் முன்பை விட 50% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    கைரேகை சென்சார்:

    உலகில் தற்சமயம் வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி அல்லது ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    ஐபோன் X ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் நீக்கப்பட்டு பாதுகாப்பிற்கு முற்றிலும் ஃபேஸ் ஐடி அம்சத்தை நம்ப வேண்டியுள்ளது. கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ் அன்லாக், ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை சென்சார் என வெவ்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

    இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பாதுகாப்பு அம்சத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கேமராவின் கீழ் வைக்கப்பட்டிருப்பதால் மிக வேகமாகவும், எளிமையாகவும் பயன்படுத்த முடியும்.
    ஆப் ஸ்டோரில் வெளியான ஒரு மாத காலத்தில் 16 வயதான ஹர்ஷிதா அரோரா உருவாக்கிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது.
    மீரட்:

    இந்தியாவின் சஹாரன்பூரை சேர்ந்த 16 வயதான ஹர்ஷிதா அரோரா உருவாக்கிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி வெளியான இந்த செயலி அதிகம் பயன்படுத்தப்படும் கட்டண செயலியாக இருக்கிறது. 

    உலகின் 32 நாடுகளை சேர்ந்த 1000-க்கும் அதிகமான க்ரிப்டோகரண்சிக்களின் மதிப்பு குறித்த விவரங்களை இந்த செயலி அப்டேட் செய்கிறது. 14 வயதில் பள்ளி கல்வியை நிறுத்திக் கொண்ட அரோரா கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வீட்டிலேயே கல்வி கற்பதாக தெரிவித்திருக்கிறார்.

    2016-ம் ஆண்டில் க்ரிப்டோகரண்சி குறித்து கேள்விப்பட்ட அரோரா, மிகவிரைவில் பிட்காயின் மைனிங் மற்றும் க்ரிப்டோகிராஃபி உள்ளிட்டவற்றை செய்ய துவங்கியுள்ளார். சிறு வயதிலேயே ஆப்பிள் இயங்குதளத்திற்கான செயலியை வெளியிட்டிருப்பதால் இவர் மீது சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டுக்களை எழுந்து, அவற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறார்.



    'எனது 13 வயது முதல் ஆயத்த பணிகளை துவங்கினேன். ஐ.டி. துறை இதழ்கள், துறை சார்ந்த வளர்ச்சிக்களை தொடர்ந்து கற்றுக் கொண்டு க்ரிப்டோகரண்சி எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொண்டேன். இணைய நண்பர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் உரையாடியதில் அவர்களுக்கு செயலியில் தேவைப்படும் தகவல்களை அறிந்து கொண்டு பின் இந்த செயலி வெளியிடப்பட்டது,' என அரோரா தெரிவித்திருக்கிறார். 

    மசாசூட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற MIT லான்ச் நிகழ்வில் கலந்து கொண்டது செயலியை உருவாக்க உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். நான்கு வாரங்கள் நடைபெற்ற நிகழ்வில் துறை சார்ந்த விவரம் அறிந்த 15 முதல் 19 வயதுடையவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் உதவியுடன் இந்த செயலி உருவாகியிருக்கிறது.

    ஜூன் மாத வாக்கில் அமெரிக்கா செல்ல இருக்கும் அரோரா, விரைவில் ஸ்டார்ட்அப்களை துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் ஸ்னாப் ஃபுட் எனும் செயலியை உருவாக்கி வருவதாகவும், இந்த செயலி குறிப்பிட்ட உணவு வகை சார்ந்த தகவல்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
    ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை மாற்றாமல், உங்களது நெட்வொர்க்கை போர்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்கு பின் சேவை கட்டணங்கள் குறைந்து வரும் நிலையில், போட்டி நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன. ஜியோவை தொடர்ந்து போட்டி நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்தும், பழைய விலையில் கூடுதல் சலுகைகளை அறிவித்தும் வருகின்றன. 

    அந்த வகையில் பெரும்பாலானோர் தங்களது நெட்வொர்க்கில் இருந்து மாற விரும்புகின்றனர். பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் நெட்வொர்க் மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி அனைத்து நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அவ்வாறு பழைய நெட்வொர்க்கில் இருந்து புதிய நெட்வொர்க்-க்கு உங்களது நம்பரை போர்ட் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். 

    - முதலில் உங்களது மொபைல் போனில் இருந்து PORT என டைப் செய்து <பத்து இலக்க மொபைல் நம்பர்> டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பியதும் நீங்கள் பயன்படுத்தி வரும் நெட்வொர்க் சார்பில் பிரத்யேக குறியீடு எண் அனுப்பப்படும். 

    - இனி நீங்கள் மாற விரும்பும் நெட்வொர்க் விற்பனை மையத்திற்கு சென்று உங்களது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.



    - புதிய நெட்வொர்க் மாறி, அதற்கான சிம் கார்டு பெற ரூ.19 கட்டணம் செலுத்த வேண்டும். 

    - புதிய நெட்வொர்க் மையத்தில் உங்களது அடையாள சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படத்தை வழங்க வேண்டும்.

    - புதிய சிம் கார்டு வழங்கப்பட்ட ஏழு நாட்களில் புதிய நெட்வொர்க் ஆக்டிவேட் செய்யப்படும். இனி புதிய நெட்வொர்க் சிம் கார்டினை மொபைல் போனில் செறுகி பயன்படுத்த துவங்கலாம்.
    ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பணியில் சேர விண்ணப்பித்த முதல் விண்ணப்பப்படிவம் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பணியில் சேர்வதற்கு விண்ணப்பித்த முதல் ரெஸ்யூம் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம் 50,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,45,000 வரை ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் துவங்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒற்றை பக்க விண்ணப்ப படிவத்தில் ஸ்டீவ் எழுத்து பிழைகளுடன் தானே பூர்த்தி செய்திருக்கிறார். இத்துடன் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் தன் ஆர்வத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். 


    புகைப்படம்: நன்றி RR Auction

    ஸ்டீவ் பூர்த்தி செய்த விண்ணப்பம் எந்த பணியில் சேர்வதற்கானது மற்றும் அவருக்கு அந்த வேலை உண்மையில் வழங்கப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை, எனினும் அது பல லட்சங்களுக்கு ஏலத்தில் விற்பனையாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. தொலைப்பேசி வைத்திருப்பது குறித்த கேள்விக்கு இல்லை என குறிப்பிட்டிருக்கிறார். 

    எலெக்ட்ராணிக்ஸ் டெக் அல்லது டிசைன் இன்ஜினியர் மற்றும் கம்ப்யூட்டர் புரியும் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இத்துடன் ஸ்டீவ் ஜாப்ஸ் என தன் பெயரையும், முகவரியில் ரீட் கல்லூரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பதாகவும், கார் வைத்திருப்பது குறித்த கேள்விக்கு 'சாத்தியம் ஆனால் சாத்தியமற்றது,' என பதில் அளித்திருக்கிறார்.


    புகைப்படம்: நன்றி RR Auction

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இயங்கி வரும் ஆர்.ஆர். ஆக்ஷன் நிறுவனம் மூலம் ஸ்டீவ் ரெஸ்யூம் ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பணிக்கு விண்ணப்பித்த முதல் விண்ணப்ப படிவம் மட்டுமின்றி, ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட மேக் ஓ.எஸ். X பவுண்ட் டெக்னிக்கல் மேனுவல் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட 2008-ம் ஆண்டின் ஐபோன் சார்ந்த செய்தி குறிப்பு, ரோலண்ட் வெய்ண் கையெழுத்திட்ட ஆப்பிள் லோகோ உள்ளிட்டவை ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமின்றி பல்வேறு இதர நினைவு பொருட்களும் ஆர்.ஆர். ஆக்ஷன் நிறுவன ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
    ஸ்மார்ட்போன் மூலம் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் புதிய செயலியை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவி உருவாக்கியுள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்திய மக்கள் பாக்கெட்டில் ஏ.டி.எம். கொண்டு சேர்க்கும் ஸ்மார்ட்போன் செயலியை இந்திய மாணவி உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவி ஸ்பிரிகா பண்டாரி (18). மற்றும் சில மாணவர்களும் சேர்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.

    ‘பாக்கெட் சேஞ்ச்‘ என அழைக்கப்படும் இந்த செயலி டிஜிட்டல் முலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும். 

    பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய செயலி உண்மையில் ஒரு சாட் பாட் ஆகும். இந்த செயலி பண பரிமாற்றத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தினசரி வாழ்விற்கு குறைந்த பட்ச வருவாய் ஈட்டும் மக்களுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. என பண்டாரி தெரிவித்துள்ளார். 

    'ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தங்களது வருவாயினை மிக எளிமையாகவும், நம்பகத்தன்மையுடனும் பணத்தை டிஜிட்டலாகவும், பின் இதேபோன்று டிஜிட்டலில் இருந்து பணமாகவோ மாற்ற இந்த செயலி வழி செய்யும்,' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


    கோப்பு படம்: டிஜிட்டல் பணப் பரிமாற்றம்

    'முதலில் டிஜிட்டல் கடன் உக்கப்படுத்தும் விதமான செயலியை உருவாக்க ஆரம்பித்து, பின் பாக்கெட் சேஞ்ச் என்ற செயலியை உருவாக்கியுள்ளோம். ஆறு மாத காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பணத்தின் புகைப்படங்களுக்கு கூகுள் விஷன் பயன்படுத்தப்பட்டதாக,' பண்டாரி தெரிவித்துள்ளார். 

    புதிய செயலி எவரையும் மற்றவர்களுக்கு ஏ.டி.எம். போன்று செயல்படவைக்கும் திறன் கொண்டுள்ளது. டிஜிட்டல் பணத்தை நிஜ பணமாக மாற்ற இந்த செயலி உதவும். மேலும் இவ்வாறு செய்யும் போது பரிமாற்றத்தில் கலந்து கொள்வோர் தங்களது பணத்தை வங்கி கணக்கில் சேர்த்து அதற்கான வட்டியை பெற முடியும்.

    பணத்தை வங்கியில் செலுத்துவோர் மற்றும் வங்கியில் இருந்து பணத்தை எடுப்போரை இணைக்கும் முயற்சியில் ஏ.டி.எம். இல்லாத இடங்களில் பண பரிமாற்றம் செய்ய வைப்பதே இந்த செயலியின் நோக்கம் என செயலியை உருவாக்கியவர்களில் ஒரு மாணவரான கட்லர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்திய டெலிகாம் துறை விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், தற்சமயம் பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர்களும் 13 இலக்குகளாக மாற்றப்படும் என்ற வாக்கில் தகவல் வெளியானது. பின் இந்த தகவல் உண்மையில்லை என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மையில் 13 இலக்க எண்கள் அறிமுகம் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    உண்மையில் 13 இலக்க மொபைல் நம்பர்களுக்கான சிம் கார்டுகளை வழங்க டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். 13 இலக்க மொபைல் நம்பர் வழங்குவதற்கான பணிகளையும் ஏற்கனவே துவங்கி விட்டது. எனினும் இந்த விவகாரம் வழக்கமான மொபைல் நம்பர் பயன்படுத்துவோருக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் வழங்கப்படுவது தற்போதைய வாடிக்கையாளர்களை எவ்விதத்திலும் பாதிக்காது. புதிய 13 இலக்க மொபைல் நம்பர்கள் M2M (மெஷின்2மெஷின்) ரக சிம் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. இவ்வகை சிம் கார்டுகள் ஆட்டோமேட்டெட் மெஷின்களில் பயன்படுத்தப்படுகின்றன. 



    இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 13 இலக்க M2M நம்பர்களை மட்டுமே வழங்க வேண்டும் என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018க்குள் M2M மொபைல் நம்பர்களை 13 இலக்க எண்களாக மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பி.எஸ்.என்.எல். தனது ஹார்டுவேர் விநியோகஸ்தர்களான இசட்.டி.இ. மற்றும் நோக்கியாவிற்கு M2M சிம் கார்டுகளில் 13 இலக்க மொபைல் நம்பர் இருக்க வேண்டும் என்ற தகவலை அனுப்பி இருக்கிறது. மத்திய டெலிகாம் துறை வெளியிட்டிருக்கும் புதிய உத்தரவு சாதாரண சிம் கார்டு வைத்திருப்போரை எவ்விதத்திலும் பாதிக்காது, என டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி உலகில் 4ஜி டேட்டா வேகம் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.
    லண்டன்:

    லண்டனை சேர்ந்த ஓபன் சிக்னல் ஆய்வு நிறுவனம் பிப்ரவரி 2018-இல் தி ஸ்டேட் ஆஃப் எல்டிஇ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் சிக்னல் மற்றும் வேகம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

    அந்த வகையில் உலகில் மிக குறைவான 4ஜி டேட்டா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடம் பிடித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட மிக குறைவான வேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நவம்பர் 2017-ஐ விட பிப்ரவரி 2018-இல் 4ஜி டேட்டா வேகம் குறைந்துள்ளது. இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் நொடிக்கு 6.07 எம்பி (6.07Mbps) வரை இருந்துள்ளது. இந்த பட்டியலில் சராசரியாக நொடிக்கு 44.31 எம்பி (44.31 Mpbs) வேகம் வழங்கி உலகில் அதிவேக டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்திருக்கிறது.



    மிக குறைந்த டேட்டா வேகம் வழங்கிய நாடுகள் பட்டியலில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா நொடிக்கு 10 எம்.பி. வேகம் வழங்கியுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாடுகளிலும் அதிவேக டேட்டா வழங்கும் நிலையை கண்டறிய ஓபன்சிக்னல் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறது. எல்டிஇ சேவைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம், அதிநவீன மற்றும் புதிய 4ஜி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, நெட்வொர்க்கில் ஏற்படும் நெரிசல் உள்ளிட்டவற்றை பொருத்து கணக்கிடப்படுகிறது.

    பொதுவாக அதிவேக டேட்டா வேகம் வழங்கும் நாடுகளில் அதிநவீன எல்டிஇ நெட்வொர்க், பெரியளவு எல்டிஇ வசதி கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது. 4ஜி சிக்னல்கள் சீராக கிடைப்பதை பொருத்த வரை நவம்பர் 17-இல் இருந்ததை விட இந்தியா 14 இடங்கள் கீழ் இறங்கியுள்ளது. 

    எனினும் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு 86.26 சதவிகிதம் ஆக இருக்கிறது. 2016-இல் ஜியோ வரவுக்கு பின் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த பட்டியலில் இ.ஐ. சால்வடார் மற்றும் அல்ஜீரியா 4ஜி நெட்வொர்க் வழங்கும் நாடுகளின் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளன.
    ×