என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவின் முதல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் சென்னையில் துவங்கிய சியோமி
    X

    இந்தியாவின் முதல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் சென்னையில் துவங்கிய சியோமி

    சியோமி நிறுவனத்தின் Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் சென்னையில் துவங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இது சியோமி நிறுவனத்தின் முதல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆகும்.
    சென்னை:

    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரினை சென்னையில் துவங்கியுள்ளது. இது வழக்கமான Mi ஸ்டோர் கிடையாது, இங்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படாத சியோமி சாதனங்களை வாடிக்கையாளர்கள் அனுபவித்து பார்க்க முடியும். இன்று (மார்ச் 1) முதல் வாடிக்கையாளர்களுக்கு Mi எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் துவங்கப்பட்டுள்ளது.

    நைன்பாட் பிளஸ், வீட்டை சுத்தம் செய்யும் ரோபோட்கள், Mi ஸ்போர்ட் ஷூக்கள், ரத்த அழுத்தத்தை கண்டறியும் சாதனம், 90-பாயிண்ட் லக்கேஜ் கரியர், ஸ்மார்ட் குக்கர் மற்றும் பல்வேறு இதர சியோமி சாதனங்கள் Mi எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் வைக்கப்பட்டிருக்கிறது. 

    இத்துடன் மொபைல் போன் என்கிரேவிங் செய்யப்படுகிறது. எனினும் இலவச சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சியோமியின் 25-வது Mi ஸ்டோர் மற்றும் இந்தியாவின் முதல் Mi எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆகும். 

    பெயருக்கு ஏற்றார் போல் இங்கு வைக்கப்பட்டிருக்கும் சாதனங்களை காசு கொடுத்து வாங்க முடியாது, எனினும் அவற்றை அனுபவிக்க முடியும். Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் சென்னையில் ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் துவங்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 100 Mi ஹோம் ஸ்டோர்களை துவங்க சியோமி திட்டமிட்டிருக்கிறது.
    Next Story
    ×