என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "digital transaction"

    • யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
    • அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

    நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன. இந்நிலையில் நாளை [பிப்ரவரி 1] முதல் பலரின் யுபிஐ ஐடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பிப்ரவரி 1ஆம் தேதி முதல் [@,#, * உள்ளிட்ட] சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா[NPCI] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எண்ணெழுத்து [0-9] மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடிகள் மட்டுமே செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு எழுத்துக்கள் உள்ள ஐடிகள் பிளாக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


     

    யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுவதும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று NPCI அறிவுறுத்தியுள்ளது.

    என்பிசிஐ தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் 16.73 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது நவம்பரின் பதிவான 15.48 பில்லியன் பரிவர்த்தனைகளைவிட விட 8% அதிகமாகும். 

    சீனாவில் பிச்சைக்காரர்கள், பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெற்று அதிக லாபம் பெறுகிறார்களாம். #China #DigitalTransaction
    பீஜிங்:

    உலகம் பணமில்லா பரிவர்த்தனையான, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்லி விடுவதால் யாசகம் கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டது.

    இந்த நிலையை சரிசெய்ய முடிவு செய்த சீன யாசகர்கள் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டனர். ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் யாசகர்கள், தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிக்கொண்டனர்.

    வழக்கமாக கையில் பாத்திரமும், பையில் பழைய அழுக்கு துணிகளுமாக இருக்கும் பிச்சைக்காரர்கள், தற்போது கையில் பாத்திரமும், பையில் துணிக்கு பதிலாக பிரிண்ட் செய்யப்பட்ட கியூ.ஆர்.கோட், கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும், இல்லாதவர்களிடம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யும்படியும் சொல்கிறார்கள்.

    சீனாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் கியூ.ஆர்.கோட் மூலம் யாசகர்கள் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் யாசகத்தை எல்லா இடங்களிலும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என கணக்கும் அவர்களுக்கு உள்ளதாம்.

    இதுபோன்ற இடங்களில் ஒரு யாசகர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறாராம். டிஜிட்டல் பரிவர்த்தனையில், அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகமாக சீனா ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. #China #DigitalTransaction
    ×