என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2018-இல் சோனி மொபைல்ஸ் பங்கேற்க இருப்பதை புதிய டீசர் மூலம் உறுதி செய்துள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழா விரைவில் துவங்க இருக்கிறது. பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் பங்கேற்பதை சோனி மொபைல்ஸ் புதிய டீசர் மூலம் உறுதி செய்துள்ளது. 

    23-நொடிகள் ஓடக்கூடிய டீசரில் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்: எக்ஸ்பீரியா XZ2, XZ2 காம்பேக்ட் சோனி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரம் அறியப்படாத நிலையில், பெயரிடப்படாத சோனி ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் லிஸ்டிங்கில் இடம்பெற்றிருக்கிறது. H8266 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 18:9 ரக ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்: சோனி XZ பிரீமியம் 

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், IP65 அல்லது IP68 சான்று, 3210 அல்லது 3240 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் நோவோ அடாப்டிவ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதேபோன்று 6ஜிபி ரேம், 4K டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை சோனி இதுவரை உறுதி செய்யாத நிலையில் இவற்றின் உண்மை தன்மை அடுத்த வாரம் தெரியவரும். சோனி மட்டுமின்றி நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன.
    ஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. 

    ட்விட்டர் சேவை வழங்கப்படும் அனைத்து தளங்களிலும் ட்விட்டர் அனுபவத்தை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 16) முதல் மேக் கணினிகளுக்கான ட்விட்டர் செயலியை டவுன்லோடு செய்ய முடியாது என @TwitterSupport ட்வீட்-இல் தெரிவித்துள்ளது. 

    மேலும் மேக் கணினிகளுக்கான ட்விட்டர் சப்போர்ட் 30 நாட்களில் நிறைவுறும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதனால் மேக் கணினிகளில் ட்விட்டர் சேவையை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ட்வீட்டெக் (Tweetdeck) போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர்.



    மேக் கணினிகளில் இருந்து ட்விட்டர் நீக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகும் முன்பு வரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ட்விட்டர் செயலிக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் ரிவியூ 1.7/5 என இருந்தது என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததை இது வெளிப்படுத்தி இருக்கிறது.

    மேக் செயலியை அப்டேட் செய்வதில் ட்விட்டர் சரியான நுணுக்கங்களை கையாளவில்லை. புதிய அம்சங்கள் அதிகளவு வழங்கப்படாத நிலையில், அக்டோபர் 2015-இல் வழங்கப்பட்ட மொமண்ட்ஸ் அம்சம் ஏழு மாதங்கள் கழித்தே மேக் கணினிகளுக்கு வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.
    செயற்கை நுண்ணரிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மென்பொருளின் 'இந்த' நிலைக்கு ஜியோபோன் தான் காரணம் என கூகுள் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோபோன்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கூகுளின் வாய்ஸ் அசிஸ்டண்ட் மென்பொருள் வழங்கப்பட்டது. அன்று முதல் வாய்ஸ் அசிஸ்டண்ட் பயன்பாடு ஆறு-மடங்கு வரை அதிகரித்து இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

    ஃபீச்சர்போன்களில் அதிக வசதிகளை வழங்கும் நோக்கில் டிசம்பர் 5-ம் தேதி வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கூகுள் ஜியோபோன்களுக்கு வழங்கியது. அந்த வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை பெற்ற முதல் ஃபீச்சர்போன் என்ற பெருமையை ஜியோபோன் பெற்றது. 

    '2017 டிசம்பரில் ஜியோபோன்களுக்கு வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டது முதல் இந்தியாவில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் பயன்பாடு ஆறு மடங்கு வரை அதிகரித்து இருக்கிறது.' என நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் குழுவின் துணை தலைவர் சீசர் சென்குப்தா கூகுள் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    'கூகுள் அசிஸ்டண்ட் மூலம் வாடிக்கையாளர்கள் மிக வேகமாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை பயன்படுத்த வழக்கப்படுத்தி கொள்கின்றனர். எழுத படிக்க தெரியாதவர்கள் மட்டுமின்றி, வேகமாக டைப்பிங் செய்வது பெரும்பாலானோருக்கு கடினமான காரியம் என்பதும் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது.' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இணையத்தில் கிடைக்கும் தரவுகளில் 50% ஆங்கிலம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிந்தி நான்காவது மொழியாக இருந்தாலும், சர்வதேச அளவில் இம்மொழி முதல் 30 பட்டியலிலும் இடம்பிடிக்கவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் இணையம் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தை விட தங்களது தாய் மொழியிலேயே பயன்படுத்த விரும்புகின்றனர்.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:
     
    இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.61,000 மற்றும் ரூ.73,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.11,001 மற்றும் ரூ.8,001 குறைக்கப்பட்ட விலையில் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதுமட்டுமின்றி பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் சார்பில் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    இந்த கேஷ்பேக் சலுகை சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது பெற முடியும். சிட்டி பேங்க் கேஷ்பேக் சலுகையில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களை ரூ.41,999 முதல் வாங்கிட முடியும். 



    பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுக்கான கேஷ்பேக் விவரம்:
     
    கூகுள் பிக்சல் 2 64 ஜிபி விலை ரூ.41,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.19,001 வரை குறைவு)
    கூகுள் பிக்சல் 2 128 ஜிபி விலை ரூ.50,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.19,001 வரை குறைவு)
    கூகுள் பிக்சல் 2 XL 64 ஜிபி விலை ரூ.54,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.18,001 வரை குறைவு)
    கூகுள் பிக்சல் 2 XL 128 ஜிபி விலை ரூ.63,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.18,001 வரை குறைவு)

    சிட்டி பேங்க் வழங்கும் கேஷ்பேக் சலுகையை பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் பெற முடியும். இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் வழங்கும் கேஷ்பேக் தொகை பணம் செலுத்தியதில் இருந்து 90 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேஷ்பேக் சலுகை பிப்ரவரி 28-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக புதிய மேக்சிமம் பிரீபெயிட் திட்டத்தை பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் மேக்சிமம் பிரீபெயிட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.999க்கு கிடைக்கும் புதிய திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். 

    இந்தியாவில் வட-கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் உள்ளிட்ட வட்டாரங்கள் தவிர மற்ற இடங்களில் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு இதர சேவைகளும் வழங்கப்படுகிறது. 

    அதிவேக 1ஜிபி டேட்டா நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி-யாக (40Kbps) குறைக்கப்படும். புதிய மேக்சிமம் பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. 

    பி.எஸ்.என்.எல். மேக்சிமம் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை முதல் 182 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு 60 பைசா வரை செலுத்த வேண்டும். 



    182-வது நாள் முதல் 365 நாட்கள் வரை அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்திற்கு 60 பைசா செலுத்த வேண்டும். இதே கட்டணம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கும் பொருந்தும். எஸ்.எம்.எஸ். ஒன்றிற்கு 25 பைசாவும், தேசிய எஸ்.எம்.எஸ். அனுப்ப 35 பைசா செலுத்த வேண்டும். 

    பி.எஸ்.என்.எல். உடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 360 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    எனினும் ஜியோ திட்டங்களின் விலை ரூ.4,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜியோ திட்டத்தில் ரூ.4,999க்கு ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு 360 நாட்களுக்கு 350 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ஜியோ வழங்கும் ரூ.9,999 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 360 நாட்களுக்கு 750 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ.999 திட்டத்தில் 90 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை ஜியோபோனில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் வோல்ட்இ வசதி கொண்ட ஃபீச்சர்போனினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்து ஆகஸ்டு மாதத்தில் முன்பதிவை துவங்கியது. ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த ஜியோபோனில் ஜியோ டிவி, ஜியோ மியூசிக் மற்றும் இதர ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. 

    சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்தும் வசதி தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 14) முதல் ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். ஜியோபோனில் வழங்கப்பட்டிருக்கும் முதல் மூன்றாம் தரப்பு செயலியாக ஃபேஸ்புக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஜியோபோனிற்கான ஃபேஸ்புக் செயலி ஜியோவின் கை ஓ.எஸ்.-க்கென (KaiOS) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜியோபோனிலும் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக் அனுபவத்தை பெற முடியும். ஜியோபோனிற்கு ஏற்ப சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டிருப்பதால் விரிவான ஃபேஸ்புக் அனுபவத்தை ஜியோபோன் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது. 



    ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் டிஸ்ப்ளே
    - 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிரசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி, எல்டிஇ. வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி 2.0
    - 2000 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 22 மொழிகளை சப்போர்ட் செய்யும் ஜியோபோனில் வாய்ஸ் கமாண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஜியோபோனின் பல்வேறு அம்சங்களை குரல் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதள பதிப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் யு.பி.ஐ. வழிமுறை சார்ந்த பண பரிமாற்றங்களை செயலியிலேயே மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. 

    முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியில் டெவலப்பர்கள் சோதனை செய்து வந்த அம்சம் படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இயங்கி வரும் 70க்கும் அதிகமான வங்கிகளை வாட்ஸ்அப் சப்போர்ட் செய்கிறது. 

    இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதி கூகுளின் டெஸ் மொபைல் பேமெண்ட்ஸ் சேவைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. கூகுள் டெஸ் மொபைல் பேமெண்ட்ஸ் அம்சம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.   



    குறிப்பு: வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்ய புதிய வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதியை பணம் அனுப்புவோர் மற்றும் பெறுபவரும் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் வாட்ஸ்அப் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும். 

    வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்வது எப்படி?

    - முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- பேமெண்ட்ஸ் ஆப்ஷன் சென்று வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ஐ செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாமல் நேரடியாக பணம் அனுப்ப வேண்டியவரின் காண்டாக்ட் சென்று அட்டாச்மெண்ட் பகுதியில் இருக்கும் பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். (எனினும் இந்த அம்சம் நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட்-ம் பேமெண்ட் வசதி பெற்றிருந்தால் மட்டுமே வேலை செய்யும்)

    - அடுத்து விதிமுறைகளை ஏற்க (அக்செப்ட்) வேண்டும். மொபைல் போன் நம்பரை உறுதி செய்தால் வேலை முடிந்தது. 

    - வாட்ஸ்அப் சப்போர்ட் செய்யும் 70க்கும் அதிகமான வங்கிகளில் உங்களது வங்கி கணக்கை வாட்ஸ்அப்பில் சேர்த்து கொள்ளலாம். யு.பி.ஐ. கணக்கு இல்லாதவர்கள், செக்யூரிட்டி பின் மூலம் யு.பி.ஐ. கணக்கை துவங்கலாம். ஏற்கனவே யு.பி.ஐ. கணக்கு வைத்திருப்போர் எஸ்.எம்.எஸ். (கட்டணங்கள் பொருந்தும்) மூலம் உறுதி செய்தால் போதுமானது. 



    - வாட்ஸ்அப் பயன்படுத்தும் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு இணைக்காதவர்கள், வங்கிகளில் தங்களது வாட்ஸ்அப் மொபைல் நம்பரை இணைத்துக் கொள்ள முடியும். 

    - இனி நீங்கள் பணம் அனுப்ப வேண்டி நபர் மற்றும் பணம் இருக்கும் உங்களது வங்கி கணக்கை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து யு.பி,.ஐ. பின் பதிவு செய்து நொடிகளில் பண பரிமாற்றம் செய்ய முடியும். நீங்கள் அனுப்பிய பணம் உங்களது நண்பருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும்.

    சாட் ஸ்கிரீன் சென்று பணம் அனுப்பியதற்கான பரிமாற்ற விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் பண பரிமாற்றம் செய்ததற்கான குறியீடும் உங்களுக்கு அனுப்பப்படும். இதனை கொண்டு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் இருந்து யு.பி.ஐ. பின் மாற்றுவது, வங்கி கணக்கை அழிப்பது உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட வங்கி கணக்கை தேர்வு செய்து மேற்கொள்ள முடியும். 

    வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதால் வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட்-இன் போன்பெ செயலி மூலம் ரீசார்ஜ் செய்வோர் 50% கேஷ்பேக் பெற முடியும். 

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.250க்குள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ.50 வரை கேஷ்பேக் பெற முடியும். ரூ.250க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. போன்பெ சேவையை கொண்டு முதல் ஐந்து பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் போன்பெ செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தி்ல் தங்களது பி.எஸ்.என்.எல். எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கேஷ்பேக் பெற முடியும். போன்பெ மூலம் வழங்கப்படும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் சலுகை பிப்ரவரி 20-ம் தேதி வரை வழங்கப்படுவதாக போன்பெ தெரிவித்துள்ளது.

    பி.எஸ்.என்.எல். மற்றும் போன்பெ வழங்கும் கேஷ்பேக் சலுகை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வழங்கப்படுகிறது. கேஷ்பேகே தொகையை கொண்டு ரீசார்ஜ், போன்பெ மூலம் இதர கட்டணங்கள் மற்றும் சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். போன்பெ வழங்கும் கேஷ்பேக் தொகையை வங்கி கணக்கில் சேர்க்கவோ அல்லது மற்றவர்கள் வங்கி கணக்கில் சேர்க்க முடியாது. 

    புதிய கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் முழு தொகையையும் போன்பெ செயலி மூலம் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். கேஷ்ப்கே பெற ரீசார்ஜ் செய்ய போன்பெ சேவையை கொண்டு மேற்கொள்ள வேண்டும். போன்பெ வாலெட் மாத அளவு நிறைவுற்றிருந்தால், கேஷ்பேக் தொகை அடுத்த மாதத்தின் முதல் நாளில் போன்பெ கணக்கில் சேர்க்கப்படும்.
    க்ரிப்டோகரென்சி எனப்படும் இணைய கள்ளப்பண சந்தையின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    இணைய கள்ளசந்தையில் பயன்படுத்தப்படும் க்ரிப்டோகரென்சி (கள்ளப்பணம்) மதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வரலாறு காணத வகையில் உயர்வை கண்டது. 

    பிளாக்செயின் தொழில்நுட்பங்களை கொண்டு இணையத்தில் ஈட்டப்படும் க்ரிப்டோகரென்சிக்கள் முறைப்படுத்தப்படாத நிலையில் பிட்காயின் என்ற க்ரிப்டோகரென்சியின் மதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் உச்சத்தை தொட்டது. எனினும் சமீப காலங்களில் இதன் மதிப்பு குறைந்திருக்கிறது.

    வணிக சந்தையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட க்ரிப்டோகரென்சி சந்தையில் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு உள்ளது. 

    ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 1,500 க்ரிப்டோசொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு 55,000 கோடி அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 



    இது 2017-ம் ஆண்டை விட 31 மடங்கு அதிகம் ஆகும். 2017-ம் ஆண்டு நிலவரப்படி பிட்காயின், எதெரியம் மற்றும் எக்ஸ்.ஆர்.பி. போன்ற பிரபல க்ரிப்டோகரென்சிக்களின் தினசரி வர்த்தக மதிப்பு சராசரியாக 14,409 மடங்கு வரை இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    ரிப்பிள் நிறுவன இணை நிறுவனர் க்ரிஸ் லார்சென் 750 முதல் 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களுடன் அதிக க்ரிப்டோகரென்சி வைத்திருப்போர் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். 

    இந்த பட்டியலில் ஜோசப் லூபின் 100 முதல் 500 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள க்ரிப்டோகரென்சிகளை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து சாங்பெங் சௌ 110 முதல் 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களை வைத்திருக்கிறார்.

    கேமரூன் மற்றும் டெய்லர் விங்கில்வோஸ் 90 லட்சம் முதல் 110 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களும், மேத்யூ மெல்லான் 90 லட்சம் முதல் 110 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களுக்கு அதிகபதிகளாக உள்ளனர் என ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.
    சாம்சங் நிறுவன பட்ஜெட் விலை சாதனங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், சாம்சங் அதிரடி திட்டம் வகுத்திருக்கிறது. இதற்கென புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் ஃபிளாக்ஷிப் (விலை உயர்ந்த) ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த கேமரா தொழில்நுட்பத்தை பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இதனை சாத்தியப்படுத்த சாம்சங் நிறுவனம் ISOCELL டூயல் கேமரா தொழில்நுட்பத்தை படிப்படியாக வழங்க முடிவு செய்துள்ளது. மேம்படுத்தப்பட்டசெமி கண்டெக்டர் தொழில்நுட்பத்தில் சாம்சங் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. சாம்சங் ISOCLELL டூயல் இமேஜ் சென்சார் மற்றும் மென்பொருளினை இரண்டு அம்சங்களை வழங்க ஏதுவாக அறிமுகம் செய்துள்ளது.

    அதன் படி சாம்சங்கின் ISOCELL தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் ரீஃபோகசிங் (Bokeh) மற்றும் லோ-லைட் ஷூட்டிங் (LLS) உள்ளிட்டவற்றை பெற முடியும். முன்னதாக டூயல் கேமரா அம்சங்களை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மட்டும் சாம்சங் வழங்கி வந்தது. 



    சாம்சங் நிறுவனத்தின் புதிய ISOCELL தொழில்நுட்பம் மூலம் டூயல் சென்சார் மற்றும் அதற்கேற்ற மென்பொருள்களை பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் வழங்க முடியும் என சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டூயல் கேமரா வழங்கும் பணி நேரம் வெகுவாக குறையும் என சாம்சங் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தொழில்நுட்பத்தில் ரீஃபோகசிங் அம்சத்தை வழங்க 13 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்களையும், லோ-லைட் ஷூட்டிங் அம்சம் வழங்க 8 எம்.பி. சென்சார்களை வழங்க முடிவு செய்திருக்கிறது. ஒரே மாதத்திற்குள் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சார்ந்து சாம்சங் நிறுவனத்தின் இரண்டவாது அறிவிப்பாக இது அமைந்துள்ளது.

    கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் எக்சைனோஸ் 5 சீரிஸ் 7872 பிராசஸரை அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப்செட் பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களில் வழங்க இருக்கிறது. இந்த சிப்செட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் போன்ற செயல்திறனை பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் வழங்கும் என சாம்சங் தெரிவித்திருந்தது.



    சாம்சங் புதிய எக்சைனோஸ் 7872 பிராசஸர் 14 நானோமீட்டர் (nm) ஃபின்ஃபெட் (FinFEt) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இத்துடன் 6-கோர் சி.பி.யு. மற்றும் இரண்டு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ARM A-73 மற்றும் நான்கு 1.6 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் A-53 கோர்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 

    புதிய சிப்செட் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் புதிய தொழில்நுட்பங்கள் 2018 கேலக்ஸி ஏ, கேலக்ஸி சி அல்லது கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்க முக்கிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினம் இன்று உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது செவ்வாய் கிழமை சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

    ஆன்லைன் பரிவர்த்தனைகள் முன்பு இருந்ததை விட அதிக பிரபலமாகி வருவதை தொடர்ந்து ஹேக்கிங், ரேன்சம்வேர், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஊழல், ஏ.டி.எம். உழல் போன்ற சைபர் துறை சார்ந்த குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உலகம் முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிக கவனமுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 



    அந்த வகையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமுடன் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். 

    - இண்டர்நெட் கஃபே, பொது இண்டர்நெட் மையங்கள் மற்றும் பொது வைபை பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

    - முழுமையான ஃபையர்வால் மற்றும் ஆண்டி-வைரஸ் மென்பொருள் பாதுகாப்புடன் வீட்டு கம்ப்யூட்டரில் மட்டும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் அதன் இயங்குதளம், செக்யூரிட்டி பேட்ச் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய வேண்டும். 

    - வங்கி மற்றும் இதர பண பரிவர்த்தனை சேவைகளில் நீங்கள் உருவாக்கும் கடவுச்சொற்களில் (பாஸ்வேர்டு) குறிப்பிட்ட நிறுவனம் பரிந்துரைக்கும் விதிமுறைகளை முறையே பின்பற்ற வேண்டும். கடவுச்சொற்களில் பிறந்த தேதி, திருமண தேதி, உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது.



    - உங்களது மிக முக்கிய தகவல்களை அனுப்பக்கோரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த தகவல்களை மற்றவர்களுடன் எக்காரணம் கொண்டும் பகிர்ந்து கொள்ள கூடாது. இவ்வாறான தகவல்களை கோரும் மின்னஞ்சல் லின்க்களை கிளிக் செய்ய வேண்டாம்.

    - வங்கி மறஅறும் நிதி நிறுவன கடவுச்சொற்களை சமூக வலைத்தளம் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. வங்கி வலைத்தளங்களை பயன்படுத்தும் போது வலைத்தள முகவரியில் https துவங்குவதை உறுதி செய்ய வேண்டும். https என்ற குறியீடு வலைத்தளத்தின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும்.
    மூன்று பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஹூவாயின் அடுத்த P-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகிறது. 

    ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் P20 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவு மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு மூன்று கேமராக்கள் வழங்கும் பட்சத்தில் மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் பெறும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் P11 அல்லது P20 என அழைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாவகே உள்ளது. 


    புகைப்படம்: நன்றி ஃபோர்ப்ஸ்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய P-சீரிஸ் ஸ்மார்ட்போனில் 40 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு, 5X ஹைப்ரிட் சூம், 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இவற்றை லெய்கா தயாரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் 10 ப்ரோவை விட சிறியதாக இருக்கும் என்றும் இதில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை இயக்கும் கிரின் 970 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் முந்தைய ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனினை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் பாயின்ட் கிளவுட் டெப்த் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வகை கேமரா ஆப்பிளின் ட்ரூ டெப்த் கேமரா போன்றதாகும்.
    ×