என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
    X

    50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட்-இன் போன்பெ செயலி மூலம் ரீசார்ஜ் செய்வோர் 50% கேஷ்பேக் பெற முடியும். 

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.250க்குள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ.50 வரை கேஷ்பேக் பெற முடியும். ரூ.250க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. போன்பெ சேவையை கொண்டு முதல் ஐந்து பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் போன்பெ செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தி்ல் தங்களது பி.எஸ்.என்.எல். எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கேஷ்பேக் பெற முடியும். போன்பெ மூலம் வழங்கப்படும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் சலுகை பிப்ரவரி 20-ம் தேதி வரை வழங்கப்படுவதாக போன்பெ தெரிவித்துள்ளது.

    பி.எஸ்.என்.எல். மற்றும் போன்பெ வழங்கும் கேஷ்பேக் சலுகை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வழங்கப்படுகிறது. கேஷ்பேகே தொகையை கொண்டு ரீசார்ஜ், போன்பெ மூலம் இதர கட்டணங்கள் மற்றும் சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். போன்பெ வழங்கும் கேஷ்பேக் தொகையை வங்கி கணக்கில் சேர்க்கவோ அல்லது மற்றவர்கள் வங்கி கணக்கில் சேர்க்க முடியாது. 

    புதிய கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் முழு தொகையையும் போன்பெ செயலி மூலம் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். கேஷ்ப்கே பெற ரீசார்ஜ் செய்ய போன்பெ சேவையை கொண்டு மேற்கொள்ள வேண்டும். போன்பெ வாலெட் மாத அளவு நிறைவுற்றிருந்தால், கேஷ்பேக் தொகை அடுத்த மாதத்தின் முதல் நாளில் போன்பெ கணக்கில் சேர்க்கப்படும்.
    Next Story
    ×